கடைசி காலத்தில் ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள் 65-01-20 காலை வந்தனம், சபையோரே. இப்பொழுது நாம் கர்த்தரிடத்தில் பேசுவோம். மகத்தான தேவனே, வானங்களையும் பூமியையும் படைத்தவரே, நாங்கள் உம்மை இக்காலையில் ஆராதிக்க வேண்டுமென நீர் கருதி இச்சமயத்தை அதற்கென்று தீர்மானித்து வைத்திருக்கின்றீர். எங்களில் பரிசுத்த ஆவியானவர் கிரியை நடப்பிப்பதற்கென எங்கள் இருதயங்களை நாங்கள் முற்றிலுமாக உமது திருச்சித்தத்திற்கு ஒப்புக் கொடுக்கவும், நாங்கள் அறிய வேண்டுமென்று நீர் விரும்பும் காரியங்களை நாங்கள் அறிந்து கொள்ளவும் அருள் புரியும். நாங்கள் உத்தமமான கிறிஸ்தவர்களாக, உமது பிரதிநிதி களாக, இருக்க ஆவல் கொள்கிறோம். உமதண்டை நாங்கள் காத்திருக்கும் இச்சமயத்தில் எங்கள் ஆவலை நிறைவேற்றுவீராக-! இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம் (ஜெபிப்பதற்கான உறுமால்களை எடுக்க வேண்டுமா? என்று ஒருவர் கேட்கிறார் - ஆசி)... ஆம். 2. மகத்தான ராஜாவை ஆராதிப்பதற்கென நாம் மீண்டும் இக்காலையில் கூடி வந்துள்ளது நமக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கின்றது. இங்கு குழுமியுள்ளவர் யாவர்க்கும் போதுமான ஸ்தலம் இல்லாமையால் வருந்துகிறோம். எனினும், தற்போதைய சூழ்நிலையில், எங்களால் இயன்றதை நாங்கள் செய்ய முயன்று வருகின்றோம். 3. இப்பொழுது இங்கு அநேக கைகுட்டைகளும் விண்ணப்பங்களும் ஜெபிப்பதற்கென்று வைக்கப்பட்டுள்ளன. அவைகளை நான் ஒருபுறம் ஒதுக்கி வைக்கிறேன். அதை தவிர்ப்பது என் நோக்கமல்ல. மாறாக, தேவ ஆவியானவரிடத்தில் தெய்வீக சுகத்திற்காக காத்திருந்து ஜெபித்த பின்பு அந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்த கைகுட்டைகளுக்காக நான் ஜெபிக்க விருப்பமாய் உள்ளேன். 4. விசேஷ ஜெப விண்ணப்பங்கள் ஒவ்வொன்றையும் பில்லி என்னிடம் கொடுத்துள்ளான். அவைகள் ஏறத்தாழ 300 என்ற எண்ணிக்கையிலுள்ளன. அவைகளை அறையில் வைத்துள்ளேன். எவ்வளவு துரிதமாக அவைகள் ஒவ்வொன்றையும் பார்க்க முடியுமோ அவ்வளவு துரிதமாக பார்ப்பேன். எல்லாவற்றையும் நான் ஒருவேளை பார்க்க இயலாது. ஒன்றை எடுத்து, "கர்த்தாவே இந்த விண்ணப்பத்தை பார்க்கவா, அல்லது அதுவா?'' என்ற விதமாக அவரிடம் கேட்பேன். ஒவ்வொரு விண்ணப்பங்களும் தேவையான-வைகளும் உண்மையானவைகளாயிருக்கின்றன என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை என்று நாம் அவைகளைக் குறித்து பேசலாம். ஆனால் சில நேரங்களில் பரிசுத்த ஆவியானவர் ஏதோ ஒன்றை குறித்து பேசி அது என் இருதயத்திலிருக்கும். நான், அவர் பேசிய காரியம் அடங்கிய ஜெப விண்ணப்பத்தை கண்டு பிடிக்கும் வரை அதை தேடுவேன். அவ்விதம் இல்லையென்றால் நான் அவைகளை சாதாரணமாக பார்ப்பேன். 5. நியூயார்க் பட்டணம்; டெக்ஸாஸில் உள்ள போமாண்ட்; அரிசோனாவிலுள்ள பிரஸ்காட், டுக்ஸன்; கலிபோர்னியாவிலுள்ள ஸான்ஜோஸ், கனெக்டிகட்; ஜார்ஜியாவிலுள்ள கெயின்ஸ்வில்; இந்தியானாவிலுள்ள நியூ ஆல்பனி என்னும் ஸ்தலங்களிலிருந்து தொலைபேசியின் மூலம் இவ்வாராதனையில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் இக்காலையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல் கூறுகின்றோம். 6. ஜெபர்ஸன்வில் பட்டணத்திலுள்ள இக்கூடாரம் அதன் அளவைக் காட்டிலும் அதிகமான ஜனங்களால் நிரம்பியுள்ளது. இந்தியானாவில் இக்காலை நேரம் ஒரு அருமையான காலையாயிருக்கின்றது. ஏனெனில் நேற்றைய இரவு பெய்த மழையினால் சீதோஷ்ணம் குளிர்ச்சியாயிருக்கின்றது. ஞாயிறு போதனையைக் கேட்க எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தேவ ஆசீர்வாதத்தின் ஐசுவரியம் உங்கள் அனைவர் மேலும் தங்குமென உறுதியாய் நம்புகின்றேன். 7. வெகு விரையில் மீண்டும் நாமெல்லோரும் ஒன்றுகூட ஒரு வழி காணுமென்று நான் நம்புகின்றேன். ஒரு பெரிய கூடாரத்தில் நாம் அப்பொழுது கூடலாம். அக்கூடாரத்தில், வேதத்தில் கூறப்பட்டுள்ள ஏழு கலசங்களைக் குறித்து பிரசங்கம் செய்ய நான் உறுதியாய் ஏவப்படுகின்றேன். 8. இன்று காலை ஒரு முக்கிய போதனை நமக்காக அளிக்கப்பட விருக்கின்றது. இது நமது கடைசி ஆராதனையென நான் அறிந்து, நான் ஜனங்களுக்கு என்ன எடுத்துரைக்க வேண்டுமென்று கர்த்தரிடமிருந்து அறிந்து கொள்ள அவர் சமுகத்தைத் தேடினேன். கர்த்தருடைய வருகை மிக அருகாமையிலுள்ளது. 9. கலிபோர்னியாவில் என்ன நேரிடுமென்பதை நான் அங்கு முன்னறிவித்தேன் அல்லவா? அதன் பின்பு, எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடுகள் அங்கு சிலவிடங்களில் மணிக்கு முப்பது அங்குலம் தண்ணீரில் மூழ்கிக் கொண்டு இருப்பதாக செய்தித்தாள்களின் வாயிலாக அறிகிறேன். வீடுகளில் காணப்படும் மரங்கள் உடைந்து போகின்றனவாம். அதற்குக் காரணம் என்னவென்று அவர்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. நாம் முடிவு காலத்தில் இருக்கின்றோம். கொட்டை எழுத்துக்களில் அச்செய்தியும் அதன் படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தித்தாள் என்னிடம் உள்ளது. இதைக் குறித்து நான் உங்களிடம் இன்று பேச எத்தனித்துள்ளதால், இச்செய்தியை உங்களுக்கு அறிவிக்க எண்ணினேன். 10. இன்றிரவு நமக்கு, வியாதியஸ்தருக்காக ஜெபம் உண்டு. இன்றிரவு மாலை 5 அல்லது 6 மணிக்கு இங்கு வாருங்கள். நாம் சீக்கிரமாக துவங்க இருக்கிறோம். அப்பொழுது ஜனங்கள் துரிதமாக வந்து ஜெப அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். 11. உங்களிடம் என்ன பேச வேண்டுமென்று ஜெப சிந்தையுடன் தியானம் செய்து கொண்டிருந்த போது (ஏனெனில் நான் உங்களிடம் ஏதாகிலும் தவறாகக் கூறினால், தேவனிடத்தில் கணக்கு ஓப்புவிக்க வேண்டும்). தீர்க்க தரிசனத்தைக் குறித்து இன்று காலை நான் உங்களிடம் பேசவேண்டுமென்று பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டேன். வரப்போகும் நிகழ்ச்சிகளைக் குறித்து ஜனங்களை எச்சரிக்க வேண்டுமெனும் நோக்கத்துடன் பரிசுத்த ஆவியானவர் தீர்க்கதரிசனம் என்பதை நமக்கு அருளியிருக்கிறார். நிகழும் சில காரியங்களை குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். அத்தகைய சம்பவங்களின் வருகைகளைக் குறித்து எச்சரிக்க பரிசுத்த ஆவியானவர் அவைகளை நமக்குத் தருகிறார். உங்களுக்குத் தெரியுமா? தேவன் தீர்க்கதரிசிகளாகிய தம் ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப் படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார் என்று வேதம் உரைக்கின்றது. வருங் காலத்தில் என்ன நிகழவிருக்கின்றது என்பதை இயேசுவும், தீர்க்கதரிசிகளும் மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை எச்சரித்தது உங்களுக்கு நினைவிருக்கும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் என்ன என்றும், இக்காலத்தில் என்ன நிகழும் என்பதையும் நாம் அறியவேண்டிய அவசியமுண்டு. ஆகவே நாம் அநேக சமயங்களில் படித்திருக்கிற வினோதமான பொருள்களில் ஒன்றை குறித்து உங்களிடம் பேச என் இருதயத்தில் ஏவப்படுகிறேன். 12. இப்பொழுது மத்தேயு 24-ம் அதிகாரத்திற்கு நம்முடைய வேதாகமங்களை திருப்பி அதிலிருந்து வார்த்தையின் ஒரு பாகத்தை வாசித்து நமது பொருளுக்குரிய தொடர்ச்சியை அதிலிருந்து எடுப்போமாக. 13. ஞாபகம் கொள்ளுங்கள். நாம் இதை ஒரு வேத பாடம் போன்று மெதுவாக படிக்கப் போகின்றோம். அநேக வசனங்களை நான் இங்கு குறித்து வைத்து உள்ளேன். அவைகளை நீங்கள் குறித்துக் கொள்ள உங்கள் தாள்களையும் எழுது கோல்களையும் ஆயத்தமாக்குங்கள். உங்கள் வீடுகளுக்கு சென்ற பின்பு அவைகளை ஆராய்ந்து நாம் வாழ்கின்ற இந்த மணி நேரத்தில் எச்சரிப்பைப் பெற்று ஆயத்தமாகுங்கள். 14. மத்தேயு எழுதிய சுவிசேஷம் 24-ம் அதிகாரம் 15-ம் வசனத்தில் இருந்து அவருடைய வசனங்களின் ஒரு பகுதியை படிக்க நான் விரும்புகிறேன். (மத்தேயு 24-ம் அதிகாரம்15-லிருந்து 28-ம் வசனம் வரை ). ''மேலும் பாழாக்கும் அருவருப்பைக் குறித்து தானியேல் தீர்க்க தரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும் போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப் போகக்கடவர்கள். வீட்டின் மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்ப தற்கு இறங்காதிருக்கக்கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திர ங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன். அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது ஓய்வு நாளிலாவது சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள். ஏனெனில், உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராத தும், இனிமேல் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவன் ஆகிலும் தப்பிப் போவதில்லை. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும். அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார். அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களை-யும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால்; அதோ வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களா னால் புறப்படாதிருங்கள். இதோ, அறை வீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக் கிறது போல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்” மத்தேயு 24:15-28 15. இன்று காலைக்குரிய ஞாயிறு பள்ளி போதனைக்காக 24-ம் வசனத்தை மறுபடியும் வலியுறுத்த விரும்புகிறேன். 'ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்க-தாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.'' மத்தேயு 24:24 16. இந்த வேத வாக்கியத்திலிருந்து நான் பேச விரும்பும் பொருளின் தலைப்பு ''கடைசி காலத்தில் ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள்'' என்பதாம். 17. நாம் கடைசி காலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதே நம்பிக்கையாகும். வேதாகமம் படிப்பவர்களும், விசுவாசிகளில் பெரும்பான்மையோரும், இனி உலக வரலாறு எழுதிப்பயனில்லை என்பதை நன்கு அறிவர். ஏனெனில் அதை படிப்பதற்கு யாரும் இருக்கப் போவதில்லை. இது எப்பொழுது சம்ப விக்கும் என்றும் இது எவ்வளவு காலம் நீடித்திருக்கும் என்றும் எனக்குத் தெரியாது. ஏன், அந்த நிமிடத்தையும் நேரத்தையும் பரலோகத்திலுள்ள தூதர்களும் கூட அறியமாட்டார்கள். ஆனால் இப்பொழுது நாம் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கும் காரியங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கும் போது, நமது மீட்பு சமீபமாயுள்ளதை அறிந்து நாம் தலைகளை உயர்த்த வேண்டுமென கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறியுள்ளார். 18. 'சமீபமாயிருக்கிறது' (nigh) என்னும் சொல் எதைக் குறிக்கிறது என்பது எனக்குத் தெரியாது. விஞ்ஞானிகள் அன்று கூறினது போன்று - அதாவது பூமியில் ஆயிரக்கணக்கான மைல்கள் நீளத்தில் பிளவுகள் ஏற்பட்டுள்ளது என்றும், பூமி தண்ணீரில் மூழ்கப் போகிறது என்றும் கூறினார்களே. ஒருக்கால் அதுவாயிருக்கலாம். லாஸ்-ஏஞ்சலீஸ் பட்டணம் எப்பொழுது தண்ணீருக்குள் மூழ்கும் என்னும் கேள்வி அந்த விஞ்ஞானியிடம் கேட்கப்பட்ட போது, அவர் “ஐந்து நிமிடங்கள் அது மூழ்கி விடலாம், அல்லது ஐந்து ஆண்டுகள் கூட பிடிக்கலாம்'' என்று பதிலுரைத்தார். ரேடார் (Radar) என்னும் கருவியின் மூலம் பூமியில் ஏற்பட்டுள்ள பிளவை அவர்கள் எங்ஙனம் தொடர்ந்து சென்றனர் என்று உங்களில் அநேகர் தொலை காட்சியில் கண்டீர்கள். அது கடற்கரை வழியாகச் சென்று, சான்-ஜோஸ் (San Jose) என்னும் ஸ்தலத்தின் கீழ் சென்று, தாண்டி அலஸ்காவை அடைந்து, அலூசியன் தீவுகளைக் (Alutian Islands) கடந்து, 200-மைல்கள் கடலுக்குள் சென்று, சான்டியாகோவை (San Diego) அடைந்து, லாஸ்-ஏஞ்சலிஸ் பின்னால் சென்றது. இங்கு ஏற்படும் நிலவதிர்ச்சிகள் யாவும் இந்த குழிவு ஸ்தலத்தில் ஏற்படும் எரிமலை குமுறல்களினால் உண்டானவையாம். அதற்கு ஏதோ ஒரு பெயmf உண்டு. அங்கு அசைவு உண்டாவதால், நாம் அநேக ஆண்டுகளாக மேற்கு கடற்கரையில் கண்டு கொண்டு வரும் நிலவதிர்ச்சிகள் உண்டாகின்றனவாம். இப்பொழுது பூமியானது எல்லா திசைகளிலும் பிளவுபட்டுள்ளது. 19. நிருபர் ஒருவர், ஒரு விஞ்ஞானியிடம், "பூமி ஒருக்கால் விழுங்கப்படலாம் அல்லவா?'' என்று கேட்டாராம். அதற்கு அந்த விஞ்ஞானி "விழுங்கப்படலாம் என்றல்ல. நிச்சயமாக விழுங்கப்படும்'' என்று பதிலுரைத்தாராம். ''நம் சந்ததியில் இது நிகழ வாய்ப்பில்லை அல்லவா?'' என நிருபர் கேட்க, விஞ்ஞானி, அப்படியல்ல, இன்னும் ஐந்து நிமிடங்களுக்குள் இது நிகழலாம். அல்லது இன்னும் ஐந்து ஆண்டுகள் கூட செல்லலாம். அது எப்பொழுது நிகழும் என்று குறிப்பாகச் சொல்ல முடியாது'' என்றாராம். 20. எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடுகள் பிளவுபட்டு நொறுங்கி, ஜனங்கள் அவ்விடம் விட்டு ஓடுகின்றனர் என்னும் செய்தி இவ்வாரச் செய்தித் தாள்களின் தலைப்பில் கொட்டை எழுத்துக்களில் வெளி வந்தது. அதை தடுத்து நிறுத்தும் வழியை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. அதை தடுத்து நிறுத்த எவ்வித வழியுமில்லை. 21. தேவன் தாம் விரும்பின எதையும் செய்வார். அதை எப்படி செய்ய வேண்டுமென்று அவருக்கு ஆலோசனை கூற யாருமே இல்லை. நீங்கள் ஒருக்கால் வீடுகள் கட்டலாம், விஞ்ஞான ரீதியில் செயல் புரியலாம். ஆனால் தேவனோ விஞ்ஞானத்தை படைத்தவர், அவரை நீங்கள் எவ்வாறு தடுத்து நிறுத்த முடியும். அவர் விரும்பினால், இன்று காலை வண்டுகளைக் கொண்டு பூமியை அவரால் நிர்மூலமாக்க முடியும். 'வண்டுகள் உண்டாகக் கடவது' என்று அவர் கட்டளையிட்டால், அரைமணி நேரத்தில் நாற்பது மைல் உயரத்திற்கு வண்டுகள் தோன்றி, எங்கும் பரவி, இப்பூமியில் வாழும் மனிதர்களைக் கொன்று போடும் என்பதை நீங்கள் அறிவீர்களா? அவர் தேவனாயிருக்கிறார். அவர் சர்வ அதிகாரமும் கொண்டவர், எனவே அவர் விருப்பப்படி அவரால் செய்ய இயலும். 22. இப்பொழுது நமக்கு எல்லா சாட்சியங்களும் தொகுத்து கிடைக்கப் பெற்று உள்ளதால், இவைகளை நாம் மறுபடியும் நினைப் பூட்டி, அவைகளைக் குறித்த சத்தியத்தை அறிந்து கொள்ளுதல் அவசியம். ஏனெனில் முத்திரைகள் திறக்கப்பட்டு விட்டன. தேவன் கிருபையாக இவை அனைத்தையும் நமக்கு சிறப்பாக வெளிப்படுத்தி கொடுத்திருக்கிறார். 23. மத்தேயு.24:2ல் இயேசு கிறிஸ்துக்கள்' என்னும் சொல்லை உபயோகித்து உள்ளதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். அவர் கிறிஸ்து என்று, ஒருமையில் கூறாமல், 'கிறிஸ்துக்கள்' என்று பன்மையில் கூறினார். 'கிறிஸ்து' என்பதற்கு அபிஷேகம் பெற்றுள்ளவன் என்று பொருள். அப்படியானால், இங்கு அபிஷேகம் பெற்றவர் ஒருவரல்ல, அநேகர்; வேறு விதமாகக் கூறினால் 'கடைசி காலத்தில் கள்ள அபிஷேகம் பெற்றோர் அநேகர் எழும்புவர்' என்பதையே இயேசு இங்கு குறிப்பிடுகின்றார். 24. அதற்கு அடுத்து வரும் சொல்லும், 'கள்ளத் தீர்க்கதரிசிகள்' என்று பன்மையில் கூறப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். அல்லது நாம் அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு விவரித்துக் கூற விரும்பியிருப்பார் என்றால் 'கடைசி நாட்களில் கள்ள அபிஷேகம் பெற்றவர்கள் எழும்புவார்கள்” என அவர் கூறி இருக்கக்கூடும். ஆனால் 'அபிஷேகிக்கப்பட்டவர்கள்” என்ற வார்த்தையை பார்க்கும் போது அது ஏறத்தாழ முடியாத காரியமாக காணப்பட்டாலும். 25. 'அபிஷேகம் பெற்றவன்' என அழைக்கப்படுபவன் செய்தியைக் கொண்டுள்ள ஒருவனாகும். செய்தி அறிவிக்கப்பட வேண்டுமானால் அது அபிஷேகம் பெற்ற ஒருவனால் தான் முடியும். அத்தகையோன் ஒரு தீர்க்கதரிசி. அப்படி ஆனால் கடைசி காலத்தில் கள்ள அபிஷேகம் பெற்று உள்ள போதகர்கள் அநேகர் எழும்புவார்கள் என அர்த்தமாகின்றது (ஏனெனில் தீர்க்கதரிசி என்பவன், தான் கொண்டுள்ள செய்தியைப் போதிப்பவன்). அதாவது, இவர்கள் கள்ளப் போதகங்களைக் கொண்ட அபிஷேகம் பெற்றவர்கள்.... 'கிறிஸ்துக்கள்' (பன்மை ), 'தீர்க்கதரிசிகள்' (பன்மை ). 'கிறிஸ்து என ஒருமையில் அழைக்கப்படுவர் ஒருவர் உண்டு. அவர் தான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து. ஆனால் இவர்களோ (கிறிஸ்துக்கள்) தங்கள் சொந்த போதனைகளைப் போதிக்கும் அபிஷேகம் பெற்றவர்கள். அபிஷேகம் பெற்றவராகிய கிறிஸ்துவினின்று இவர்கள் வேறுபட்டவர்கள். ஏனெனில் இவர்கள் கள்ளக் கிறிஸ்துக்கள். அபிஷேகம் பெற்றவர்கள். ஆனால் கள்ளத் தீர்க்கதரிசிகள். 26. இப்பொழுது இது ஒரு ஞாயிறு பள்ளி பாடமாயிருக்கின்றது. நாம் இங்கு வசனங்களின் மூலம் ஒரு பலப்பரீட்சைக்கு இதை கொண்டு வர முயற்சிக் கிறோம். யாரோ ஒருவர் கூறியதின் பேரில் அல்ல, மாறாக வேத வசனங்-களை வாசிப்பதின் மூலம் இதை பலப்பரீட்சைக்குக் கொண்டு வருவோம். 27. நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழை பொழிகின்றது என்று இயேசு கூறியிருக்கிறார். ''... அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார்'' (மத்தேயு 5:4) 28. ''இத்தகைய கள்ளத் தீர்க்கதரிசிகளின் மேல் தங்கியுள்ள அபிஷேகம் பரிசுத்தாவியின் அபிஷேகம் என்று நீங்கள் நம்புகின்றீர்களா? என்று உங்களில் சிலர் கேட்கக்கூடும். ஆம் ஐயா, உண்மையான தேவனுடைய பரிசுத்தாவி தான் அவர்கள் மேல் தங்கியுள்ளது. எனினும் அவர்கள் கள்ளத் தீர்க்கதரிசிகள். 29. வேதம் அதைப் பற்றி என்ன கூறுகிறது என்பதை இப்பொழுது நீங்கள் படித்தீர்கள். இச்சத்தியத்தை வலியுறுத்த நான் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளப் போகின்றேன். ஏனெனில் உங்களைத் திகைக்க வைக்கும் ஒரு கருத்தை நான் உங்களுக்கு அறிவிக்கப் போகின்றேன். ''ஒரு கள்ளப் போதகனை பரிசுத்த ஆவியானவர் எங்ஙனம் அபிஷேகிக்கக்கூடும்?'' என்று நீங்கள் வியப்புறலாம். அவ்வாறே இருக்கும் என்று இயேசு கூறியிருக்கிறார். மழை தீயோர் மேலும் நல்லோர் மேலும் பெய்கின்றது. அந்த வேத வாக்கியத்தைப் படித்து அவர் என்ன கூறுகின்றார் என்பதைக் கவனியுங்கள். அவர்கள் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்து கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள். அவர்கள் உண்மையான பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள். இது மூடத்தனமாகத் தென்படலாம். ஆனால் நாம் நிதானமாக, தேவனுடைய வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு இதனை விவரிக்க முயல்வோம். நான் உங்களிடம் கூறுவது “கர்த்தர் உரைக்கிறதாவது”. அது முற்றிலும் உண்மை . 30. உங்கள் வேதாகமத்தை மத்தேயு.5:44-க்குத் திருப்புங்கள். ''நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக் காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப் பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார்.'' மத்தேயு 5:44-45 31. பவுல் எபிரெயருக்கு இதை எழுதி, நிழல்களையும் மாதிரிகளையும் அவர்களுக்கு எடுத்துக் காட்டி, இனி மேல் நிகழப் போகும் சம்பவங்களுக்கு ஏற்கனவே நிகழ்ந்தவை மாதிரியாக உள்ளன என்பதைக் காண்பித்து, அவர்களை யூத மார்க்கத்தினின்று கிறிஸ்தவ மார்க்கத்திற்குத் திருப்பினான். உங்களுடைய கவனத்தை சற்று அழைக்க விரும்புகிறேன். 4-ம் வசனத்தில் "பரம ஈவு'' என்று தான் இருக்கின்றது. ''பரம ஈவுகள்” என்றல்ல என்பதை கவனியுங்கள். பரம ஈவு என்பது ஒருமையிலும் ''கிறிஸ்து”-வும் “ஈவும்'' ஒருமையில் உள்ளதை கவனிக்கவும். ''ஆகையால் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன் பேரில் வைக்கும் விசுவாசம். ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல் மரித்தோரின் உயிர்த்தெழுதல் நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைக- ளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும் படி கடந்து போவோமாக. தேவனுக்கு சித்தமானால் இப்படியே செய்வோம். ஏனெனில் ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமாவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனி வரும் உலகத்தின் பெலன்களை ருசி பார்த்தும், சிலவற்றை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். முதலாம் வசனத்தில் 'மூல உபதேசம்' என்பதும், நான்காம் வசனத்தில் 'ஈவு' என்பதும் ஒருமையில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக்கவனிக்கவும்- கிறிஸ்து (ஒருமை) 'ஈவு' (ஒருமை ) மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதலுக்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம் எப்படியெனில், தன் மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாத்தாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது. சுட்டெரிக்கப் படுவதே அதன் முடிவு.'' எபி.61-8 32. இதனை மத்தேயு.4:45 உடன் ஒப்பிடவும். சூரிய வெளிச்சத்தையும் மழையையும் தேவன் பூமிக்கு அனுப்பி, இங்கு வாழும் மக்களுக்கு அவர் ஆகாரத்தை உற்பத்தி செய்து தருவதாக இயேசு கூறினார். ஆனால் கோதுமை வயலில் காணப்படும். களைகளும் பூண்டுகளும் இதே சூரிய வெளிச்சத்தை-யும் மழையையும் அனுப்விக்கின்றனர். கோதுமையை விளையச் செய்யும் அதே மழை புற்பூண்டுகளையும் விளையச் செய்கின்றது. 33. பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்திலுள்ள ஒரு சிலரை நான் முதன் முறையாகச் சந்தித்தபோது, இதைக் குறித்த ஒரு பாடத்தை தேவன் எனக்குக் கற்பித்தார். அதற்கு முன்பு, அந்நிய பாஷை பேசப்படுவதை நான் கேட்டதே இல்லை. நான் சென்றிருந்த அந்த இடத்தில் ஒருவர் அந்நிய பாஷை பேசினார். மற்றொருவர் அதன் அர்த்தத்தை விவரித்தார். "இங்கு குழுமியுள்ள அநேகர் மனந்திரும்ப வேண்டும்'' என்று அவர்கள் கூற அநேக பெண்களும் ஆண்களும் எழுந்து பீடத்தினருகில் சென்றனர். ''எவ்வளவு மகிமையாயுள்ளது இது” என்று நான் எண்ணினேன். 34. பின்னர் பரிசுத்த ஆவியின் ஓர் சிறிய வரத்தின் மூலம் இவர்கள் இருவரிடம் நான் உரையாடிக் கொண்டிருந்த போது, அவர்களில் ஒருவர் உத்தமமான கிறிஸ்தவரும் கிறிஸ்துவுடன் உத்தமமான தாசனுமாவார் என்றும், மற்றவர் மாய்மாலக்காரன் என்றும், அவர் கறுப்பு மயிர் கொண்ட ஒரு பெண்மணியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்று, அதே சமயத்தில் சிவப்பு மயிருள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு அவள் மூலம் அவருக்குக் குழந்தைகள் இருந்தன என்பது, எனக்கு அளிக்கப்பட்டுள்ள பரிசுத்த ஆவியானவரின் ஈவாகிய ஆவியைப் பகுத்தறிதலின் வரம் என்பதன் மூலம் புலனானது. அதை நான் அங்கு தரிசனத்தில் கண்டேன். அதை யாரும் மறுக்க முடியாது. அதைக் குறித்து நான் அவரிடம் வினவின போது, அவர் என்னை முறைத்து பார்த்து விட்டு, அவ்விடம் விட்டு நகர்ந்து சென்று விட்டார். 35. இது என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. நான் தேவ தூதர்களின் மத்தியில் இருப்பதாக எண்ணியிருந்தேன். ஆனால் இத் தரிசனத்தை நான் கண்ட பின்பு, பேய்களின் மத்தியில் இருக்கின்றேனோ என ஐயங் கொண்டேன். இது எப்படி முடியும்? இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதை குறித்து ஆழ்ந்த சிந்தனை செய்யாமல், அநேக ஆண்டுகளாக அப்படியே விட்டு விட்டேன். ஆனால் ஒரு நாள் நான் அந்தப் பழமையான ஆலையின் ஸ்தலத்தில் ஜெபிக்கச் சென்ற போது, பரிசுத்தாவியானவர் இவ்வசனங்களை என் நினைவுக்குக் கொண்டு வந்தார். ''எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள் செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது. சுட்டெரிக்கப் படுவதே அதின் முடிவு.'' எபி.6:7-8 இவ்விரண்டும் தேவனால் அளிக்கப் பெற்ற ஜீவனைக் கொடுக்கும் பொருட்களைக் கொண்டு வளர்ந்தன. அப்பொழுது நான் அதன் அர்த்தத்தை அறிந்து கொண்டேன். ஆதலால் அவர்களுடைய கனிகளினாலே அறிவீர்கள்” (மத்.7:20) என்று இயேசு கூறியுள்ளார். 36. பூமியிலுள்ள தாவரங்களின் மேல் பொழியும் மழை, சபையின் மேல் பொழிந்து, நித்திய ஜீவனை அளிக்கும் ஆவிக்குரிய மழைக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. சபையின் மேல் பொழியும் தேவனுடைய ஆவியை நாம் 'முன்மாரி', 'பின்மாரி' யென்று இரு வகையாகப் பிரிக்கலாம். 37. கவனியுங்கள், இங்கு வினோதத்தை, வித்துக்கள் பூமியினடியில் சென்ற போது, தொடக்கத்தில் முள் வித்தாக இருந்தது மாத்திரமே முட்களைத் தோன்றச் செய்தது. அவ்வாறே கோதுமை மணி நிலத்தடியில் சென்று மறுபடியும் கோதுமை மணிகளைத் தோன்றச் செய்தது. ஆகவே, ஒவ்வொரு இனமும் தன் தன் ஒவ்வொரு இனத்தைப் பிறப்பித்து, அது தொடக்கத்தில் என்னவாயிருந்தது என்பதைத் தெளிவுபடுத்தினது. 38. ஆம், கூடுமானால் அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்-பார்கள். ஏனெனில் அவர்களும் அதே மழையை அதே ஆசீர்வாதங்களை அனுபவித்து, அதே அற்புதங்களையும் அடையாளங்களையும் நிகழ்த்துகின்-றனர். கூடுமானால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களை வஞ்சிப்பார்கள். ஒரு முள் எப்பொழுதும் முள்ளாகவே இருக்குமே அன்றி வேறெதாகிலும் இருக்க முடியாது. அது போன்று கோதுமை எப்பொழுதும் கோதுமை மணியாகவே இருக்கும். அது என்னதாக இருக்கவேண்டுமென்று சிருஷ்டி கர்த்தர் ஆதியில் தீர்மானித்தபடியே அது இருக்கின்றது. 39. சூரியன் காலையில் உதித்து, அதன் கதிர்கள் பூமியெங்கும் பரவுகின்றன. காலையில் கிழக்கில் தோன்றும் அதே சூரியன் தான் மாலையில் மேற்கில் மறைகின்றது. நிலங்களில் விளையும் தானியங்களை முதிர்வடையச் செய்ய சூரியன் அனுப்பப்பட்டுள்ளது. இத் தானியங்களை நாம் உண்பதால் நம் சரீரங்கள் வளர்கின்றன. 40. ஒரு பொருள் சாவதன் மூலமே நாம் உயிர் வாழ முடியும். நாம் ஆகாரம் உண்பதால் உயிர் வாழ்கின்றோம். அதற்கென இவ்வுலகில் ஏதாவதொன்று சாக வேண்டும். இயற்கையில் உயிர் வாழ ஒரு பொருள் சாவதின் மேல் நான் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்குமானால், ஆவிக்குரிய விதத்தில் நாம் உயிர் வாழ ஏதாவதொன்று ஆவிக்குரிய விதத்தில் மரிக்க வேண்டியது அவசியமல்லவா? எனவே தேவன் மாமிசத்தில் வெளிப்பட்டு, நாம் வாழ வேண்டுமென்பதற்காக அவர் மரித்தார். எந்த ஒரு சபையும் அல்லது உலகிலுள்ள வேறொன்றும் உங்களை இரட்சிக்க முடியாது. தேவன் ஒருவர் மாத்திரமே உங்களுக்கு இரட்சிப்பை அருள முடியும். அதன் காரணமாகவே நாம் பிழைத்திருக்கின்றோம். 41. வேத வாக்கியங்களை நினைவு கூருங்கள். இயேசு வார்த்தையாய் இருக்கிறார் என்று வேதம் கூறுகின்றது. "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத் திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது'' யோவான் 1:1 ''அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார்'' யோவான் 1:4 “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயில் இருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்'' மத்தேயு 4:4 அப்படியானால் நாம் வார்த்தையினால் பிழைக்கிறோம் என்பதைக் கவனியுங்கள். வார்த்தை என்பது தேவனாகும். 42. சூரிய வெளிச்சம் பூமியின் மேல் படரும் போது, அது தானியங்களை முதிர்வடையச் செய்கின்றது. தானியம் உடனே முதிர்ந்த பருவத்தை அடைவதில்லை. அது சிறிது சிறிதாக முதிர்வடைந்து, முடிவில் முழு வளர்ச்சி அடைகின்றது. சபையும் அவ்வாறே வளர்ச்சியடைந்தது. அது சிறு குழந்தையாகத் தோன்றி, இருள் காலங்களில் (Dark Ages) பூமிக்கடியில் மறைந்து கிடந்து, இப்பொழுது பூரண வளர்ச்சி பெற்றுள்ளது. 43. தேவன் இயற்கையின் மூலம் வெளிப்படுகின்றார் என்பதை நாம் நன்கு அறியவேண்டும். நீங்கள் இயற்கையை குலைத்துப் போடக் கூடாது. ஆனால் அது தான் தற்பொழுது நடந்து வருகின்றது. கடல்களில் நாம் அணுகுண்டு-களைப் போட்டு அவைகளை நாசப்படுத்துகின்றோம். மரங்களை நீங்கள் வெட்டி வீழ்த்தினால், புயல் காற்று அடித்து உங்களைத் தூக்கிச் சென்று விடும். நதிகளுக்கு அணை கட்டினால், அவை வழிந்தோடும். தேவன் அவைகளை எவ்வாறு படைத்துள்ளாரோ, அப்படியே விட்டுவிட வேண்டும். நான் ஜனங்களை ஸ்தாபனங்களுக்குள் வைத்து விட்டோம். அதனால் என்ன நேர்ந்துள்ளது என்பதைக் கவனியுங்கள். தேவன் நிர்ணயித்த வழியிலே நிலைத்திருங்கள். 44. மறுபடியும் நம் பொருளுக்கு வருவோம். இது தான் கடைசி காலத்தின் அடையாளமாயிருக்குமென்று இயேசு மத்தேயு 24-ம் அதிகாரத்தில் கூறி உள்ளார். இவ்வடையாளம் கடைசி காலத்தில் அறியப்பட வேண்டுமானால், முத்திரைகள் திறக்கப்பட்ட பின்னரே அது நேரிட வேண்டும். அப்பொழுது தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் குழப்பமடைய மாட்டார்கள். பரத்திலிருந்து வரும் ஒரே அபிஷேகத்தைக் கொண்டு கோதுமையும் களையும் வாழும் என்னும் உண்மை இப்பொழுது வெளிப்பட அவசியமாயுள்ளது. 45. அவ்வபிஷேகம் பெற்றுள்ளதால் இருவரும் மகிழ்ச்சி அடைகின்றனர். பழமையான ஆலையின் ஸ்தலத்தில் நான் கண்ட தரிசனத்தில், ஒரு பெரிய பூமியைக் கண்டேன். அது முழுவதும் உழுது காணப்பட்டது. முதலில், விதைக்கிறவன் ஒருவன் புறப்பட்டுச் சென்றான். இதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். முதலாவதாக யார் சென்றது என்பதையும் அவனைத் தொடர்ந்து சென்றவன் யார் என்பதையும் கவனிக்கவும். வெண் உடை அணிந்திருந்த இம்மனிதனின் பூமியெங்கும் சென்று விதை விதைத்தான். அவனுக்குப் பின்னால் கறுப்பு உடை அணிந்தவன் ஒருவன் புறப்பட்டுச் சென்றான். முதலாவது சென்றவன் பின்னால் இவன் தந்திரமாகப் பதுங்கி, களைகளை விதைத்து சென்றான். பின்னர் இரு பயிர்களும் வளர்ந்து வருவதைக் கண்டேன். ஒன்று கோதுமை பயிர், மற்றொன்று களைகள், வறட்சி ஆரம்பமானது. அப்பொழுது கோதுமை பயிர், களைகள் இவ்விரண்டும் தலை வணங்கி, மழை வேண்டுமென அழுதன. ஒரு பெரிய மேகம் தென்பட்டு, மழை பெய்யத் தொடங்கினது. அப்பொழுது கோதுமை பயிர் தலையையுயர்த்தி, "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம் '' என்று ஆரவாரம் செய்தது. இவ்விரண்டும் ஒரே மழையினால் நன்மை பெறுகின்றன. ஒரே நிலத்தில், ஒரே ஸ்தலத்தில், ஒரே தோட்டத்தில் கோதுமையும் களைகளும் வளர்கின்றன. கோதுமையை விளையச் செய்யும் அதே தண்ணீர் களைகளையும் விளையச் செய்கின்றது. 46. திருச்சபையை அபிஷேகம் செய்து, ஆத்துமாக்களை இரட்சிக்க, வேண்டும் எனும் ஆவலை அவர்களுக்கு அளித்து, அற்புதங்களை நிகழ்த்தும் வல்லமை- யைக் கொடுத்த அதே பரிசுத்தாவியானவர், நீதியுள்ளவர்கள் மேல் பொழிந்தது போன்று அநீதியுள்ளவர்கள் மேல் பொழிகின்றார். இல்லையெனில் மத்தேயு-24:24ல் கூறப்பட்டுள்ளதை நீங்கள் வேறெந்த விதத்திலும் அர்த்தம் கொள்ள முடியாது. கள்ளக் கிறிஸ்துக்கள் - அதாவது கள்ள அபிஷேகம் பெற்றவர்கள் தோன்றுவார்களென்று அவ்வசனம் எடுத்து உரைக்கின்றது. அவர்கள் உண்மையான பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பெற்றும், கள்ளத் தீர்க்கதரிசிகளாகவும் கள்ளப் போதகராகவும் இருப்பார்கள். ஒருவன் கள்ளப் போதகனாக இருக்க, அவனை சத்தியத்தினின்று திருப்புவது எது, மிருகத்தின் முத்திரையைக் குறித்து சற்று ஆராய்ந்து பார்த்தால், ஸ்தாபனங்கள் தாம் அவ்விதம் செய்கின்றன என்பது புலனாகும். அவர்கள் அபிஷேகம் பெற்ற கிறிஸ்துக்கள், ஆனால் கள்ளப் போதகர்கள். இவ்விதம் தான் நாம் அதை அர்த்தம் கொள்ள முடியும். 47. அரிசோனாவிலுள்ள என் நண்பர் எலுமிச்சை வகை மரங்களை அவர் பண்ணையில் வளர்க்கிறார். அவருடன் நான் சில நாட்களுக்கு முன் அளவளாவிக் கொண்டிருந்தேன். அப்பண்ணையில் ஒரு ஆரஞ்சு மரம் இருந்தது. ஆனால் அந்த மரமோ திராட்சை, எலுமிச்சை இன்னும் அநேக வகை பழங்களையும் ஈன்றது. இப்பழங்கள் அனைத்தும் ஒரே மரத்தில் காணப்பட்டன. ''இது எத்தகைய மரம்?'' என்று நான் அவரிடம் கேட்டேன். அவர், ''இது உண்மையாகவே ஆரஞ்சுமரம் தான்” என்றார். “அப்படியானால் திராட்சை பழங்களும், எலுமிச்சை பழங்களும் இம்மரத்தில் காணப்படுகின்றனவே!” என்றேன் நான். அதற்கு அவர், “இவை அனைத்தும் அம்மரத்தில் ஒட்டு போடப்பட்டவை” என்று பதில் கூறினார். "அடுத்த ஆண்டு பழம் ஈனும் காலம் தோன்றும் போது இம்மரம் ஆரஞ்சு பழங்களை மாத்திரமே கொடுக்குமா?'' என்று கேட்டேன். அவர், ''இல்லை ஐயா. அதில் ஒட்டுப் போடப்பட்டுள்ள ஒவ்வொரு கிளையும் அதனதன் கனிகளைத் தரும்'' என்றார் "அப்படியானால் ஆரஞ்சு மரத்தில் ஒட்டு போடப்பட்டுள்ள எலுமிச்சை கிளை எலுமிச்சை பழங்களை மாத்திரமே கொடுக்கும் என்றா கூறுகின்றீர்கள்?'' என்றேன். அவர், ''ஆம் ஐயா, ஆரஞ்சு மரத்தில் ஒட்டு போடப்பட்டுள்ள அக்கிளையின் தன்மை அதுவே'' என்றார். திராட்சைக்கிளை திராட்சைப் பழத்தை ஆரஞ்சு மரத்தில் கொண்டு வருமா என்றேன். அவர், 'ஆம் ஐயா அது தான் அந்த கிளையின் தன்மை. அது ஆரஞ்சு மரத்தில் ஒட்ட வைக்கப்பட்டுள்ளது'' என்றார். அப்பொழுது நான், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!'' என்றேன். மேலும் நான் அவரிடம், "ஐயா, இன்னும் ஒரே ஒரு கேள்வி. இந்த ஆரஞ்சு மரம் இனி எப்பொழுதாவது ஆரஞ்சு பழங்களைக் கொடுக்குமா?'' என்று கேட்டேன். அதற்கு அவர், "அம்மரத்தில் வேறொரு கிளை முளைக்கும் போது, அதில் ஆரஞ்சு பழங்கள் உண்டாகும்” என்று விடையளித்தார். அது வேறொரு கிளையை முளைப்பிக்கும் போது- அதில் ஒட்டு போடப்பட்ட-வையல்ல. ஒட்டுப் போடப்பட்ட கிளைகள் எலுமிச்சை வகைகளைச் சார்ந்தவை. ஆயினும் ஆரஞ்சு மரத்தின் சத்தைக் கொண்டு, இவை தங்களுக்கே உரிய பிரத்தியேக கனிகளை ஈனுகின்றன. 48. உடனே நான், "எனக்குப் புரிந்துவிட்டது” என்றேன். மெதோடிஸ்டுகள் ஒவ்வொரு முறையும் மெதோடிஸ்டுகளையும், பாப்டிஸ்டுகள் பாப்டிஸ்டு-களையும், கத்தோலிக்கர்கள் கத்தோலிக்கர்களையும் தோன்றச் செய்கின்றனர். ஆனால் ஜீவனுள்ள தேவனின் சபையோ கிறிஸ்துவை அதன் வேர்களினின்று தோன்றச் செய்யும் அது தன் சொந்த கிளையை முளைப்பிக்கும் போது, ஒவ்வொரு முறையும் அது வார்த்தையாகவே இருக்கும். 49. திராட்சை பழம், எலுமிச்சம் பழம் போன்ற எலுமிச்சை வகை பழங்கள் அந்த ஆரஞ்சு மரத்தில் வாழமுடியும். ஆனால் அவை அம்மரத்தைக் குறித்த தவறான சாட்சியளிக்கின்றன. உங்களுக்குப் புரிகின்றதா? அம்மரத்தின் ஜீவனை அல்லது சத்தைக் கொண்டு அவை செழித்து வளர்கின்றன. இங்கு தான் மத்தேயு-24:24-ஐ நாம் அறிந்து கொள்ளலாம். அந்த ஜீவனைக் கொண்டு அவை வளர்ந்தாலும், ஆரம்பத்திலேயே அவை சரிவர இல்லை. அம்மரத்தைக் குறித்து அவை தவறான சாட்சியளிக்கின்றன. அது ஒரு ஆரஞ்சுமரம் அது எலுமிச்சை வகையைச் சார்ந்தது. “இந்த ஸ்தாபனம் இயேசு கிறிஸ்துவைக் குறித்து சாட்சியளிக்கின்றது” என்று கூறுகின்றனர். ஆனால் அவர்கள் தவறான ஞானஸ்நான முறைமைகளைக் கைக்கொள்கின்றனர். தேவனுடைய வல்லமை, இயேசு கிறிஸ்துவின் சீஷர்களுக்கே உரியது என்று அவர்கள் தவறான பிரச்சாரங்களைச் செய்கின்றனர். இயேசு தாமே, ''நீங்கள் உலகமெங்கும் போய் சகல கிளைகளுக்கும் இம்மரத்தில் இயற்கையாகத் தோன்றும் கிளைகளுக்கும்- சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். அந்த உண்மையான கிளைகளால் நடக்கும் அடையாளங்களாவன'' என்று உரைத்துள்ளார். எவ்வளவு காலம் இவ்வற்புத-ங்கள் நீடிக்கும்? அம்மரத்தில் கிளைகள் தோன்றும் வரைக்கும் - அதாவது உலகத்தின் முடிவு பரியந்தம். ''பின்பு, அவர் அவர்களை நோக்கி நீங்கள் உலமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப் படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப் படுவான். விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷை களைப் பேசுவார்கள். சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்த மாவார்கள் என்றார். மாற்கு 16:15-18 நாம் வாழும் காலத்தை கவனியுங்கள். 50. இயேசு என்ன கூறினார் என்பதைப் பார்த்தீர்களா? இது கடைசி காலத்தில் நிகழும்- வெஸ்லியின் காலத்திலல்ல- கடைசி காலத்தில். வேத வசனங்களைக் கூர்ந்து கவனியுங்கள். அவை சாட்சி பகரட்டும். "வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் நித்திய ஜீவன் உண்டென்று அறிவீர்களே (அல்லது விசுவாசிக்கின்றீர்களே), என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே'' என்று இயேசு கூறி இருக்கிறார், வேறு வகையில் கூறினால் - அந்த மரம் வேறொரு கிளையை முளைப்பிக்குமானால்.... "நானே திராட்சைச் செடி (மரம்), நீங்கள் கொடிகள்” யோவான் 15:5 ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்'' (யோவான் 14:12) 51. அதாவது, “தொடக்கத்தில் என் வேரில் இருந்தவன்” ஆகையால் தான் இயேசு தாவீதின் வேரும் சந்ததியுமாயிருந்தார். அவர் தாவீதுக்கு முன்பு இருந்தார், தாவீதுக்குள் இருந்தார், தாவீதுக்குப் பிறகும் இருந்தார். அவர் காலை விடிவெள்ளி, சாரோனின் ரோஜா, பள்ளத்தாக்கின் லீலிப் புஷ்பம், அல்பா, ஒமேகா, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. ''ஏனென்றால் தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகார மாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. கொலோ.2:9 "தெரிந்து கொள்ளப்பட்ட ஜீவன் முன் குறிக்கப்பட்ட ஜீவன், ஆதிமுதல் என்னிலிருக்கிறவன் (அவர் தான் வார்த்தை), அப்படிப்பட்டவன் வெளிப்படும் போது, என் கனிகளைக் கொடுப்பான்'' என்று இயேசு கூறுகின்றார் (யோவான் 14:12). ஆனால் மற்றவர்கள், அதே ஜீவனைக் கொண்டு வாழ்ந்து, தங்களைக் கிறிஸ்தவர்களென்றும், விசுவாசிகளென்றும் அழைத்துக் கொள்வார்கள். பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி; கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை'' மத்தேயு 7:21 இந்த காரியம் கடைசி நாளில் வெளிப்பட்டு நிகழ வேண்டும். "தேவ ரகசியங்கள் நிறைவேறும் போது” இதை சற்று பின்பு நாம் கவனிப்போம். 52. உண்மையான திராட்சைச் செடியும், கள்ள திராட்சைச் செடியும் எவ்வாறு ஒன்றாக வளர்ந்து கொண்டு வருகின்றன என்பதைக் குறித்து நான் அநேக ஆண்டுகளாக பிரசங்கம் செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள். தனிப்பட்ட நபருக்கு இது எவ்வாறு பொருந்தும் என்றும் நான் விவரித்திருக்கிறேன். உதாரணமாக காயீன், ஆபேல் என்னும் இருவகை திராட்சை செடிகள் பீடத்- தடியினில் சந்தித்தனர். இருவரும் பக்தியுள்ளவர்கள். இருவரும் அபிஷேகம் பெற்றவர்கள். இருவருக்கும் ஜீவனைக் குறித்த ஆவல் இருந்தது. இருவரும் ஒரே தேவனை வணங்கினர். ஆயினும், ஒருவன் நிராகரிக்கப்பட்டான், மற்றவன் ஏற்றுக்கொள்ளப்பட்டான். ஏற்றுக் கொள்ளப்பட்டவன் நிராகரிக்கப் பட்ட தன் சகோதரனைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்ட ஒரு செயல் புரிந்தான். அதற்குக் காரணம் அது அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. வேதம் இவ்வாறு கூறுகின்றது. விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியைத் தேவனுக்குச் செலுத்தினான். அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சி கொடுத்தார். அவன் மரித்தும் இன்னும் பேசுகின்றான்.'' எபி.11:4 ஆபேல் நீதிமானென்று தேவனே சாட்சி பகர்ந்தார். இயேசு இந்த கேள்வியை சீஷர்களிடம் கேட்ட போது, அவர் ஆவிக்குரிய வெளிப்பாட்டைக் குறித்து பேசினார். ''... மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள், சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்; நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக; நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி; யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்த-வில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன்; நீ பேதுருவாய் இருக்கி றாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்...'' மத்தேயு 16:13-18. கல் என்பது எதைக் குறிக்கின்றது? அது தான் அவர் யாரென்று அறிந்து கொள்ளும் உண்மையான வெளிப்பாடாகும்; அவர் வார்த்தை - மறுபடியும் உண்மையான திராட்சை செடிக்கு வருதல். 53. "விசுவாசத்தினாலே ஆபேல்...'' அது வெளிப்பாட்டின் மூலம் அல்லவா? விசுவாசத்தினால் அல்லவா?'' என்று கேட்கலாம். விசுவாசம் என்பது என்ன? அது உங்களுக்கு வெளிப்படும் ஒன்றாகும். இதுவரை அது நிகழவில்லை, ஆனால் அது நிகழும் என்று நீங்கள் உறுதியாக நம்புகின்றீர்கள். விசுவாசம் என்பது தேவனுடைய சித்தம் உங்களுக்கு வெளிப்படுத்தலாகும். 54. ஆவிக்குரிய வெளிப்பாட்டை இன்றைய ஸ்தாபனங்கள் நம்புவதே கிடையாது. அவர்கள் பாரம்பரிய போதனை முறைமைகளில் நம்பிக்கை கொண்டு உள்ளனர். வெளிப்பாட்டின் மூலமே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியைச் செலுத்தினான். அதனால் அவன் நீதிமானென்று தேவனே சாட்சி கொடுத்தார். ஆமென்! இதை நீங்கள் புரிந்து கொண்டீர்களென்று நம்புகிறேன். நாம் எந்த நேரத்தில் வாழ்ந்து வருகிறோம் என்பதை உங்களால் காண முடிகிறதா? சில நாட்கள் முன்னர் ஒரு கிறிஸ்தவ பண்டிதருடன் பேசிக் கொண்டு இருந்தேன். அவர் என்னிடம், ''நாங்கள் எல்லா வெளிப்பாடுகளையும் மறுக்கிறோம்'' என்றார். 55. "அப்படியானால் நீங்கள் இயேசு கிறிஸ்துவையும் மறுக்கின்றீர்கள் என்று அர்த்தமாகிறது. ஏனெனில் அவர் மாமிசத்தில் தோன்றின தேவனுடைய வெளிப்பாடாகும்'' என்று நான் பதிலுரைத்தேன். இயேசு மானிட ரூபத்தில் தோன்றிய தேவனுடைய ஆவியானவரின் வெளிப்படுதல் என்பதை நீங்கள் விசுவாசியாமற் போனால், உங்களுக்கு விமோசனமில்லை. நீங்கள் அவரை தேவனென்று விசுவாசியாமல், அவரை 'மூன்றாவது ஆளாகவோ இரண்டாவது ஆளாகவோ அல்லது 'வேறு எவ்வித ஆளாகவோ கருதினால் உங்களுக்கு விமோசனமில்லை. "... நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்.'' யோவான் 8:24 56. இது வெளிப்பாட்டின் மூலம் அறியப்பட வேண்டும். வெளிப்பாடு இல்லாதவர்கள் அவர் யாரென்பதை அறிந்து கொள்ளாமல் இருப்பதில் வியப்பு ஓன்றுமில்லை. ''என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளா விட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன். எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்க தரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவின் இடத்தில் கேட்டுக் கற்றுக் கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.'' யோவான் 6:44-45 ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும்.... (வேர்களில் உள்ளவர் அனைவரும்)... என்னிடத்தில் வரும்.'' யோவான் 6:37 நாம் அவரில் அன்புகூர்ந்து, அவரை ஆராதித்து, அவரை துதிக்க வேண்டும். இக்கடைசி காலத்திலுள்ள மணவாட்டி மரத்தில் தோன்றியுள்ள ஆவியின் கனி இப்பொழுது மரத்தின் மேல் பாகத்தில் பழுத்துக் கொண்டு வருகின்றது. 57. உண்மையான திராட்சை செடி, கள்ளத் திராட்சை செடி இவ்விரண்டும் ஒரே அபிஷேகத்தைப் பெற்றுள்ளன. இவ்விரு செடிகளின் மேலும் மழை விழுந்தது. கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்கும் என்று இயேசு எச்சரிக்கை விடுத்ததில் வியப்பொன்றுமில்லை. 58. காண்பதற்கு அவை இரண்டும் ஒரே மாதிரியுள்ளன. அவை ஒரே அபிஷேகத்தைப் பெற்றுள்ளன. ஆனால் அவைகளின் கனிகளினாலே அவைகளின் தன்மைகளை அறிந்து கொள்ளலாம். அந்தக் கிளை ஆரஞ்சு மரத்தில் தோன்றியதல்ல என்பது எப்படி உங்களுக்குத் தெரியும்? ஏனெனில் அது திராட்சை பழங்களை ஈனுகின்றது. அந்த திராட்சை கிளைக்கு எந்தத் தவறுமில்லை. அது திராட்சை பழங்களை அளிக்கின்றது. ஆனால் அது அம்மரத்தின் மூலக்கிளையைப் போன்றில்லை. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று ஒரு ஸ்தாபனம் விசுவாசிக்கக் கூடும்; எனினும் அது அவருடைய வல்லமையையும், அவருடைய கிரியைகளையும், அவருடைய வார்த்தைக-ளையும் மறுதலிக்கக்கூடும். ஆனால் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் உண்மையான சபை, இயேசு கிறிஸ்து செய்த கிரியைகளையே தானும் செய்யும். இயேசு கிறிஸ்துவின் ஜீவனை அது பெற்றிருக்கும். சபைக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் எவ்வித வித்தியாசமும் இராது. வேரிலிருந்து முன் குறிக்கப்படாத எந்த ஒரு சபையும், அதனுள் இயேசுகிறிஸ்துவின் ஜீவன் ஊற்றப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் அது திராட்சை பழங்களையே கொடுக்கும். ஆனால் வேரில் காணப்படும் அதே முன் குறிக்கப்பட்ட ஜீவன் அதற்குள் இருந்தால், நேற்றும், இன்றும் என்றும் மாறாத இயேசு கிறிஸ்துவை (எபி.13:8) அது கொடுக்கும். வேரின் மூலம் வார்த்தை மேல் நோக்கி வருகின்றது. வார்த்தையாகிய அவர் தான் காலத்தின் தொடக்கமாகிய வேராகும். 59. "அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்று இயேசு கூறினார். அவர்களில் என்ன கனிகள் தோன்றுகின்றனவோ, அவைகளின் மூலம் வித்தியாசத்தை அறிந்து கொள்ளலாம். முட்செடி, திராட்சை செடியின் நடுவில் காணப்பட்டாலும், அந்த முட்செடியிலிருந்து திராட்சை பழங்களைப் பறிக்க முடியாது. அதன் கனியிலிருந்து அச்செடியின் தன்மையை அறிந்து கொள்ளலாம். கனி என்பது என்ன? கனி என்பது வார்த்தையாகும். அதனதன் காலத்தில் தோன்றும் கனி; அதனதன் காலத்தில் அளிக்கப்படும் செய்தி. அதன் மூலம் அது எந்த காலம் என்பது புலனாகின்றது. மனிதனின் போதனை, ஸ்தாபனத்தின் போதனை அல்லது அந்த காலத்தில் அளிக்கப்படும் செய்தி- இவைகளில் எதை தெரிந்து கொள்வீர்கள்? இதைக் குறித்து அதிக நேரம் பிரசங்கித்துக் கொண்டே இருக்கலாம். நான் வலியுறுத்த விரும்புவதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். 60. அபிஷேகமானது தீயோர் மேலும் கள்ளப் போதகர்கள் மேலும் தங்கி உள்ளது. எனினும், செய்யக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டுள்ளதை அவர்கள் செய்து வருகின்றனர். அதை செய்யாமலிருக்க அவர்களால் முடியாது. ஏனெனில் ஒரு முட்செடி, எவ்வளவு மழை அதன் மேல் பெய்தாலும் முட்செடியாகவே இருக்குமேயன்றி வேறு விதமாக இருக்க முடியாது. ஆகவே தான் இயேசுவும், கூடுமானால் வேரில் காணப்படும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் கூட வஞ்சிக்கப்படும் அளவிற்கு அது அவ்வளவு தத்ரூபமாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆனால் தெரிந்து கொள்ளப்பட்ட--வர்கள் வஞ்சிக்கப்பட முடியாது. ஏனெனில் கோதுமை பயிர் கோதுமை மணிகளை மாத்திரம் தருமேயன்றி வேறொன்றும் செய்யமுடியாது. 61. ஸ்தாபனங்களுக்கு மூல கர்த்தா தேவனல்ல என்பதை நினைவில் கொள்ளவும். பிசாசு தான் ஸ்தாபனங்களைத் தோன்றச் செய்தவன். இயேசு கிறிஸ்துவின் கடைசி அப்போஸ்தலன் மரித்து நூறு ஆண்டுகள் கழிந்து பின்னரே முதன் முறையாக ஸ்தாபனம் தோன்றியது. ஸ்தாபனங்கள் எப்பொழுதும் தோல்வியையே கண்டு உள்ளன. இல்லையெனில், மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், கத்தோலிக்கர்கள் அனைவரும் ஒருவரிலொருவர் அன்பு கூராததன் காரணம் என்ன? வார்த்தையில் இவர்கள் நிலைத்திருக்கின்றார்கள் என்று நீங்கள் கூறினால், பின்னை ஏன் தேவனுடைய வல்லமையுள்ள கிரியைகள் அவர்களிடையே காணப்படவில்லை? முன்பைவிட இப்பொழுது தான் ஸ்தாபனங்கள் தேவனை விட்டு அதிக தூரம் சென்றுள்ளன. 62. பழைய ஏற்பாட்டின் சம்பவங்கள் அனைத்துமே நமக்கு திருஷ்டாந்தங்-களாகவும், உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருந்தலுக்கும் அளிக்கப்பட்டுள்ளன என்று நாம் கற்பிக்கப்பட்டுள்ளோம். நமது காலமாகிய புதிய ஏற்பாட்டின் காலத்தில் நிகழப் போவதன் நிழலாக பழைய ஏற்பாட்டின் சம்பவங்கள் அமைந்துள்ளன. உதாரணமாக, உங்கள் கையை நீங்கள் இதுவரை கண்டதில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு விளக்கின் முன் வைக்கும்போது, அதன் நிழல் சுவரின் மேல் விழுகின்றது. கையின் உருவமைப்பு என்னவென்பதை அந்நிழல் காண்பிக்கும். உங்கள் கையை நிழலின் அருகாமையில் கொண்டு வந்தால், கையில் ஐந்து விரல்கள் உள்ளன என்பது தெளிவாகும். எனவே, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாட்டின் காலத்தில் நிகழவிருப்பவைகளுக்கு நிழலாக - மாதிரியாக - அமைந்துள்ளது என்று வேதம் கூறுகின்றது. 63. இப்பொழுது நாம் விவரித்துக் கொண்டு வரும் கருத்து வேறெந்த வேதாகமக் காலத்தில் காணப்பட்டதா என்பதை நாம் வேத வாக்கியங்கள் மூலம் நிரூபிக்க முற்படுவோம். நமக்கு மனிதனின் கருத்தோ அல்லது கொள்கையோ வேண்டாம். அவன் எவ்வளவு பெரியவனாயிருப்பினும் சரி, அது நானாகவே இருந்தாலும் சரி, எந்த ஒரு மனிதனின் கருத்தும் நமக்கு அவசியமில்லை. “வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும். (ஒருவன்) இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை'' (ஏசாயா 8:20). "தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.'' ரோமர் 3:4 64. இப்பொழுது நாம் சற்று பின்நோக்கி சென்று இது எப்பொழுதாவது நிகழ்ந்திருக்கின்றதா என்று பார்த்து அதை உதாரணமாக கொள்வோம். நீங்கள் யாத்திராகமம் புஸ்தகத்திற்கு வேதத்தைத் திருப்புங்கள். அங்கு மோசே என்னும் ஒரு பாத்திரத்தை நாம் காணலாம். அவன் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டு, தேவனுடைய வார்த்தையுடனும், அவருடைய சித்தத்துடனும் அந்த சந்ததிக்கென்று தேவனால் அனுப்பப்பட்டவன். தேவனுடைய வசனத்-தின் சத்தியம் இங்கு ஊர்ஜிதமாகின்றது. ஏனெனில் தேவனுடைய வார்த்தை எப்பொழுதும் தொடர்ச்சியாக அமைந்திருக்கிறது. அவர், ''தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்,'' என்று ஆமோஸ்.3:7-ல் குறிப்பிட்டுள்ளார். அவர் தமது வார்த்தையை இங்கு நிறைவேற்றினார். அவர் தேவனாயிருந்து பொய் சொல்ல முடியாது. அவர் எப்பொழுதும் உண்மையாகவே இருக்க வேண்டும். அவர் கூறிய ஏதொன்றையும் அவரால் மாற்ற முடியாது. அப்படிச் செய்தால் அவர் தேவனல்ல. அவர் முடிவு இல்லாதவர். ஆகவே, அவர் ஒரு தவறும் செய்ய இயலாது. தேவன் கூறிய எதுவும் நித்திய நித்திய காலமாய் உண்மையாயிருக்கும். அவர் அங்ஙனம் வாக்குத்தத்தம் செய்துள்ளார். 65. ஆபிரகாமின் சந்ததியார் அன்னிய தேசத்தில் 400 ஆண்டுகள் சஞ்சரிப்பார்கள் என்றும், அதன் பின்னர் அவர் பலத்த கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும், அவர்கள் வாழ்ந்து வந்த மக்களிடையே அடையாளங்களையும் அற்புதங்-களையும் நிகழ்த்தி அவர்களை விடுவிப்பாரென்றும் தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் செய்திருந்தார். அவருடைய வாக்குத்தத்தம் நிறைவேறும் சமயம் நெருங்கின போது, இஸ்ரவேல் ஜனங்கள் அந்த வாக்குத்தத்தத்தைக் குறித்து மறந்தே போய் விட்டனர். அவர்களுக்கென்று பரிசேயர்களும் சதுசேயர்களும் உண்டாகி இருந்தனர். ஸ்தாபனங்களும் உண்டாயிருந்தன. ஆனால் திடீரென்று தேவன் இக்குழுக்களின் வெளிப்புறத்தில் தோன்றினார். தேவன் ஒருக்காலும் எந்த ஒரு தீர்க்கதரிசியையும் ஸ்தாபனங்களிலிருந்து அழைத்ததேயில்லை. ஏன் எனில் ஸ்தாபனங்களைச் சார்ந்தவன் அவைகளின் போதகங்களால் குழப்பம் உற்றவனாய், ஒரு தீர்க்கதரிசி செய்ய வேண்டியவைகளை சரிவர செய்ய முடியாது. எனவே அவன் ஸ்தாபனத்தில்தான் நிலைத்திருக்க வேண்டும். 66. தேவனுடைய வார்த்தையைக் கொண்டவனாய் தேவனால் அனுப்பப்பட்ட மோசே, தேவனுடைய கட்டளைக்கு இணங்கி இஸ்ரவேல் ஜனங்களுடன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கிப் பிரயாணம் செய்தான். அப்பொழுது வழியில் அவன் வேறொரு தீர்க்கதரிசியை சந்தித்தான். இவனும் மோசே பெற்றிருந்த அதே பரிசுத்தாவியினால் அபிஷேகம் செய்யப்பட்டு இருந்தான். அவன் பெயர் பிலேயாம். 2800 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்து அவன் உரைத்த தீர்க்கதரிசனம் இன்றைக்கும் நிறைவேறி வருகின்றது. ''யாக்கோபே, உன் கூடாரங்களும் இஸ்ரவேலே (உன் வல்லமையும் நீதியும்) உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள், காண்டாமிருகத்துக்கொத்த பெலன் உனக்கு உண்டு... ''உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கக்கப்பட்டவன், உங்களை சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன்'' எண்.24:5,8,9 67. அவன் இஸ்ரவேலரின் கூடாரங்களை நோக்கி, அவர்களைத் தன் இருதயத்தில் சபிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டான். ஓ கள்ளப் போதகர்களே, இத்தனை ஆண்டு காலமாக நீங்கள் செய்திகள் அடங்கிய ஒலி நாடாக்களைக் கேட்டு வருகின்றீர்கள். எதையெல்லாம் செய்வதாக தேவன் வாக்குத்தத்தம் செய்திருந்தாரோ, அவை அத்தனையும் அவர் நிறைவேற்றி வருவதை நீங்கள் கண்கூடாகக் கண்டும் வருகின்றீர்கள். இதுவே சத்தியம் என்று நீங்கள் அறிந்திருந்தும், ஸ்தாபன வேறுபாடுகளின் காரணமாக, அளிக்கப்பட்ட செய்தியைக் குறித்து வாக்குவாதம் செய்து, அது தவறென்று உங்கள் சபையோரிடம் கூறுகின்றீர்கள். உங்களுக்கு ஐயோ! உங்கள் காலம் நெருங்கிவிட்டது. மோசே பெற்றிருந்த அதே அபிஷேகத்தை பிலேயாம் பெற்றிருந்தான். அப்படியானால் அவர்களிடையே காணப்பட்ட வேறுபாடு என்ன? அவர்கள் போதகமே. மோசேயின் போதகம் சத்தியமுள்ளதாய் இருந்தது. ஆனால் பிலேயாமின் போதகத்தை இஸ்ரவேலர் ஏற்றுக் கொண்டமையால், தேவன் அவர்களை ஒரு போதும் மன்னிக்கவில்லை என்று 2.பேதுரு-2.ம் அதிகாரம் உரைக்கின்றது. அது மன்னிக்கத்தகாத பாவமாயிருந்தது. தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெற்றவர்களாய் அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டார்கள், தேவனுடைய வல்ல கரம் மகத்தான தீர்க்கதரிசியாகிய மோசேயின் மூலம் கிரியை செய்வதை அவர்கள் கண்டிருந்த போதிலும், அவர்களில் ஒருவரும் இரட்சிக்கப்படவில்லை. 68. பிலேயாம், அங்கு தோன்றி, மோசேயுடன் தர்க்கம் செய்து, அவன் போதித்தவைகளுக்கு மாறானவைகளைப் போதித்து, மோசே கூறுவது தவறு என்று இஸ்ரவேலரிடையே நிரூபிக்க முற்பட்டான். மோசேயின் மேலிருந்த அதே ஆவியினால் பிலேயாமும் அபிஷேகிக்கப்பட்டிருந்தான். ஆனால் அங்கு காணப்பட்ட வித்தியாசம் என்ன? மோசேயின் போதகம் பரிபூரணமாயிருந்தது. பிலேயாமின் போதகத்தை இஸ்ரவேலர் பெற்றுக் கொண்டனர் என்று வேதம் 2ம்-பேதுரு-2:15.ம் வசனம் கூறுகின்றது. அதை தேவன் ஒரு போதும் அவர்களுக்கு மன்னிக்கவில்லை. அது மன்னிக்கப்படக் கூடாத பாவமாய் இருந்தது! இஸ்ரவேலர் இந்த வல்லமையுள்ள தீர்க்கதரிசியின் மூலம் பலத்த தேவனுடைய கரத்தின் அசைவையும் நிரூபித்தலையும் கண்டு, தேவ ஆசீர்வாதத்தின் கீழ் அவர்கள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அவர்களில் ஒருவராகிலும் இரட்சிக்கப்படவில்லை. 'கோராகு, தாத்தான் போன்ற அநேகர் பிலேயாமுடன் இணங்கி, இஸ்ரவேல் ஜனங்களை விபச்சாரம் செய்யவும், பிலேயாமின் ஸ்தாபனத்தைச் சேரவும் தூண்டினர். மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே இவை எதுவாய் இருந்தால் என்ன இந்த இரண்டுக்கும் வித்தியாசம் எதுவுமில்லை என்று அவர்கள் இஸ்ரவேலருக்குப் போதித்தனர். 69. ஆனால் நாம் எல்லாரும் ஒன்றல்ல. நாம் பிரித்தெடுக்கப்பட்டவர்கள். கர்த்தருக்கு என்று நாம் பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுடைய ஆவிக்கும் அவருடைய வார்த்தைக்கும் நம்மை அர்ப்பணித்தவர்களாய், இக்காலத்துக்கு உரிய தேவனுடைய வாக்குத்தத்தத்தின் கனியை நாம் தருகிறவர்களாய் இருக்கிறோம். நாம் அவர்களில் ஒருவரல்ல, அவர்களை விட்டு வெளியே வாருங்கள். இது மிகவும் கடினமான ஒரு உபதேசம் என்று அறிவேன். ஆனால் அது முற்றிலும் உண்மை . 70. “பிலேயாமின் போதகம்'' பிலேயாமின் தீர்க்கதரிசனம் என்ற விதமாக இல்லை. அது உண்மை. அது தேவனாக இருந்தது. அது எத்தனை பேர் விசுவாசிக்கின்றனர்? (சபையார் ''ஆமென்” என்று கூறுகின்றனர்) பிலேயாமின் தீர்க்கதரிசனம் சரியாக இருந்தது. ஏனெனில் அதைத் தவிர அவனால் வேறொன்றையும் பேச முடியாது. தேவனுடைய அபிஷேகம் அதைத் தவிர வேறொன்றையும் பேச முடியாது. ஏனெனில் தேவன் தாமே அதை நிரூபித்து அது உண்மையென்று விளங்கப் பண்ணியிருக்கிறார். 71. இதை மத்தேயு-24:24 உடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்கள் அபிஷேகம் பெற்றவர்களே. ஆனாலும் அவர்கள் போதகங்கள் - திரித்துவம் போன்ற போதனைகள் தவறாகும். அது முற்றிலும் தவறு. அது அந்திக் கிறிஸ்துவின் போதகம். உங்கள் மனது புண்பட வேண்டாம், உங்கள் தொலைபேசி இணைப்புகளை துண்டித்து விடவேண்டாம். எழுந்து போய் விடாதீர்கள். அமைதியாக அமர்ந்து இருந்து, நான் கூறுவது சரி என்று பரிசுத்த ஆவியானவர் நிரூபிக்கின்றாரா இல்லையா என்று பாருங்கள். உங்கள் இருதயங்களைத் திறக்கும்படி தேவனிடம் மன்றாடுங்கள். நீங்கள் முட்செடியா இல்லையா என்பதைக் கண்டு கொள்வீர்கள். 72. கேட்டின் மகனாக யூதாஸ் பிறந்தானென்று வேதம் உரைக்கின்றது. ஆனால் இயேசுவோ தேவகுமாரனாய் பிறந்தார். இயேசு யூதாஸிடம், "நீ தான் அவன், நீ செய்ய வேண்டியதை சீக்கிரம் செய்'' என்றார். அவன் என்ன செய்யப் போகிறான் என்று இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். 30-வெள்ளிக்காசுக்கும், புகழுக்காகவும் அவன் இயேசு கிறிஸ்துவை விற்றுப் போட்டான். யூதாஸ் இயேசுவின் சீஷர்களின் ஒருவன். அவன் சபையின் பொக்கிஷதாரி. இயேசு அவனை 'சிநேகிதன்' என்று அழைத்தார். கூடுமானால் அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். 73. வேறொரு உதாரணம் 1-இராஜாக்கள் 22.ம் அதிகாரத்தில் காணப்படுகின்றது. மிகாயா என்னும் பெயர் கொண்ட தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான். அவன் இல்லாவின் குமாரன். அவனைத் தவிர தீர்க்கதரிசிகள் அடங்கிய ஸ்தாபனத்தின் தலைவனாக வேறொரு தீர்க்கதரிசி அப்பொழுது இருந்தான். அவர்கள் அனைவரையும் தீர்க்கதரிசிகள் என்றே வேதம் அழைக்கின்றது. பிலேயாமையும் கூட அப்படித் தான் அது அழைக்கின்றது. மிகாயா தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டு, தேவனுடைய வார்த்தையைக் கொண்டவனாய் தேவனால் அனுப்பப்பட்டவன். சிதேக்கியா என்னும் வேறு ஓரு தீர்க்கதரிசி, தான் தேவனால் அனுப்பப்பட்டதாக எண்ணிக் கொண்டு இருந்தான். அவன் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவனாய் இருந்தாலும் அவனுடைய போதனைகள் தேவனுடைய வார்த்தைக்கு முரண்பட்டவைக-ளாய் அமைந்திருந்தன. "கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள்'' 74. கவனியுங்கள், இருவரும் தேவனுடைய அபிஷேகத்தைப் பெற்றிருந்தனர். அப்படியானால் யார் கூறுவது சரி, யார் கூறுவது தவறு என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியும். தேவனுடைய வார்த்தை ஆகாபைக் குறித்து என்ன கூறுகின்றது என்பதைக் கவனிக்கவும். எலியா என்பவன் இதற்கு முன்பு தோன்றின தீர்க்கதரிசி. இவன் அவன் காலத்தில் அடையாளங்களினாலும் அற்புதங்கள்னாலும் தேவனால் உறுதிப் படுத்தப்பட்ட மகத்தான தீர்க்கதரிசியாக விளங்கினான். நாபோத் என்பவனைக் கொலை செய்து, அவன் நிலத்தைப் பறித்துக் கொண்ட கொடுமையான செயலை ஆகாப் செய்ததால், அவன் இரத்தத்தை நாய்கள் நக்கும்; அவன் மனைவியான யேசேபேலின் சரீரத்தை நாய்கள் தின்னுமென்றும், நிலங் களுக்கு அவள் சரீரம் உரமாகுமென்றும் எலியா தீர்க்கதரிசனம் உரைத்து இருந்தான். தேவன் சபித்தவனை நீங்கள் எங்ஙனம் ஆசீர்வதிக்க முடியும்? அல்லது பிலேயாம் கூறினது போன்று, தேவன் ஆசீர்வதித்தவர்களை நீங்கள் எங்ஙனம் சபிக்க முடியும்? சிதேக்கியாவின் தலைமையில் இருந்த தீர்க்கதரிசிகள் அனைவரும் உண்மை உள்ளவர்கள். அவர்கள் நல்லவர்கள், மதிப்பிற்குரியவர்கள். ஏனெனில் இஸ்ரவேல் நாட்டில் ஒருவர் தீர்க்கதரிசியாக இருக்க வேண்டுமானால், அல்லது ஒரு சாதாரண இஸ்ரவேலனாக இருக்க வேண்டுமானாலும் சரி, அவர்கள் மதிப்பிற்குரியவர்களாய் இருத்தல் அவசியம். இல்லை எனில் அவர்கள் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள். அத்தீர்க்கதரிசிகள் புத்தி கூர்மையும், கல்வியறிவும் படைத்தவர்களுமாயிருந்தனர். அவர்கள் ஆகாப் அரசனால் தெரிந்து கொள்ளப்பட்டு, அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஸ்தானத்தை விளக்கத் தகுதி பெற்றவராயிருந்தனர். (இதை பார்க்க முடிகிறதா? சகோதரி ரைட் அவர்களே). 75. மிகாயா தரிசனம் கண்டு, தேவனுடைய வார்த்தை ஆகாபைக் குறித்து என்ன கூறியிருந்தது என்பதை மிகாயா அறிந்திருந்தான். அவனுக்குள் இருந்த தேவ ஆவியானவர் என்ன கூறுகிறார் என்பதை அவன் அறிய விரும்பினான். மிகாயாவிடம் அனுப்பப்பட்டவர்கள் அவனிடம் இவ்வாறு கூறியிருப்பார்கள். ''நீ ஒரு தீர்க்கதரிசி என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் நீ எப்பொழுதும் ஆகாபைச் சபித்துக்கொண்டே இருக்கிறாய். எங்கள் தீர்க்கதரிசிகள் கூறினதை நீயும் கூறினால், உன்னை எங்கள் ஐக்கியத்தில், ஸ்தாபனத்தில் சேர்த்துக் கொள்வோம். எங்கள் தலைவரான, போப் சிதேக்கியா ஆகாபை ஆசீர்வதித்து, அவர் விரும்புவதைச் செய்யக் கூறியுள்ளார். நீயும் அவ்வாறே கூறவேண்டும். நீயோ பரம ஏழை. உனக்கோ ஓரு பெரிய சபை கிடையாது. ஆனால் அவர்களுக்கோ இலட்சக்கணக்கானவர் இருக்கின்றனர். ஏன், தேசம் முழுவதுமே அவர்களை ஆதரிக்கின்றது. அவர்கள் கூறுவதையே நீயும் கூறினால், தேசத்தின் ஐசுவரியத்தை அனுபவிக்கலாம்''. அவர்கள் யாரிடம் பேசுகின்றனர் என்பதை அறியாமலிருந்தனர். 76. அவர்கள் மிகாயாவிடம், ''சிதேக்கியாவினிடத்தில் தவறு ஏதாகிலும் நீ கண்டதுண்டா-?'' என்று கேட்டிருந்தால், அவன் 'இல்லை' என்று தான் கூறி இருப்பான். "அவர் பாவச் செயல் புரிவதைக் கண்டிருக்கின்றாயா?'' ''இல்லை ''. ''அவர் பெற்றுள்ள டாக்டர் பட்டம், கள்ளப் பட்டம் என்று நினைக்கின்றாயா?'' ''இல்லை, ஏனெனில் அது சனகரீம் சங்கத்தாரால் அளிக்கப்பட்ட பட்டம்.'' ''பின்னே, ஏன் நீ அவருடன் சேர மறுக்கின்றாய்.'' "ஏனெனில் அவர் அவனுடைய, தேவனுடைய வார்த்தையை விட்டு விலகிச் சென்று விட்டார்' என்று மிகாயா விடையளித்திருப்பான். 77. அவர்கள் திரும்பி வந்து, சிதேக்கியாவிடம், ''மிகாயா அவனுக்கு முன்பிருந்த தீர்க்கதரிசியாகிய எலியா கூறின வார்த்தையில் நிலைத்திருக்கிறான். அவ்வாறே, நீங்களும் தேவனுடைய பிள்ளையாயிருந்தால், வேதம் கூறின தீர்க்கதரிசியின், வார்த்தையில் நிலைகொண்டு இருக்க வேண்டும் என்று கூறியிருப்பார்கள். காலத்தையும் நேரத்தையும் கவனியுங்கள். 78. சிதேக்கியா ஒருக்கால் இப்படி கூறியிருப்பான்; ஆகாபைக் குறித்து எலியா தீர்க்கதரிசனம் கூறியுள்ளதை நான் நன்கு அறிவேன். ஆனால் அது இனி வரப் போகும் சந்ததிக்குரியதாகும். அது நிறைவேற இன்னும் அநேக ஆண்டுகள் கழியும்.'' மிகாயாவோ, 'தேவனிடத்திலிருந்து நான் தரிசனம் பெறும் வரை சற்று பொறுங்கள். தேவன் சொல்வதை மாத்திரம் நான் கூறுவேன். அதில் ஒரு வார்த்தை கூட்டவோ அல்லது குறைக்கவோ எனக்கு அதிகாரமில்லை” என்றான். அன்றிரவு அவன் ஜெபம் செய்து கொண்டிருந்த போது, கர்த்தர் தரிசனத்தில் வெளிப்பட்டார். அடுத்த நாள் காலையில் அவன் சிதேக்கியா அனுப்பிய ஆட்களை சந்தித்தான். இங்கு இந்த இரு தீர்க்கதரிசிகள் உண்டாயிருந்தனர் பாருங்கள். 79. கவனியுங்கள், சிதேக்கியா தேசத்திலேயே மிகவும் மேன்மையானவனாக இருந்தான். அவன் ஆகாப் அரசனின் தலைமை தீர்க்கதரிசியாக விளங்கினான். தீர்க்கதரிசிகள் கொண்ட ஸ்தாபனத்திற்கு அவன் தலைவனாக இருந்தான். அவன் அதிகம் படித்தவனாய் கல்வியறிவு படைத்தவனாய், அவன் வகித்த உத்தி யோகத்திற்கு மிகவும் தகுதி வாய்ந்தவனாக இருந்திருப்பான். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் அவன் பெற்றிருந்தான்; அதன் காரணமாகவே அவன் தீர்க்கதரிசியெனக் கருதப்பட்டான். அவன் சாதாரண ஒரு தீர்க்கதரிசி அல்ல; எபிரெயத் தீர்க்கதரிசி. அவனை நன்கு கவனியுங்கள். 80. ''எனக்கு இரண்டு இருப்புக் கொம்புகளை உண்டாக்க வேண்டும்'' என்று கர்த்தர் என்னிடம் கூறினார்'' என்று சிதேக்கியா உரைத்தான். ஒரு அடையாளம். தீர்க்கதரிசி அடையாளங்களைக் கொண்டு தீர்க்கதரிசனம் உரைத்தல் வழக்கமாகும். "என்னை அபிஷேகித்து, என் மூலம் அந்நிய பாஷை பேசி, என்னைத் தீர்க்கதரிசியென்று உறுதிப்படுத்தின பரிசுத்த ஆவியானவர் தாமே; இந்த இருப்புக் கொம்புகளை ராஜாவினிடத்தில் கொண்டு சென்று, இவைகளால் நீர் சீரியரை ராஜ்யத்தை விட்டு விரட்டியடிப்பீர் என்றும், நான் இஸ்ரவேலராகிய சபைக்கு உரிமையான தேசத்தை அவர்களுக்கு அளிப்பேன் என்றும் அவனிடம் சொல் என்று என்னிடம் கூறினார்” என்றான். சகோதரனே, அது மிகவும் அடிப்படையானது. மோசேயைப் போன்று பிலேயாமும் அடிப்படையில் உறுதியாயிருந்தான். தேவனுடைய பரிபூரண எண் '7' என்பதாகும். எண்ணாகமம் 23-ல் பிலேயாம், ''இங்கு எனக்கு 7-பலி பீடங்களைக் கட்டி, 7-காளைகளையும், 7-ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு ஆயத்தப்படுத்தும்'' என்றான். தேவனுடைய குமாரனின் வருகையைக் குறித்து அவன் அறிவித்தான். அடிப்படையில் நோக்கும் பொழுது அவனும் மற்றவர்களைப் போலவே பிழையற்றவனாய் காணப்பட்டான். 81. சிதேக்கியாவும் அவ்வாறே அடிப்படையில் சரியாக இருந்தான். அவன், அந்த தேசம் நமக்கு சொந்தமானது. கர்த்தர் நமக்கல்லவா அத்தேசத்தை அளித்தார். நம் பிள்ளைகள் ஆகாரமின்றி தவிக்கின்றனர்; ஆனால் நம் பகைஞராகிய சீரியரோ அத்தேசத்தின் பெலனை அனுபவித்த வயிறு புடைக்க அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் உண்ணுகின்றனர்” என்று கூறியிருப்பான். அது ஒரு நல்ல விவாதம் தான். அவன் அதை உரக்கக் கூறின போது, இஸ்ரவேலர் எல்லோரும் ஆரவாரம் செய்திருப்பார்கள். அச்சம்பவத்தை நான் இன்று நடப்பதுடன் ஒப்பிடுகிறேன். நீங்கள் கவனித்துக் கொண்டு வருகின்றீர்கள் என்று நம்புகிறேன். 82. "தேவனுடைய சித்தமின்றி அவருக்கு சேவை செய்தல்” என்னும் செய்தியில், தாவீது, தேவனுக்கு ஊழியம் செய்யமுயன்றான் என்றும், ஆனால் அவன் அதற்கென்று நியமிக்கப்படவில்லை என்றும் நாம் பார்த்தோம். அது எவ்வளவு உத்தமமாகவும், நற்செயலாகவும் தென்பட்டாலும், தேவன் அதை ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார். சிதேக்கியா, தான் கூறுவது சரியென்று எண்ணியிருந்தான். 83. மிகாயாவோ, ''நான் கர்த்தரிடத்தில் கேட்கவேண்டும்'' என்றான். அடுத்த நாள் காலையில் அவன், 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்பதைப் பெற்றிருந்தான். அவன் வார்த்தையுடன் தான் கண்ட தரிசனத்தை ஒப்பிட்டுப் பார்த்தான். 84. அவன் சிதேக்கியாவிடம், வேதத்தின் தீர்க்கதரிசியாகிய எலியா, இவனுக்கு என்ன நேரிடுமென்று கூறியுள்ளதை நீ அறிவாயா? (1-இரா.21:19) என்று கேட்டு இருக்கலாம். 85. ஆனால் அவன் அப்படி கேட்கவில்லை. ஏனெனில் சிதேக்கியா மதிப்பிற்-குரியவனாய் இருந்தான். சபையானது தனக்குச் சொந்தமானவைகளை மறுபடியும் பெறவேண்டுமென்று சிதேக்கியா ஆவல் கொண்டிருந்தான் என்பதை மறந்துவிட வேண்டாம். சத்துரு அபகரித்துக் கொண்ட சொத்துக்களை மீண்டும் இஸ்ரவேலர் பெற்றுக் கொள்ள அவன் முயன்றான். ஆவிக்குரிய காரியங்களை அவர்களுக்கு மீண்டும் அளிக்க அவன் முயன்று இருந்தால், எலியாவைப் போல் அவனும் தேசம் முழுவதையும் அசைத்து இருப்பான். ஆனால் அவனோ உலகப் பிரகாரமான காரியங்களை கொடுக்க முயற்சித்தான். "நாங்கள் சொத்துக்களை உடையவர்கள், எங்களுடையது ஒரு பெரிய ஸ்தாபனம். நாங்கள் அதில் அங்கத்தினராய் இருக்கிறோம். பிராடெஸ்டெண்டுகளாகிய நீங்கள் அனைவரும் எங்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். எப்படியாயினும், நாம் எல்லோரும் சகோதரரும் சகோதரிகளாக இருக்கிறோம்''. ஆனால் அது சரியல்ல; உத்தமமான தேவனுடைய சபை அதனுடன் முன்பு சேர்ந்ததுமில்லை, இனி ஒருக்காலும் அதனுடன் சேரப் போவதுமில்லை. 86. சிதேக்கியாவும் தரிசனம் கண்டான் என்பதைக் கவனியுங்கள். ஏனெனில் "கர்த்தர் என்னுடன் பேசினார்'' கவனியுங்கள், இந்த மனிதன் உண்மை உள்ளவனாயிருந்தான். அவன், "இரண்டு கொம்புகளை உண்டாக்கி இவைகளை ராஜாவிற்கு முன்பாக கொண்டு சென்று மேற்கு திசையாக அதை தள்ளிவிடு அல்லது அவர்கள் நின்றிருக்கும் எந்த திசையிலும் அதை தள்ளிவிடு அல்லது அவர்கள் நின்றிருக்கும் எந்த திசையிலும் அதை திருப்பி விடு என்று கர்த்தர் என்னோடு கூறினார்'' என்றான், என்பதாக அவன் கூறினான். அந்த மனிதனின் உத்தம சிந்தையைப் பாருங்கள். அவன் இருப்புக் கொம்புகளை உண்டாக்கி, அவைகளை ராஜாவிடம் கொண்டு சென்று, "நீர் சீரியர்களை துரத்தி விடுவீர், நீர் வெற்றியுடன் திரும்பி வருவீர் என்று கர்த்தரை உரைக்கிறார்” என்று தீர்க்கதரிசனம் உரைத்தான்... சபைக்கு மகத்தான வெற்றி. ''அவர்களை விரட்டி அடிக்கப் போகிறோம்!'' அது மிகவும் அருகாமையிலிருந்து வஞ்சிக்கிறது அல்லவா? 87. தீர்க்கதரிசனம் உரைக்க அவர்கள் மிகாயாவை அழைத்த போது, அவன், 'போங்கள், ஆனால் இஸ்ரவேலர் எல்லோரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல சிதறப்பட்டதைக் கண்டேன்” என்றான். 88. இவ்விரு தீர்க்கதரிசிகளும் முரண்பட்ட தீர்க்கதரிசனங்களை உரைக்கின்-றனர். யாருடைய தீர்க்கதரிசனம் சரியென்பதை நாம் எவ்வாறு கண்டு கொள்ள முடியும்? அந்த தீர்க்கதரிசனங்களைத் தேவனுடைய வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலமே அவைகளில் எது சரியென்று கூறமுடியும். அவர்கள் மிகாயாவிடம், ''இதை எங்கிருந்து பெற்றாய்?” என்று கேட்டனர். அதற்கு அவன், ''கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தில் மேல் வீற்றிருப்பதைக் கண்டேன், அவருடைய சர்வ சேனையும் அவரை சுற்றியிருப்பதைக் கண்டேன்'' என்று விடை கூறினான். 89. சிதேக்கியாவும் அதே பரிசுத்த ஆவியின் மூலம் கர்த்தரைக் கண்டதாகவும், இருப்புக் கொப்புகளை உண்டாக்கி சத்துருவை தேசத்திலிருந்து துரத்திவிட வேண்டும்; ஏனெனில் இஸ்ரவேலருக்குச் சொந்தமான தேசத்தின் மேல் பகைஞருக்கு எவ்வித உரிமையில்லை என்று அவர் கூறினதாகவும் தீர்க்க தரிசனம் உரைத்தான் என்பது நினைவிருக்கட்டும். இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரைச் சார்ந்திருந்தால், அந்த தேசத்தை மீண்டும் பெற்றிருப்பார்கள். ஆனால் அவர்களோ கர்த்தரை விட்டு அகன்று சென்று இருந்தனர். இன்றைய ஸ்தாபனங்கள் அனைத்தும் அதே நிலையில் உள்ளன. அவர்களுக்கு எல்லாவற்றின் மேலும் உரிமை உண்டு. ஆனால் அவர்களோ வஞ்சிக்கப்பட்டு, தேவனை விட்டு தூரம் சென்று விட்டதன் விளைவால், இக்காலத்திற்கு உரிய வார்த்தையை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இச்செய்தியைப் புரிந்து கொள்ளத் தவறவேண்டாம். 90. ''கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பதைக் கண்டேன். பரம சேனை அனைத்தும் அவரைச் சூழ நின்றன. அப்பொழுது கர்த்தர்; எலியாவின் வார்த்தை நிறைவேறுவதற்கென ஆகாபை வஞ்சிக்க யார் அவனிடம் செல்வான்-? எலியா என்பவன் என் தீர்க்கதரிசி. அவன் என்னால் உறுதிப்படுத்தப்பட்டவன். வருவான் என்று நான் சொன்ன எலியா இவன் தான். அவனிடம் என் வார்த்தை உள்ளது. வானமும், பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. அவர்கள் எவ்வளவு நவீன நாகரீகம் கொண்டிருந்தாலும், எவ்வளவு நல்லவர்களாய் இருந்தாலும், எவ்வளவு கல்வியறிவு படைத்தவர்களாய் இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை, என் வார்த்தை ஒருக்காலும் தவறாது என்றார்''. மிகாயா, "அப்பொழுது ஒரு பொய்யின் ஆவி பாதாளத்திலிருந்து புறப்பட்டு வந்து, கர்த்தரைப் பணிந்து கொண்டு; நீர் அனுமதித்தால், நான் அவர்களுக்கு என் அபிஷேகத்தை அளித்து, வார்த்தையினின்று விலகச் செய்து, அதே சமயத்தில் அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் அவர்கள் மூலம் நடப்பிப்பேன். அவன் செல்வாக்கு படைத்தவனாய் இருப்பதால், உம் வார்த்தையை அவன் அறிந்து கொள்ளாமல் அதை புறக்கணிப்பான் என்றது'' என்றான். சகோதரனே, காலங்கள் மாறவில்லை. அது இப்பொழுதும் அப்படியே தான் இருக்கிறது. சகோ.நெவில், நான் கூறுவது உண்மையென்று உங்களுக்குத் தெரியும். பொய்யின் ஆவி கர்த்தரிடம், "நான் அவன் மேல் இறங்கி, மற்றவர்கள் போல் அவனையும் பொய்யான காரியத்தைத் தீர்க்கதரிசனம் உரைக்கச் செய்வேன்” என்றது. அவன் கூறுவது எப்படி பொய்யாயிருக்கும்? ஏனெனில் அது தேவனுடைய வார்த்தைக்கு முரண்பாடாய் அமைந்துள்ளது. 91. தவறான ஞானஸ்நானங்களையும், கள்ளப் போதகங்களையும் கவனியுங்கள். அவை எவ்வளவு உண்மையாகக் காணப்பட்டாலும், அவை உண்மை என்று அவர்கள் எவ்வளவாக பாவனை செய்தாலும், இக்காலத்துக்கென்று அளிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையுடன் அவை பொருந்தாததால் அவை யாவும் பொய்யே. ''நல்லது, எங்களுடையது தான். நாங்கள் இதை செய்கிறோம், அதை செய்கிறோம், எங்கள் சபை இந்த வழியாக செய்கிறது என்று நீங்கள் கூறலாம். அது எவ்வளவு நன்றாகவும், நியாயமுள்ளதாகவும் காணப்பட்டாலும், இக்காலத்துக்கென்று அளிக்கப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தைக்கு அது முரண்பாடாய் இருந்தால், அதற்கும் தேவனுக்கும் எவ்வித தொடர்புமில்லை. 92. சிதேக்கியா உத்தமமுள்ளவன், நல்லவன் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை. ஆனால் மிகாயாவோ அவனை நோக்கி (நேரடியாக அல்ல, மறைமுகமாக) ''நீர் பொய்யின் ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறீர்'' என்றான். ஒரு பேராயரிடம் அவ்வாறு கூறப் போதிய தைரியம் வேண்டுமல்லவா? மிகாயா சிதேக்கியாவிடம் தைரியமாகக் கூறினான். 93. அந்தப் பேராயர் மிகாயாவிடம், ''இனிமேல் எங்களுடன் நீ ஐக்கியங் கொள்ளக் கூடாது. தேவனுடைய பிள்ளைகள் அளித்த வாக்குகளின் (Votes) மூலம் நான் இந்த ஸ்தானத்தை வகிக்கிறேன். என் சபை என்னைத் தலைவனாக்கியுள்ளது. கர்த்தர் இந்த தேசத்தை எங்களுக்கு மாத்திரமே அளித்தார், எனவே நாங்கள் மீண்டும் அதைப் பெற வேண்டுமென்று அவர் விரும்புகின்றார். கர்த்தரின் வார்த்தையை நான் பெற்றிருக்கிறேன்” என்றான். பின்பு அந்தப் பேராயர் மிகாயாவைக் கன்னத்தில் அறைந்து, ''கர்த்தரின் ஆவி என்னை விட்டு எந்த வழியாய் சென்றது?'' என்று கேட்டான். 94. அதற்கு மிகாயா, "கலிபோர்னியா தண்ணீருக்குள் மூழ்கும் அந்நாளிலே, மற்ற காரியங்களும் நடைபெறும் நாளிலே அதை அறிந்து கொள்வாய்'' என்றான். ''நீ ஒளிந்துக் கொள்ளும் உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய். 95. "ஆகாப் அரசனே, உன் கருத்து என்ன?” ''என் தீர்க்கதரிசி கூறுவதையே நம்புவேன்''. அவன் மாத்திரம் தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்து பார்த்திருந்தால்! அவன் சபிக்கப்பட்டான் என்பதைக் காண அவன் சற்றும் விரும்பவில்லை. எந்த மனிதனும் அதை விரும்பவே மாட்டான். ஸ்தாபனத்தைச் சேர்ந்துள்ள என் சகோதரனே! உன்னிலுள்ள கோளாறும் இதுவே. நீ கடைபிடிப்பது சரியென்று நீ எண்ணிக் கொள்ள விரும்புகின்றாய். ஆனால் 'பிதா, குமாரன், பரிசுத்த ஆவி'-யின் நாமத்தில் நீ கொடுக்கும் ஞான ஸ்நானம் தவறு என்பதை உள்ளத்தில் அறிவாய். அவ்வாறே அந்நிய பாஷை அடையாளங்களுடன் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற வேண்டுமென்று கூறுவது தவறென்பதை நீ நன்கு அறிவாய். இக்காலத்திற்கென தேவன் அளித்துள்ள வாக்குத்தத்தத்திற்கு விரோதமாய் நீ பேசுகின்றாயே. அந்நிய பாஷை பேசுதல் எங்ஙனம் பரிசுத்தாவியின் அபிஷேகத்திற்கு அடையாளமாக அமையும்? சாபம் பெற நீ விரும்பவில்லை அல்லவா? ஆனால் அது அவ்வாறே நிகழும் என்று எழுதப்பட்டுள்ளதே. அது தான் மிருகத்தின் முத்திரை. கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அது அவ்வளவு தத்ரூபமாகக் காணப்படும். 96. அது எல்லா அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்யும். அதில் அபிஷேகம் பெற்றவர்கள் இருப்பார்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்து, அந்நிய பாஷை பேசுவார்கள். அப்படியானால், நீங்கள் எப்படி வித்தியாசத்தைக் கண்டு கொள்வீர்கள்? இந்நேரத்திற்கென அளிக்கப்பட்ட வார்த்தையை நோக்குங்கள். அதன் மூலமாகவே நீங்கள் வித்தியாசத்தைக் கண்டு கொள்ள முடியும். 97. மோசேயைக் கவனியுங்கள். பிலேயாம் யாரென்பதை அவன் எவ்விதம் கண்டு கொண்டான் என்று பாருங்கள். மிகாயாவைக் கவனியுங்கள், அவன் கூறியது சரியென்று நமக்கு எப்படித் தெரியும்? அவனுக்கு முன்னர், வார்த்தை ஆனது ஆகாபைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்துள்ளது. அவ்வாறே நமது காலத்துக்கு முன்பே, வார்த்தையானது ஸ்தாபனங்களைக் குறித்தும் அவைகளுக்கு நேரிடவிருக்கும் அழிவைக் குறித்தும் தீர்க்கதரிசனம் உரைத்து உள்ளது. அபிஷேகம் பெற்றுள்ள உண்மையான சபையைக் குறித்தும் அது தீர்க்கதரிசனம் உரைத்திருக்கின்றது. அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கொண்டவர்களாயிருப்பார்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையில் நிலை நிற்கும் மணவாட்டி. அன்று போலவே இன்றும் அவர்கள் வார்த்தையில் நிலை நிற்கின்றனர். 98. இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் ஏதொன்றும் நிலை வரப்பட வேண்டுமென்று வேதம் நமக்குப் போதிக்கின்றது. நான் மோசே, பிலேயாம் இவர்களைக் குறித்தும், மிகாயா, சிதேக்கியா இவர்களைக் குறித்தும் உங்களிடம் பேசினேன். இன்னும் ஒரு சம்பவத்தை இப்பொழுது கூறப் போகின்றேன். நூற்றுக்கணக்கான உதாரணங்கள் வேதத்தில் உண்டு; ஆனால் மூன்று சாட்சிகள் நிறைவேற, இன்னும் ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகின்றேன். 99. எரேமியா என்பவன் புறம்பே தள்ளப்பட்டவனாய் இருந்தான். ஆனால் அவன் கர்த்தரால் உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி. அவர்களோ அவனை வெறுத்தார்கள். (எரே.1:19). அவன் மீது அழுகிப் போன பழங்களை எறிந்து, அவர்களால் ஆன மட்டும் அவனைத் துன்புறுத்தினர். அவனோ அவர்கள் பேரில் சாபத்தை வரப் பண்ணினான். இவ்வுலகில் தோன்றிய உண்மையான தேவனுடைய தீர்க்கதரிசி ஒவ்வொருவரும் ஸ்தாபனங்களைச் சபித்தனர். ஒரு போதும் மாறாதவராயிருக்கும் நம் தேவன் இம் முறைமையை எவ்விதம் மாற்றுவார்? 100. பரிசுத்தாவியானவரே இந்நேரத்தின் தீர்க்கதரிசி ஆவார். அவர் தமது வார்த்தையை உறுதிப்படுத்தி, அதை நிரூபித்துக் கொண்டு வருகின்றார். மோசேயின் காலத்திலும், மிகாயாவின் காலத்திலும்கூட பரிசுத்தாவியானவரே தீர்க்கதரிசி. வேத வசனங்களை எழுதிய பரிசுத்தாவியானவர் தாமே இறங்கி வந்து அவர் வார்த்தையை ஊர்ஜிதப்படுத்துகின்றார். 101. மிகாயாவின் காலத்தில் என்ன நடந்தது? ஆகையால் தான், ஆகாப் கொலை செய்யப்பட்டு, அவனுடைய இரத்தத்தை நாய்கள் நக்கின போது, அவனைக் குறித்து எலியாவினால் உரைக்கப்பட்ட வார்த்தை மிகாயாவின் காலத்தில் நிறைவேறினது. கள்ளப்போதகர்களே, நீங்கள் விதைத்ததை ஒரு நாளில் அறுப்பீர்கள். நீங்கள் குருடருக்கு வழிகாட்டும் குருடர் என்று கர்த்தர் உரைக்கின்றார். உங்கள் பேரிலே எனக்குக் கோபம் கிடையாது. நான் உங்களிடம் உண்மையைத் தான் கூறுகின்றேன். நான் இப்படி சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் அந்த அறையில் பரிசுத்தாவி ஆனவர், 'இப்படிக் கூறவேண்டும்' என்று என்னிடம் கட்டளையிட்டார். இது வரை நான் உங்களிடம் தவறான ஏதாகிலும் ஒன்றை கூறியுள்ளேனா? நான் கூறின யாவும் உண்மையென்று தேவன் எல்லா சமயங்களிலும் நிரூபித்துக் காண்பிக்கவில்லையா? என் சகோதரரே காலதாமதமாகும் முன்பு விழித்தெழும்புவீர்! 102. முட்செடியாக இருக்க முன் குறிக்கப்பட்டது எவ்விதம் விழித்தெழும்பி வேறுவிதமாக மாறமுடியும்? அது போன்று, சத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்று முன் குறிக்கப்பட்டவர்கள், எவ்விதம் அதை அறிந்து கொள்ளாமலிருக்க முடியும்? ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.'' யோவான் 6:37 "அவர் எனக்குத் தராத எதுவும் என்னிடத்தில் வர முடியாது. அவர் எனக்குத் தந்தவர்களின் பெயர்கள் யாவும் உலகத் தோற்றத்துக்கு முன்னால் ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டுவிட்டது. ஸ்தாபனத்தின் தஸ்தாவேஜுகளில் அல்ல, ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில். 103. எரேமியா ஜனங்களுக்கு முன்னால் தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியாயிருந்தான். ஆனால் ஜனங்களோ அவனை வெறுத்தனர். 104. அவர்கள், ''நாங்கள் தேவனுக்கு உரிமையான மகத்தான ஜனங்கள். நாங்கள் இஸ்ரவேலர் ஒவ்வொரு ஓய்வு நாளிலும் நாங்கள் ஜெப ஆலயங்களுக்குத் தவறாமல் சென்று வருகின்றோம். நாங்கள் பலி செலுத்துகின்றோம்; காணிக்கைகளை ஒழுங்காகத் தருகின்றோம். அப்படியிருக்க, நேபுகாத்நேச்சார் எப்படி தேவனுக்குப் பரிசுத்தமானவைகளைக் கைப்பற்றி, அவனிடம் வைத்துக் கொள்ளலாம்?'' என்று கேட்டனர். அவர்கள் செய்த பாவங்களே அதற்குக் காரணமாயிருந்தன. கர்த்தர் அவர்களிடம், "என் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் இதை நான் செய்ய மாட்டேன். ஆனாலும் நீங்கள் கீழ்படியாமற் போனால், அது நிச்சயம் உங்கள் மேல் விழும்'' என்று கூறியிருந்தார். அது மிகவும் சரி. இன்றைக்கும் அது உண்மையாகவே இருக்கின்றது. இக் காலத்திற்கென அவர் வாக்குத்தத்தம் செய்துள்ள அவர், வார்த்தைக்குக் கீழ்படியுங்கள். 105. தேவனுடைய சித்தத்தின்படி எரேமியா தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட தீர்க்கதரிசியாயிருந்தான். ஆனால் ராஜாக்களும் அவனை வெறுத்தனர். ஒவ்வொரு தீர்க்கதரிசியும் அவனவன் காலத்தில் வெறுக்கப்பட்டவனாய் இருந்தான். அவர்கள் விசித்திரமான செயல்கள் புரிந்து, அவரவர் காலத்திலிருந்த ஸ்தாபனங்களுக்கு விரோதமாயிருந்தனர். எரேமியா ஒரு நுகத்தை அவன் கழுத்தின் மேல் போட்டுக் கொண்டு, "இந்த தேசத்தினர் 70-ஆண்டு காலம் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்” என்று தரிசனம் உரைத்தான். தேவனுடைய வார்த்தையை அவன் நன்கு அறிந்திருந்த காரணத்தால், அவன் இவ்வாறு உரைத்தான். 106. ஆனால் அந்நாட்டு மக்களிடையே இருந்த அனனியா என்னும் தீர்க்கதரிசி அங்கு வந்து எரேமியாவின் கழுத்தின் மேலிருந்து நுகத்தை உடைத்துப் போட்டான். மக்களிடையே பிரபலம் வாய்ந்தவனாக இருக்க அனனியா விருப்பம் கொண்டான். ஆனால் அவனோ தேவனுடைய வார்த்தைக்கு முரணான தீர்க்கதரிசனம் உரைத்தான்; ''இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள், நீங்கள் உங்கள் தேசத்துக்குத் திரும்ப வருவீர்கள் என்று கர்த்தர் உரைக்கிறார்.'' இவ்விருவருமே அபிஷேகம் பெற்ற தீர்க்கதரிசிகள். ஆனால் அவர்களிடையே காணப்பட்ட வேறுபாடு என்ன? ஒருவன் தேவனுடைய வார்த்தையைப் பெற்றிருந்தான். மற்றவனிடம் தேவனுடைய வார்த்தை இல்லை. எரேமியா 'ஆமென்' என்று கூறினான். 107. அனனியாவோ, இஸ்ரவேலருக்கு முன்பாகவும் சபையின் மூப்பர்களுக்கு முன்பாகவும், தானும் எரேமியாவைப் போல் மதிப்பிற்குரிய ஒருவன் என்று காண்பிக்க முயன்றான். அவன் எரேமியாவிடம், "யாருக்கும் உன்னை பிடிக்கவில்லை. நானும் கூட உன்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி. உண்மையைக் கூறினால் நான் உன்னை விட ஒரு பெரிய தீர்க்கதரிசி. ஏனெனில் நீ உரைப்பது பொய்யான தீர்க்கதரிசனம். தேவனுடைய பிள்ளைகள் இங்ஙனம் அடிமைகளாயிருப்பார்கள் என்றா நீ சொல்லுகின்றாய்? என்று கேட்டான். இன்றைக்கும் கூட அப்படித்தான் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் ஸ்தாபனங்கள் அந்நிலையில் தான் உள்ளன. நீங்கள் சபிக்கப்பட்டவர்கள். தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக மனிதனின் பாரம்பரியங்களைக் கைக் கொள்ளும் ஸ்தாபனங்களே, சபைகளே! நீங்கள் தேவனால் சபிக்கப்பட்டு இருக்கின்றீர்கள். 108. அனனியா அங்கு வந்து, எரேமியாவின் கழுத்திலிருந்த தேவனுடைய அடையாளமாகத் திகழ்ந்த நுகத்தடியை எடுத்து உடைத்துப் போட்டு, "இன்னும் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரவேல் ஜனங்கள் திரும்ப வருவார்கள்'' என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். 'நான் பிரக்கியாதி வாய்ந்த ஒருவன்' என்று மற்றவர்களுக்குக் காண்பிக்க அவன் அவ்விதம் செய்தான். அவன் ஸ்தாபன- த்தைச் சேர்ந்த ஒரு தீர்க்கதரிசி. 109. ஆனால் எரேமியாவோ வனாந்தரத்தில் சுயமாக வனாந்திரத்தில் சுயமாக வாழ்ந்த ஒருவன். இஸ்ரவேல் ஜனங்கள் பொல்லாங்கராய் இருந்த காரணத்தால், அவன் எந்நேரமும் அவர்களுக்கு விரோதமாகவே தீர்க்கதரிசனம் உரைத்து வந்தான். ஆனால் அனனியா, ''நீங்கள் இஸ்ரவேலரானபடியால் நீங்கள் செய்வது அனைத்தும் சரி. அது தான் அவசியம். எரேமியா கூறுவது போன்று கர்த்தர் ஒருக்காலும் செய்யார். ஏதாவது ஒன்று சம்பவிக்கும். ஆனால் நீங்கள் பயப்படவோ, திகிலடையவோ வேண்டாம்'' என்றான். சகோதரனே, இன்றைக்கும் அங்ஙனம் கூறுபவர் வாழ்ந்து வருகின்றனர்; ''நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். எல்லாம் சரியாக இருக்கின்றது. எல்லாமே நம் ஆதிக்கத்தின் கீழ் உள்ளது. நாம் தான் உண்மையான சபை''. அது உண்மையென்று எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். 110. ''அவர்கள் எல்லோரும் இரண்டு ஆண்டுகளுக்குக் பாபிலோனிலிருந்து திரும்ப வருவார்கள். இத்தகைய சிறு செயல்கள் நடக்கத் தான் செய்யும். இது ஒன்றும் அசாதாரணமல்ல. நெபுகாத்நேச்சார் வருவான்; ஆனால் கர்த்தர் பாதுகாத்துக் கொள்வார்.'' ஆனால் தேவனுடைய வார்த்தையோ அவர்கள் பாபிலோனில் 70-ஆண்டுகள் இருக்க வேண்டுமென்றும், அந்த சந்ததி மறைந்து போய் மற்றொரு சந்ததி தோன்ற வேண்டுமென்றும் அறிவித்திருந்தது. சந்ததி ஒன்றுக்கு நாற்பது ஆண்டு காலம் வாழ்க்கையுண்டு. எனவே, எரேமியாவின் மூலம் கர்த்தர் மொழிந்தருளின வார்த்தையின்படி, அவர்கள் ஏறக்குறைய இரண்டு சந்ததி காலம் பாபிலோனில் அடிமைகளாய் இருக்க வேண்டும். 111. அனனியா நுகத்தை உடைத்துப் போட்டான். எரேமியா, ''அது சரி ஆமென்” என்றான். ஆனால் அனனியா எரேமியாவிடம், ''நாம் இருவருமே தீர்க்க தரிசிகள் என்பதை நினைவில் கொள்ளவும். நாம் இருவரும் போதகர்கள்'' என்றான். எரேமியா அதற்கு, "என் சகோதரனே, நான் இதைக் கூற விரும்புகிறேன். நமக்கு முன்பிருந்த காலங்களில் தீர்க்கதரிசிகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தேசங்களுக்கு விரோதமாயும், ஜனங்கள் புரிந்த சில கொடூர செயல்களுக்கு விரோதமாயும் தீர்க்கதரிசனம் உரைத்தனர். ஆனால் உண்மையான தீர்க்கதரிசி எவனும், மிகாயா, மோசே போன்று தீர்க்கதரிசனம் உரைத்தல் அவசியம். இல்லையேல் அவர் கூறின தீர்க்கதரிசனம் ஒருக்காலும் நிறைவேறாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்'' என்றான். 112. அனனியா கோபமடைந்து, ''நான் தேவனுடைய தீர்க்கதரிசி' தேவனுடைய வார்த்தை என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. இரண்டு ஆண்டுகளில் அவர்கள் திரும்பி வருவார்கள்” என்று கூறியிருப்பான். 113. எரேமியா அனனியாவின் சமுகத்தை விட்டு வெளியேறி, ''ஆண்டவரே, அனனியா என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. எழுபது ஆண்டுகள் அவர்கள் பாபிலோனில் கழிக்க வேண்டும் என்று நீர் உரைத்ததை நான் முற்றிலும் நம்புகிறேன். நான் உமக்கென்று உத்தமமாக வாழ்வேன். ஆனால் நான் அனனியாவால் வஞ்சிக்கப்பட விரும்பவில்லை'' என்று கர்த்தரிடம் முறை இட்டிருப்பான். 114. கர்த்தர் எரேமியாவிடம், ''அனனியா பொய்யான தீர்க்கதரிசனம் உரைத்ததால், நான் இரும்பு நுகத்தை உண்டாக்குவேன். அவன் பூமியில் இராதபடி அகற்றி விடுவேன் என்று அனனியாவிடம் சொல்” என்றார். அந்த வருடமே அனனியா மரித்துப் போனான். இவை நமக்கு திருஷ்டாந்தங்களாக வைக்கப்பட்டுள்ளன. இருவரும் தீர்க்க தரிசிகளே. இதைக் குறித்து பேசிக் கொண்டே போகலாம். கவனியுங்கள். 115. இந்த கடைசி காலத்தில் இரு ஆவிகளும் ஒரே போன்று இருக்கும் என்று இயேசு கூறியுள்ளார் (மத்.24:24). அக்காலத்தைக் காட்டிலும் இக்காலத்தில் தான் அது ஒன்றே போல் காணப்படும். ஏனெனில் இது கடைசி காலம். பிள்ளைகளே தேவன் நம் மேல் இரக்கம் கொள்வாராக! கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அது அவ்வளவு தத்ரூபமாகத் தென்படும். அப்படியானால் எது சரியென்று உங்களால் கூறமுடியும்? அன்று கடைபிடித்த முறையையே இன்றைக்கும் கைக்கொள்ளுங்கள். தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருங்கள். ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்''. எனது காலம் முடிந்த பின்பு, தேவன் என்னை இவ்வுலகினின்று எடுத்துக் கொள்வார். ஆனால் இந்த செய்தியை மனதில் கொள்ளுங்கள். இச்செய்தியை மறுபடியுமாக ஒலிநாடாவில் கேட்டு, நான் என்ன கூறுகின்றேன் என்பதை நன்கு கவனித்து, என் சத்தத்துக்குச் செவி கொடுங்கள். அவர் வருகைக்கு முன்னர் ஒருக்கால் அவர் என்னை எடுத்துக் கொண்டால், நான் தேவனுடைய வார்த்தையைக் கொண்டு இவைகளை உரைத்தேன் என்பதை நினைவு கூருங்கள். 116. கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்படத்தக்கதாக அது ஒன்று போல் காணப்படும். ஒரே ஆவியின் மூலம் அதே அடையாளங்களும் அற்புதங்களும் செய்யப்படும். நான் கூறுவது சரியல்லவா? நாம் இது வரை பேசி வந்த தீர்க்கதரிசிகளின் காலத்தில் சம்பவித்தது போன்று இப்பொழுதும் சம்பவிக்கும். 117. என்னுடன் 2-தீமோத்தேயு-3:1க்கு வேதாகமத்தை திருப்புங்கள். 118. கடிகாரத்தை இப்பொழுது பார்க்கிறேன். அநேக காரியங்களை நான் விட்டு விட வேண்டியிருக்கின்றது. எல்லாவற்றையும் இப்பொழுது பார்க்க முடியும் என்று நான் எண்ணவில்லை. நான் இங்கு வியர்வை வழிய நின்று கொண்டு இருந்தாலும் சந்தோஷமாயிருக்கின்றேன். இது உண்மையென்று அறிந்து இருக்கிறேன். 119. "நான் கூறினதைத் தவிர வேறெதையும் வானத்திலிருந்து வந்த தூதனும் கூட பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவன்'' (கலா.1:8-9) என்று சொன்ன அதே பவுல் அப்போஸ்தலன் தான் இதையும் எழுதி வைத்திருக்கின்றார். 120. "மேலும் கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக (நாம் கூறப்பட்ட அந்த காலத்தில் தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்). எப்படியெனில் மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியரா-யும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றி அறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்'' 121. இன்று வாழும் ஜனங்களைப் பாருங்கள் அவர்கள் பெரும்பாலும் ஒழுக்கங் கெட்டவர்களாய் இருக்கின்றனர். இன்றைய வாலிபர்கள், பெண்களைப் போல் தங்கள் தலை மயிரை சுருள் செய்து நெற்றியின் மேல் விழவைக்கின்றனர். சோதோமியர்கள், நடத்தை கெட்டவர்கள். 122. இம்மாதம் வெளிவந்த ரீடர்ஸ் டைஜஸ்ட் என்னும் பத்திரிகையில், இருபதிலிருந்து இருபதைந்து வயதுள்ள அமெரிக்கர்கள் ஏற்கனவே நடுத்தர வயதை அடைந்து விட்டதாக எழுதப்பட்டுள்ளது. அவர்கள் உடல்கள் அசுத்தமான செயல்களுக்காக உபயோகப்படுத்தப்பட்டு அழுகிப் போயுள்ளன. 123. ஓ அமெரிக்காவே! எத்தனை முறை தேவன் உன்னை தம் செட்டைகளின் கீழ் கூட்டிச் சேர்த்திருப்பார். உன் காலம் நெருங்கி விட்டது. நீ உலகத்தை அசுத்தத்திற்கு வழி நடத்திச் செல்கின்றாய். ''சுபாவ அன்பில்லாதவர்களாயும்'' (ஒருவருக்கொருவர் உண்மையான அன்பு இல்லாதவர்கள்- ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அல்லது பெண்ணுக்கும் ஆணுக்குமிடையே இயற்கையான அன்பில்லாமை. உடலுறவு விஷயத்தில் அவர்கள் அசுத்தமானவர்கள்.) ''இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சை அடக்கம் இல்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கி-றவர்களாயும்'' (வேறு விதமாகக் கூறினால் அவர்கள் 'பரிசுத்த உருளைகளின் கூட்டமே' என்று நம்மை அழைக்கின்றவர்களாய் இருக்கின்றனர். அதிக சத்தமிடும் அக்கூட்டத்தினண்டை செல்லாதீர்கள் என்று கூறுகிறவர்கள்.) 'துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் (சகோ.பிரன்ஹாமே, இது கம்யூனிஸ்டுகளைக் குறிக்கின்றது'' எனலாம். ஆனால் அடுத்த வசனம் கூறுவதைப் பாருங்கள்). “தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கி-றவர்களாயும் இருப்பார்கள்'' (தேவனுடைய வார்த்தை - ''இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” - இன்றைக்குரிய வாக்குத்தத்தங்களை நமக்கு வெளிப்படுத்தியுள்ளது.). அனனியா, சிதேக்கியா, பிலேயாம் போன்ற கள்ளத் தீர்க்கதரிசிகளைப் போன்று, "தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து''- அபிஷேகம் பெற்று குரு பட்டம் பெற்ற போதகர்கள். அவர்கள் தேவபக்தியின் வேஷத்தைத் தரிக்கின்றனர். ஆனால் தேவன் மாறாதவராய் இருக்கிறார் என்பதை அவர்கள் மறுக்கின்றனர். அவர்கள் தேவனுடைய வார்த்தையை மறுதலிக்கின்றனர். அவர்கள் (அதாவது பரிசேயர் முதலானோர்) இயேசுவை நிராகரித்த போது யாரை நிராகரித்தனர்? தேவனுடைய வார்த்தையை. அவர்கள் பக்தி உள்ளவர்கள். வேதத்தினின்று போதிக்கப்பட்டவர்கள், ஆயினும், அவர்கள் காலத்திற்கென அளிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையை அவர்கள் நிராகரித்தனர். இன்றைக்கும் அதுவே சம்பவிக்கின்றது. அவர்கள் அபிஷேகம் பெற்றவர்கள். பெந்தெகொஸ்தே சுவிசேஷத்தை அவர்கள் பிரசங்கிக்கின்றனர். ஆனால் இக்காலத்துக்குரிய தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டு உறுதிப்படுகின்றது என்பதை அவர்கள் மறுக்கின்றனர். "இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' உங்களுக்குப் புரிகின்றதா? ''... பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, எப்போதும் கற்றாலும் ஒரு போதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து அவர்களை வசப்படுத்திக் கொள்ளுகிறார்கள்''. அவர்களுக்கு 'உடை தைக்கும் விருந்து' (Sewing Parties) போன்றவை தேவைப்படுகின்றன. எவராவது ஒருவர் அவர்களிடம் வந்து, தேவனுடைய வார்த்தைக்குத் தவறான அர்த்தம் அளித்து, "சகோதரியே, உங்கள் மயிரைக் கத்தரித்து சிறிதாக்கிக் கொள்வதால் தவறு ஏதுமில்லை. அந்த பயித்தியக் காரன் கூறுவதைக்கேட்க வேண்டாம். நீங்கள் விரும்பும் எந்த ஆடைகளையும் உடுத்துக் கொள்ளலாம். அதனால் பரவாயில்லை. மனிதனின் இருதயத்தில் இருந்து தோன்றுபவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்'' என்பார்கள். அவ்விதம் நீங்கள் கூறினாலும், அல்லது அத்தகைய செயல்களைப் புரிந்தாலும், நீங்கள் பொல்லாங்கான, இச்சையான, அசுத்த ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சபை பாட்டுக் குழுக்களில் பாடலாம். ஆனால் உங்களுக்கு குறுகிய மயிர் இருக்குமானால், உங்களுக்கு அசுத்தாவி உள்ளது என்பது அர்த்தமாகின்றது. வேதம் அவ்வாறே கூறுகின்றது. நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு முரண்பாடான செயல்களைப் புரிகின்றீர்கள். 'நான் குறுகிய கால்சட்டை (Shorts) அணிந்திருப்பது உண்மையே. ஆனால் அது என்னைக் குற்றப்படுத்தவில்லை' என்று நீங்கள் ஒருக்கால் கூறலாம். புருஷர்களின் உடைகளைப் பெண்கள் தரித்தால் அவர்கள் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். என்றென்றும் மாறாத தேவன், உபாகமம் 22:5ல் அவ்வாறு கூறி உள்ளார். 124. அநேக காரியங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றையும் கூற முனைந்தால், நமக்கு அளிக்கப்பட்டுள்ள சமயம் கடந்து போய்விடும். எது சரி, எது தவறு என்பதை அறிந்து கொள்ள உங்களுக்குப் போதுமான அறிவு உண்டு. ''அவர்களைப் பார்த்து ஏன் கூச்சலிடுகின்றீர்?” என்று நீங்கள் கேட்கலாம். நான் அவர்களுக்கு விரோதமான சாட்சியாயிருப்பேன். நியாயத் தீர்ப்பின் நாளன்று நீங்கள் ஒளிந்து கொள்ள ஒரு சிறு ஸ்தலமும் கூட உங்களுக்கு இராது. 125. மிகாயா, அவனுடைய காலத்தில் ஜனங்கள் தவறு செய்வதை அவனால் நிறுத்த முடியவில்லை. மோசேயும் அவன் காலத்தில் ஜனங்கள் தவறு செய்வதை அவனால் நிறுத்த முடியவில்லை. லேவியனான, பினேகாஸ் தன் பட்டயத்தை உருவி அநேகரைக் கொன்ற பிறகும், ஜனங்கள் தவறான வழியில் சென்று கொண்டிருந்தனர். அவ்வாறே நடக்கும் என்று வேதம் முன்னறிவித்துள்ளது. ''கர்த்தர் உரைக்கிறதாவது : இவர் யாவரும் அவர்கள் சொந்த வழியிலே நிலைத்திருப்பார்கள்''. ஸ்தாபனங்கள் தங்கள் ஸ்தாபன முறைமைகளை உடைத்தெரிந்து தேவனுடைய வசனத்துக்குத் திரும்புவார்கள் என்று நினைக்கின்றீர்களா? ''அல்லவே அல்ல என்று கர்த்தர் உரைக்கின்றார். அவர்கள் அந்திக் கிறிஸ்துவின் மார்க்கத்துக்குள் செல்வார்களா? ''ஆம், செல்வார்கள்” என்று கர்த்தர் உரைக்கின்றார். ''அப்படியிருக்க, அவர்களுடைய செயல்களை நீங்கள் ஏன் குற்றப்படுத்த வேண்டும்?'' ஏனெனில் நான் ஒரு சாட்சியாக இருக்க வேண்டும். அவ்வாறே நீங்களும் சாட்சியாக இருக்க வேண்டும். எல்லா விசுவாசிகளும் சாட்சிகளே. 126. கவனியுங்கள், இக்கடைசி காலத்தில் கள்ளத் தீர்க்கதரிசிகள் என்ன செய்வார்கள்? பற்பல இச்சைகளால் இழுப்புண்டு பெண் பிள்ளைகளை அவர்கள் வசப்படுத்திக் கொள்வார்கள். “எனக்குத் தெரியும், மற்ற பெண்கள் செய்வதைத் தானே நானும் செய்கிறேன்.'' ''சரி, அப்படியானால் உன் வழியிலேயே நீ நிலை கொண்டிரு.'' 127. ஒவ்வொரு முறையும் நான் லாஸ் ஏஞ்சலிஸ் பட்டணத்துக்கு விஜயம் செய்யும் போது, சென்ற முறை கண்டதைக் காட்டிலும் அதிகமான மயிர் கத்தரித்துள்ள பெண்களையும், பெண்களைப்போல் காணப்படும் ஆண்களையும் காண்கிறேன். அநேக போதகர்கள் ஸ்தாபனங்களைச் சேர்ந்து கொள்கின்றனர். உங்களுக்குப் போக்குச் சொல்ல இடமில்லை. உங்களில் செய்யப்பட்ட பலத்த கிரியைகள் சோதோமிலும் கொமோராவிலும் செய்யப்பட்டிருந்தால், அவை அழிந்து போகாமல் இன்றும் நிலைத்திருக்கும்'' கப்பர்நகூமே! தேவ தூதன் (Angel) என்னும் பெயரால் அழைக்கப்படும் லாஸ் ஏஞ்சலிஸ் பட்டணமே! என்ன நேரவிருக்கின்றது என்பதைப் பாருங்கள். லாஸ் ஏஞ்சலிஸ் கடலுக்குள் மூழ்கிப் போகும். எப்பொழுது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது நிறைவேறுவது உறுதி. வாலிபர்களே, என் காலத்தில் அது நிகழ்வதை நான் காணாவிட்டால், நீங்கள் கவனம் செலுத்திக் கொண்டே வாருங்கள். அது கடலில் மூழ்குவது உறுதி. "எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்கள்...'' இது ஓர் அதிர்ச்சியூட்டும் பாகம், கவனியுங்கள். "யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப் புத்தியுள்ள மனுஷர்கள்; விசுவாச விஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்''. 128. விசுவாச விஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள். (ஆங்கிலத்தில் Reprobates என்ற வார்த்தையை தமிழில் ''பரீட்சைக்கு நில்லாதவர்கள்'' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் Reprobates என்ற வார்த்தைக்கு ஸ்கோபீல்ட் வேதாகமத்தில் "h" என்று குறிப்பின்கீழ் "Apostacy" என்று எழுதப்பட்டு உள்ளது. இதன் அர்த்தம் "அடிப்படை தத்துவத்தை விட்டு விலகியவர்கள்'' என்று பொருளுடையதாயிருக்கின்றது. 129. இங்கு விசுவாசம் என்று அழைக்கப்படுவது பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக் கொடுக்கப்பட்ட விசுவாசமே. அவன் பிள்ளைகளுடைய விசுவாசத்தை அவர்கள் பிதாக்களிடத்தில் திருப்புவான் (மல்.4:6). விசுவாச விஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள். அதாவது, விசுவாசத்தை விட்டு தவறிப்போனவர்கள். ஒரே ஒரு விசுவாசம்தான் உண்டு. லூக்கா-18:1-8 வசனங்களைப் படிக்க விரும்புகிறேன். ''சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார். ஒரு பட்டணத்திலே ஒரு நியாயதிபதி இருந்தான். அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாய் இருந்தான். அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவன் இடத்தில் போய்; எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள். வெகுநாள் வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன், நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடி யினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ் செய்ய வேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி, அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்தப்படியே, தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமல் இருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ் செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆயினும் மனுஷகுமாரன் வரும் போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.'' லூக்கா 18:1-8 130. அது ஒரு கேள்வியாக அமைந்துள்ளது. அவர் பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ? இதைத் தான் உங்களுக்கு வலியுறுத்த விரும்புகிறேன். ஏழாம் தூதனுடைய செய்தியின் நாட்களில் தேவ ரகசியம் நிறைவேற வேண்டும் என்று வெளி.10:6 உரைக்கின்றது. அப்படியானால், இக்காலத்தில் அது நிறைவேறுமா? என்னும் கேள்வி எழுகின்றது. நான் விசுவாசத்தைக் காண்பேனா? பிள்ளைகளுடைய விசுவாசத்தைப் பிதாக்களுடைய விசுவாசத்திற்கு -அதாவது மூலவார்த்தைக்கு - திருப்புவதாக மல்கியா.4ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது இந்தக் காலத்தில் நிறைவேறுமா? 131. கவனியுங்கள். "யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கின்றார்கள்'' என்று 2 தீமோ 3:8 உரைக்கின்றது. இந்தக் கடைசி காலத்திலும் அது போன்ற விசுவாசத்தை விட்டுத் தவறியவர்கள் எழும்புவார்கள். "தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து...'' என்று கூறுவதைப் பாருங்கள். சத்தியத்தை விட்டு அகன்று போன அபிஷேகம் பெற்றவர்களையே அது குறிக்கின்றது. அவர்கள் நாகரீகம் வாய்ந்தவர்கள். 132. 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்பதைக் கொண்டு மோசே எகிப்துக்குச் சென்றான். அவனைக் கர்த்தர், அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிப்படுத்தினார். அவன் இஸ்ரவேலரைச் சந்தித்தான். அச்சமயம் அவர்கள் ஒரு சபையாகக் கருதப்படவில்லை. ஏனெனில் 'சபை' என்னும் சொல்லிற்கு 'வெளியே வரும்படி அழைக்கப்பட்டவர்கள்' என்று அர்த்தம். அவர்கள் தேவனுடைய ஜனங்களாயிருந்தனர். அவர்கள் தேவனுடைய வார்த்தையின் கீழ் அபிஷேகம் பெற்று, எகிப்தை விட்டு வெளியேறும்படி அழைக்கப்பட்ட போது, அவர்கள் தேவனுடைய சபையாக மாறினர். பின்னர் அவர்கள் பின் வாங்கிப் போயினர். ஏனெனில் அவர்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கவில்லை. அவர்கள் கள்ளத் தீர்க்கதரிசியான பிலேயாம் கூறினதை விசுவாசித்தனர். இது தோலைத் துளைத்து உள்ளே செல்லும் என்று நம்புகிறேன். இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய ஜனங்களாக இருந்த காரணத்தால், தேவனுடைய கரத்தின் ஆதிக்கத்தின் கீழ் வந்தனர். அவர்கள் தேவனுடைய வார்த்தையினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணப்பட்டு, தேவனுடைய அடையாளங்களையும் அதிசயங்களையும் கண்டனர். கர்த்தர் அவர்களுடன் சென்ற போதிலும், அபிஷேம் பெற்ற கள்ளத்தீர்க்கதரிசி ஒருவன் அவர்களிடையே தோன்றி, அவர்கள் அதுவரை அறிந்திருந்த தேவனுடைய வார்த்தைக்கு முரண்பாடானவைகளைப் போதித்தான். இதன் விளைவாக, இரண்டு பேரைத் தவிர மற்றெல்லாரும் வனாந்தரத்தில் அழிந்து போனார்கள். இதை அப்படியே ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 133. நோவாவின் நாட்களில் நடந்தது போல - அப்பொழுது தண்ணீரினால் எட்டு ஆத்துமாக்கள் காக்கப்பட்டனர். மனுஷகுமாரன் வருகையிலும் சம்பவிக்கும் (1 பேதுரு 3:20; மத்தேயு 24:37) லோத்தின் நாட்களில் நடந்தது போல- அப்பொழுது மூன்று பேர் சோதோமை விட்டு வெளி வந்தனர். மனுஷகுமாரன் வெளிப்படும் நாட்களிலும் நடக்கும் (லூக்.17:26-30). நான் வேதத்தில் காணப்படும் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே எடுத்து உரைக்கிறேன். வானமும் பூமியும் ஒழிந்துபோம் ஆனால் தேவனுடைய வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். அவர்கள் சொற்ப பேராய் இருப்பார்கள். 134. மோசே ஆரோனுடன் சென்றான்; ஏனெனில் மோசே தேவனாக இருக்க வேண்டுமென்று கர்த்தர் கட்டளையிட்டிருந்தார். கர்த்தர் மோசேயிடம், ''நீ தேவனாயிரு, உன் சகோதரனாகிய ஆரோன் தீர்க்கதரிசியாயிருப்பான். உன்னால் சரியாகப் பேச முடியாவிட்டால், உன் வார்த்தைகளை அவன் வாயில் போடுவாயாக. மனிதனை ஊமையாகச் சிருஷ்டித்ததும், அவனைப் பேச வைப்பதும் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?'' என்றார் (யாத்.4:10-16). மோசே எகிப்துக்குச் சென்று, கர்த்தர் கட்டளையிட்டபடியே ஒரு உண்மையான அற்புதத்தை நிகழ்த்தினான். கர்த்தர் மோசேயிடம், ''உன் கோலைத் தரையில் போடு” என்றார். அவன் அதைத் தரையில் போட்டபோது, அது சர்ப்பமாக மாறியது. அதை அவன் கையில் எடுத்தபோது, அது மறுபடியும் கோலாக மாறினது. கர்த்தர் அவனிடம், ''இதை பார்வோனின் முன்னிலையில் செய்து காட்டி, ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று சொல்'' என்றார். 135. பார்வோன் இதைக் கண்டான். அவன், "இது ஒரு மந்திரவாதி செய்யும் சாதாரண தந்திரம் அல்லவா? இது ஒன்றும் பிரமாதம் இல்லையே. இது மனோதத்துவ முறைமையினால் (Mental telepathy) மற்றவரின் சிந்தைகளை அறிந்து கொள்ளுதலாகும். இது போன்று செய்யும் மக்கள் எங்கள் ஸ்தாபனங் களிலும் உள்ளனர். இன்னார், இன்னார் பேராயரே, இங்கு வாரும்; அதை செய்து காண்பியும்'' என்றான். அது பார்வோனின் மூலம் சாத்தான் மொழிந்த சொற்களாகும். கர்த்தர் மோசேயின் மூலம் பேசினார். 136. யந்நேயும் யம்பிரேயும், மோசேயின் முன்னிலையிலும் ஜனங்களின் முன்னிலையிலும், மோசே செய்யக்கூடிய அதே அற்புதத்தை நிகழ்த்திக் காண்பித்தனர். கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அவர்கள் வஞ்சிப்பார்கள் என்பது நினைவிருக்கட்டும். மோசே செய்த அற்புதத்தை அவர்களும் செய்தனர். நான் கூறுவது உங்களுக்குப் புரிகின்றது என்று நம்பு கிறேன். அது மறுபடியும் இந்தக் கடைசி நாட்களில் சம்பவிக்கும் என்று வேத வசனங்கள் கூறுகின்றன. மோசேக்கும் யந்நேயுக்குமிடையே இருந்த வேறுபாடு என்ன? ''தண்ணீர் இரத்தமாக மாறக்கடவது'' என்று மோசே கட்டளையிட்டான். இந்தக் கள்ளத் தீர்க்கதரிசிகள், ''நாங்களும் அவ்வாறே செய்ய முடியும்'' என்று கூறி அதை நிகழ்த்திக் காண்பித்தனர். 137. “வண்டுகள் உண்டாகட்டும்'' என்று மோசே கட்டளையிட்டான். அவன் கர்த்தரிடம் உத்தரவு பெற்று அதைச் செய்தான். அவர்களோ, ''நாங்களும் வண்டுகளை வரவழைக்க முடியும்'' என்று கூறி அதைச் செய்து காண்பித்தனர். மோசே நிகழ்த்தின எந்த ஒரு அற்புதத்தையும் அவர்களாலும் செய்ய முடிந்தது. ஆனால் அவர்களால், வார்த்தையில் நிலைகொண்டிருக்க முடியவில்லை. 138. கர்த்தரால் நியமிக்கப்பட்டு, அவரால் அனுப்பப்பட்ட உண்மையான தீர்க்கதரிசியாகிய மோசே, ஸ்தாபனங்களைச் சார்ந்திருந்த தீர்க்கதரிசிகளுடன் சச்சரவு செய்யவில்லை. அவர்களை அவன் தனியே விட்டுவிட்டு, கர்த்தருக்கு மாத்திரம் செவி கொடுத்தான். 'இதை செய்' என்று கர்த்தர் அவனுக்குக் கட்டளை இட்ட ஒவ்வொரு முறையும், மோசே கீழ்ப்படிந்து அதை நிறை வேற்றினான். அவன் புதிதாக ஒரு செயலைப் புரிந்த போது, அவர்களும் ஏதோ ஓர் உணர்ச்சியைப் பெற்று, மோசே செய்ததையே அவர்களும் செய்து காண்பித்தனர். 139. இப்பொழுது நான் கூறப்போவதை மனதில் பதித்துக் கொள்ளவும்; அதை மறந்துவிட வேண்டாம். உண்மையான தீர்க்கதரிசி முதலில் ஒரு அற்புதத்தை நிகழ்த்தின பின்பே, மற்றவர்கள் அதைப் பாவனை செய்தனர். அவர்கள் அவ்வாறே செய்ய முடியும். ஏனெனில் பிசாசுக்கு சிருஷ்டிக்கும் தன்மை இல்லை. அவன் மூல வார்த்தையை மாற்றி அமைப்பவன் (Pervert). பாவம் என்பது என்ன? நீதி மாற்றி அமைக்கப்படுவதே பாவமாகும். விபச்சாரம் என்பது என்ன? அங்கீகாரம் பெற்ற சரியான ஒரு செயல் மாற்றி அமைக்கப்படுதல் விபச்சாரமாகும். அவ்வாறே உண்மையைப் புரட்டினால் அது பொய்யாக மாறுகின்றது. அனனியாவைப் பாருங்கள். அவன் தேவனுடைய மூல வார்த்தையை மாற்றி அமைத்தவன். பிலேயாமும் சிதேக்கியாவும் அதே போன்றவர்கள். மூல வார்த்தை தோன்றி, அது உண்மையென்று நிரூபிக்கப்பட்ட பின்னரே, பாவனைகள் உண்டாகுமென்று வேதத்தின் சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன. 140. இந்தக் கூடாரத்தின் மூலைக்கல்லைத் தோண்டியெடுத்து, 33-ஆண்டுகட்கு முன்னர் ஒரு காகிதத்தில் எழுதி அங்கு போடப்பட்டுள்ளதை எடுத்து வாசித்துப் பாருங்கள். ''நீயோ சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமான உபதேச-த்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக் கொண்டு...'' அவர்கள் தங்கள் விருப்பப்படி யாவையும் செய்து ''அது பரவாயில்லை, நாங்களும் அதே அற்புதங்களையும் அடையாளங்களையும் தானே செய்கின்றோம்'' என்கின்றனர். ''சத்தியத்துக்குச் செவியை விலக்கி கட்டுக் கதைகளுக்கு (மனிதருடைய நியமங்களுக்கு) சாய்ந்து போகும் காலம் வரும்.'' 141. ஓ! பரிசுத்த ஆவியானவர் ஒரு மனிதனின் ஆத்துமாவை உணர்த்தும் போது, இவை யாவும் நமக்கு முன்பாக எவ்வளவு தெளிவாக இருக்கிறது என்பதைப் பாருங்கள். கூடாரத்தின் மூலைக்கல் நாட்டப்பட்ட போது, அன்று காலை அவர் ஜெபர்ஸன்வில் ஏழாம் வீதியில் என்று கூறினார் என்பது நினைவிருக்கட்டும். ஓஹையோ நதியின் கரையில் நூற்றுக்கணக்கானவர்கள் ஞானஸ்நானம் பெறுவதற்கென நின்று கொண்டிருந்த போது, கர்த்தருடைய தூதனானவர் அக்கினி ஸ்தம்ப ரூபத்தில் தோன்றி நூற்றுக்கணக்கான சபைகளும் ஜனங்களும் அந்த ஆற்றங்கரையினில் சுற்றிலும் கூடி நின்றிருந்த போது அவர் என்ன கூறினார் என்பதும் நினைவிருக்கட்டும். அது அவ்விதமே நிகழ்ந்தது, ஆனால் நடந்தது என்ன என்று கவனியுங்கள். சகோதரரே, நான் கூறுவது கடினமாகத் தென்படும். ஆனால், கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்படுவார்கள் என்று இயேசு கூறி உள்ளார். அது வேறுவிதமாக இருக்க முடியாது. அவர்களோ அதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. 142. கர்த்தர் அபிஷேகம் செய்த உண்மையான தீர்க்கதரிசியாக மோசே தோன்றின பின்னரே, போலியாட்கள் (Impersonators) தோன்றி, மோசே செய்த யாவையும் செய்து காண்பித்தனர். 143. சகோதரனே, சகோதரியே, என்னுடைய சபையில் இதைப் பேசுகின்றேன். தேவனுடைய வார்த்தையை இங்கு பிரசங்கிக்க எனக்கு உரிமையுண்டு. நான் உங்களைக் குற்றப்படுத்துவதாக எண்ண வேண்டாம். நாம் வாழும் காலத்தையும் நேரத்தையும் சற்று ஆராய்ந்து பார்ப்போம். சகோதரன் ரட்டல் (Bro.Ruddel) சகோ.ஜூனியர் ஜாக்ஸன் இவர்களுக்கு வாழ்த்துதல் கூறு கின்றேன். அவர்கள் பெயர்களை முன்பு கூற மறந்துவிட்டேன். ஒரு நிமிடம் நான் கூறுவதை யோசனை செய்து பாருங்கள். 144. மோசே செய்த அற்புதங்களை இவர்களும் செய்தனர். மோசே வண்டுகளைக் கொண்டு வந்த போது, அவர்களும் வண்டுகளைக் கொண்டு வந்தனர். கர்த்தர் ஆதாமிடம், ''நீ அதை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய்” என்று கூறியிருந்தார். 145. சாத்தான் அவர்களை அணுகி, ''நீங்கள் சாகவே சாவதில்லை. நீங்கள் ஞானமுள்ளவர்களாக மாறுவீர்கள்'' என்றான். '... உங்களுக்கு உயர்ந்த ஸ்தாபனங்கள் இருக்கும். எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்'' என்றான். கர்த்தர் உரைக்கின்றதாவது: 2-தீமோத்தேயு-3:8ன் - படி கடைசி நாட்களில் யந்நேயும் யம்பிரேயும் இவ்வுலகில் தோன்றுவார்கள். போலியாட்கள் இருவர் என்பதைக் கவனிக்கவும். 146. சோதோமில் இருந்த பாவத்தைக் கண்டு, எது சரி எது தவறு என்று அறிந்து கொள்ள மூன்று தூதர்கள் இறங்கி வந்தனர் என்று காண்கின்றோம். அவர்களும் அதே அற்புதங்களைச் செய்தனர். 147. ஆனால் தேவனால் அனுப்பப்பட்ட உண்மை அபிஷேகம் பெற்ற நபர் தோன்றிய பின்னரே, அவர்கள் அவர் செய்தது போன்ற அற்புதங்களைச் செய்தனர். இருபது ஆண்டுகளுக்கு முன்னர், ஒருவர் கையை நான் பிடித்த மாத்திரத்தில் ஒரு அடையாளம்'' தோன்றும் என்பது நினைவிருக்கின்றதா-? வெகுவிரைவில், அநேகர் இவ்வரத்தைப் பெற்றுள்ளதாகக் கூறிக்கொண்டனர். ஒருவருக்கு அவ்வடையாளம் வலது கையிலும், வேறொருவருக்கு இடது கையிலும் தோன்றுவதாகக் கூறப்பட்டது. மற்றும் ஒருவர் முகர்ந்து கூறினாராம். இவ்விதம் அநேக அடையாளங்கள் தோன்றின. இது எனக்கு வியப்பாய் இருந்தது. அதன் உண்மை என்னவென்பதை உங்களிடம் எடுத்துக் கூற தேவன் இப்பொழுது அனுமதிக்க மாட்டார். ஆனால் ஒரு நாளில் நீங்களே அதைக் கண்டு கொள்வீர்கள். அவர்களுடைய மதிகேடு வெளிப்படவே இவை காணப்பட்டன. ஆரம்பத்திலிருந்தே அவை சரியல்ல. தேவன் அனுமதி கொடுத்தால், ஒரு நாளில் நீங்களே அதைக் கண்டு கொள்வீர்கள். அவர்களுடைய மதிகேடு வெளிப்படவே இவை காணப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே அவை சரியல்ல. தேவன் அனுமதி கொடுத்தால், ஒரு நாள் அதைக் குறித்து உங்களிடம் கூறுவேன். 148. கவனியுங்கள். அவர்கள் அதே அற்புதங்களே செய்தனர். மூல வார்த்தை முதலாவதாக கடந்து போகும் வரை அவர்கள் அதை செய்யவில்லை. ஏதேன் தோட்டத்தில் சாத்தான் அந்த வழியாகத் தான் அதைச் செய்தான். எல்லா நேரங்களிலும் அவன் அவ்விதம் தான் செய்தான். யார் முதலாவதாக தீர்க்கதரிசனம் உரைத்தது. மோசேயா அல்லது பிலேயாமா? மோசே தான் முதலில் காட்சியில் வந்தான். யார் காட்சியில் முதலில் வந்தது? எரேமியாவா? அல்லது அனனியாவா? நான் எதை குறிப்பிடுகிறேன் என்று உங்களால் காண முடிகின்றதா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றார்கள்). 149. கவனியுங்கள். மாமிச பிரகாரமான பாவனைக்காரர்கள் அதை போன்றே செய்தனர். "தேவனுக்கு ஓர் சேவை செய்கிறோம்'' என்று உண்மையாக எண்ணினர். தாவீதும் அவ்விதமாக செய்தான். இந்த இரண்டிற்கும் இடையில் நீங்கள் சற்று யோசனை செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் அதை கூறாவிடில் நிச்சயமாக தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு பரிசுத்த ஆவியானவர் அதை வெளிப்படுத்துவார். 150. "மோசே செய்வதையே எங்கள் மனிதரும் செய்ய முடியும்'' என்று பார்வோனின் ஸ்தாபனம் கூறினது. அவர்களும் அதை செய்து காண்பித்தனர். இதை கர்த்தர் ஏன் அனுமதித்தார்? பார்வோனின் முன்னிலையில் ஒரு அடையாளத்தைக் காண்பிக்க அபிஷேகம் பெற்ற ஒருவரை தேவன் அனுப்பின பின்பு, ஜனங்களுக்கு முன்பாக ஸ்தாபனங்கள் அதைப் பாவனை செய்ய அவர் ஏன் அனுமதிக்க வேண்டும்? தேவனுடைய உண்மையான ஆவி ஆனவர் செய்த அதே கிரியைகளை மற்றவர்கள் பாவனை செய்ய அவர் அனுமதித்ததன் காரணம் என்ன? ஏனெனில் வேத வாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கின்றன. 151. கவனியுங்கள், பார்வோனின் இருதயமும், எகிப்தியரின் இருதயங்களும் கடினப்பட வேண்டுமெனக் கருதி கர்த்தர் இவ்விதம் செய்தார். அப்படிச் செய்தால் தான், மோசே ஒருவனிடம் மாத்திரமே தேவனுடைய வார்த்தை இல்லை, அவர்களும் மோசே செய்வதைச் செய்து காண்பிக்க முடியும் என்று நிரூபிக்க முற்படுவார்கள். இந்தக் கடைசி நாட்களிலும் இதே போன்று சம்பவிக்கக் கர்த்தர் ஏன் அனுமதிக்க வேண்டும்? அவருடைய சித்தம் நிறைவேறுவதற்கெனவே அவர் இதை அனுமதித்துள்ளார். சிதேக்கியாவின் மீது பொய்யின் ஆவி இறங்க அவர் அனுமதித்தது போன்றே இப்பொழுதும் நடைபெறுகின்றது. ஆகாபை யுத்த களத்தில் அனுப்பி, அவனைக் குறித்து உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறவேண்டுமென்றே தேவன் இம்முறையைக் கையாண்டார். அவ்வாறே, லவோதிக்கேயா சபையைக் குறித்து தீர்க்க தரிசனம் உரைக்கப்பட்டது நிறைவேற வேண்டுமென்பதற்காகவே, ஜனங்கள் அவரவர் ஸ்தாபனங்களின் கொள்கைகளை நம்பும்படி அவர் செய்கின்றார். ''நீ நிர்ப்பாக்கியம் உள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும் தரித்திரனும், குருடனும் நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவிய சம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்று சொல்லுகிறபடியால் நான் நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாத படிக்கு நீ உடுத்திக் கொள்வதற்கு வெண் வஸ்திரங்களையும் என்னி டத்திலே வாங்கிக் கொள்ளவும். நீ பார்வையடையுபடிக்கும் உன் கண்களுக்குக் கலிக்கம் போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன் வெளி.3:17-18. 152. இந்தக் காலத்தில் அத்தகையோர் எழும்பி தேவனுடைய உண்மையான வார்த்தையை மறுதலிக்க அவர் ஏன் அனுமதித்தார்? பார்வோன் மோசேக்கு விரோதமாக எழும்பினான். யந்நேயும் யம்பிரேயும் கூட அவனுக்கு விரோதமாக எழும்பினார்கள். இது மீண்டும் கடைசி நாட்களில் சம்பவிக்கும் என்று வேதம் கூறுகின்றது. இப்பொழுது சம்பவித்துக் கொண்டிருப்பது வேதவாக்கியங்களின் நிறைவேறுதல் அன்றி வேறென்ன? 153. மோசே அவர்களிடம், ''நீங்கள் இதைச் செய்யக் கூடாது. உடனடியாக நிறுத்துங்கள். நான் ஒருவன் மாத்திரமே இதை செய்ய அபிஷேகம் பெற்றவன்” என்று சச்சரவு செய்தானா? இல்லை, அவர்கள் செய்யட்டும் என்று விட்டுவிட்டான். ''இவர்களுடைய மதிகேடு வெளிப்படும்'' என்று 2-தீமோ.3:8ல் கூறப்பட்டுள்ளது என்பதை நினைவு கூரவும். அவ்விதமே இக்கடைசி நாட்களிலும், மணவாட்டி ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டவுடன் இவர்கள் யாரென்று வெளிப்படையாய் அறியப்படும். 154. தேவனுடைய உண்மையான வார்த்தையின் வெளிப்படுத்தலான மோசே அவர்களைத் தடுத்து நிறுத்த ஒன்றையும் கூறவில்லை. கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி அவனை வஞ்சிப்பதற்கெனவே, அவர்கள் கிரியை செய்யட்டும் என்று விட்டு விட்டார். ஆகாபை வஞ்சிக்கவும் கர்த்தர் அதே முறையைக் கையாண்டார். மிகாயா தன்னந் தனிமையாக 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்பதுடன் அங்கு நின்று கொண்டிருந்த போது வேறொருவனும் 'கர்த்தர் உரைக்கிறதாவது' என்பதை அவன் பெற்றிருப்பதாகக் கூறிக் கொண்டு, மிகாயாவின் முன் நின்றான். ஆனால் இவ்விருவரும் ஒருவருக்கொருவர் முரண்பட்டவர். 155. 'கர்த்தர் உரைக்கிறதாவது' : இக்கடைசி நாட்களில் தண்ணீர் ஞானஸ்நானம் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன் நாம் இன்று நிலைகொண்டு இருக்கின்றோம். ஆனால் அற்புதங்களைச் செய்யும் வேறொருவரும் நம்மிடையே இருக்கின்றார். அவர் திரித்துவ போதகத்தைக் கைக்கொள்பவர். 'திரித்துவம்' என்னும் சொல்லை வேதத்தில் எங்காவது காண்பியுங்கள். மூன்று தெய்வங்கள் உண்டு என்று வேதத்தில் கூறப்பட்டு இருந்தால், அதை எனக்கு காண்பியுங்கள். அது தேவனுடைய வார்த்தையில் காணப்படவில்லை. பட்டப் பெயர்களை உபயோகித்து, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஒருவன் ஞானஸ்நானம் பெற்றான் என்று வேதத்தில் எங்கும் கூறப்படவில்லை. தேவனுடைய பிள்ளைகளை ஆதி விசுவாசத்திற்குத் திருப்ப எலியாவின் ஆவியை இக்கடைசி நாட்களில் அனுப்புவதாக அவர் வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார். மனுஷகுமாரன் இக்கடைசி நாட்களில் வெளிப்பட்டதன் மூலம் - சோதோமில் இருந்த அவரே- அந்த மனுஷகுமாரன் என்ற வாக்குத்தத்தம் நிறைவேறி விட்டது - ''இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாத வராயிருக்கிறார். இது கர்த்தர் சொல்லுகிறதாவது என்றுள்ளது. 156. கவனியுங்கள். தேவனுக்கு போதுமென்ற நிலை உண்டாகும் வரை அவர்கள் மோசே செய்த அதே கிரியைகளைச் செய்தனர், இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள். இது கர்த்தர் சொல்லுகிறதாவது என்ற விதமாக இந்த நாட்களிலும் அது நடைபெறும். எல்லா சபைகளையும், மதங்களையும் ஏன் முழு உலகத்தையும் ஆராய்ந்து பார்க்கும்படியும், எல்லா போதகர்களையும், செய்தித் தாள்களையும் அத்தகைய காரியங்கள் இன்று உலகத்தில் நடை பெறுகின்றதா இல்லையா என்று பார்க்க இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கட்டளையிடுகின்றேன். கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள். ''அநேகர்'' (பன்மை ), 'தீர்க்கதரிசிகள்'' (பன்மை), 'கள்ளக் கிறிஸ்துக்கள்” (அபிஷேகம் பெற்றவர்) (பன்மை) - அநேகர். அதாவது மெதோடிஸ்டுகள் - அபிஷேகம் பெற்றவர்; பாப்டிஸ்டுகள் - அபிஷேகம் பெற்றவர்; பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தார் - அபிஷேகம் பெற்றவர். ஆனால் ஒரே ஒரு உண்மையான கிறிஸ்துவின் ஆவி இருக்கும். அது தான் அவர் வாக்குத்தத்தம் செய்தது போன்று 'வார்த்தை மாமிசமானவர்? 157. தேவனுக்கு போதுமென்று நிலைவரும்வரை அது காணப்பட்டு பின்பு முடிந்துவிடும். அவர்களுடைய மதிகேடு வெளிப்படும். 158. பதர் காண்பதற்கு கோதுமை மணி போன்றே இருக்கும். லூதர் காலத்திலிருந்த கோதுமை பயிரின் தண்டை நாம் கோதுமை மணி என்று அழைக்க முடியாது. ஆனால் அந்த தண்டுக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் அங்கிருந்து அகன்று விட்டது. அது எலியாவிலிருந்து எலிசாவிடம் அடைந்து விட்டது. ஜீவன் அவ்வாறு தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது. வேறொரு கட்டத்துக்குள் அது வந்து விட்டால், அதன் முந்திய கட்டத்தில் அது இருக்கமுடியாது. வேறொரு காலத்திலிருந்த அழுகின பிணத்தை நாம் உண்ண முடியாது - மெத்தோடிஸ்ட் அழுகின பிணம், பாப்டிஸ்ட் அழுகிய பிணம், பெந்தெகொஸ்தே அழுகிய பிணம் போன்றவை. ஏனெனில் அவை ஏற்கெனவே அழுகிவிட்டன. இந்நேரத்துக்குரிய வார்த்தையாகிய புதிய ஆகாரம் நமக்குண்டு. 159. பதர் காண்பதற்கு கோதுமை மணி போன்றே இருக்கின்றது. அது கதிராயிருந்த போது, அவ்வாறு காணப்படவில்லை. அல்லது பட்டுக் குஞ்சமாக (tassel) இருந்த போதும், அவ்விதம் காணப்படவில்லை. ஆனால் கோதுமை மணி உண்டாகப் போகும் கட்டத்தில், பதர் கோதுமை மணி போன்று காணப்படுகின்றது. ஆகவே லூதரின் காலத்தில் அது இயேசு கிறிஸ்துவைப் போல் காணப்படவில்லை; அவ்வாறே வெஸ்லியின் காலத்திலும் அது இயேசு கிறிஸ்துவைப் போல் தோற்றமளிக்கவில்லை. ஆனால் பெந்தெகொஸ்தே காலத்தில் அது நிச்சயமாக அவ்வாறு தோற்றம் அளிக்கின்றது. எனவே, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்கும். 160. இக்கடைசி நாட்களில் காணப்படும் பெந்தெகொஸ்தே சபை தான் லவோதிக்கேயா. கோதுமை மணியான கிறிஸ்து அதனின்று வெளியே அனுப்பப்பட்டார். அவர் சபைக்குத் தம்மை வெளிப்படுத்த முயன்ற போது வெளியே அனுப்பப்பட்டார். எனினும், அது சபை என்று தன்னை அழைத்துக் கொள்கின்றது; அது அபிஷேகம் பெற்றுள்ளதாய் கூறுகின்றது. ஆனால் கிறிஸ்து மாத்திரமே அபிஷேகம் பண்ணப்பட்ட வார்த்தையாவார். அவர் மீதமுள்ள மணவாட்டிக்காக நிச்சயம் வருவார். நான் முன்பு கூறினது போன்று, கோதுமை பயிருக்குப் பாய்ச்சப்படும் அதே தண்ணீர் களைகளுக்கும் பாய்ச்சப்படுகின்றது. அவை இரண்டும் அபிஷேகம் பெற்றவை. ஆனால் அவர்களிடையே உள்ள வேறுபாட்டை, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அல்லது முன் குறிக்கப்பட்டவர்கள் மாத்திரமே கண்டு கொள்ள முடியும். 161. அவர்கள் அபிஷேகம் பெற்றவர்கள். அவர்கள், ''கர்த்தருக்கு மகிமை, நாங்கள் சுயாதீனம் வாய்ந்தவர்கள். அல்லேலூயா, நாங்கள் அந்நிய பாஷை பேசி, குதிக்கின்றோம். எங்கள் பெண்களுக்கு அவர்கள் விருப்பப்படி செய்ய சுதந்தரம் உண்டு. நீங்கள் தான் அவர்களை ஒடுக்கி வைத்திருக்கின்றீர்கள்” என்கின்றனர். சரி, உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். நாங்கள் அதைக் குறித்து ஒன்றும் செய்ய இயலாது. அவர்கள், ''நாங்கள் அந்நிய பாஷை பேசுகின்றோம், ஆவியில் நடனமாடுகின்றோம், தேவனுடைய வசனத்தைப் பிரசங்கிக்கின்-றோம்'' என்கின்றனர். அது உண்மை தான். அதற்கு விரோதமாய் நாங்கள் எதையும் கூற முற்படவில்லை. ஆனால் யந்நேயும் யம்பிரேயும் கூட அவ்வாறே செய்தனர். கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் வஞ்சிக்கப்படுவார்கள் என்று இயேசு கூறினார். 162. பூமியினடியில் சென்ற மூலவித்து ஒரு ஸ்தாபனம் அல்ல. பின்னர் இலைகளுள்ள ஒரு ஸ்தாபனமாக அது மாறினது. பின்பு பட்டுக்குஞ்சம் (tassel) கட்டத்தை அது அடைந்தது. அப்பொழுதும் அது பூமியில் புதைந்த கோதுமை மணியைப்போல் காணப்படவில்லை. பின்பு அது பதராகி, பெந்தெகொஸ்தே இலைகளுடன் தோன்றினது. அதன் வளர்ச்சியில், அது வெவ்வேறு உருவங்களைப் பெற்று, மூலவித்தைப் போல் காட்சியளித்தது. ஆனால் முடிவில் அது ஸ்தாபனங்களுக்குப் புறம்பே வெளிப்பட்டது. ஆகவே இனி மேல் வித்தை சுமந்து செல்பவை (Carriers) நமக்கு அவசியமில்லை. ஸ்தாபனம் என்பது சுமந்து செல்லும் ஒன்றாகும். கோதுமை பயிரின் தண்டு சாக வேண்டும், பதர் சாக வேண்டும், கோதுமை பயிரின் எல்லா பாகங்களும் சாக வேண்டும். கோதுமை மணி மாத்திரமே உயிர் வாழ்கின்றது. அது தான் அவர் திரும்பவும் வந்து, அவருடன் கொண்டு செல்லப் போகும் உயிர்த்தெழுதலின் சரீரமாகும். முந்தினோர் பிந்தினோராவார் பிந்தினோர் முந்தினோராவார். நான் கூறுவதைத் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டு வருகின்றீர்களா? 163. பதர், கோதுமை மணியைப் போன்று காட்சியளித்தது. ஒரு கோதுமை வயலை வைத்திருப்போர், விதையை விதைத்தப் பின்பு, "கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் கோதுமையை பெற்றுக் கொண்டேன்” என்று அதில் இன்னும் ஒரு கோதுமை மணி கூட வராமலிருக்கும்போதே கதிரை மட்டும் பார்த்து அவ்விதம் கூறலாம். ஏனெனில் அது கோதுமை மணியைப் போன்றிருக்கின்றது. ஆனால் அது பதராயிருக்கின்றது. 164. நண்பர்களே, என்னுடன் கூட ஆதி சபைக்குச் செல்லுங்கள். இந்த வித்தின் முதலாம் எழுப்புதல் எப்பொழுது நிகழ்ந்தது? அதாவது அந்த வித்து செத்த பின்பு - அதாவது சரீரமாகிய மணவாட்டி என்னும் கோதுமை மணி நிலத்தில் விழுந்து செத்த பிறகு, முதலாவதாக, கிறிஸ்து தம் மணவாட்டியை ஒரு ஸ்தாபனமாக ஆக்கவில்லை. சரியா? சபையை மாசற்றதாக வைக்க விரும்பி, அவர் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், போன்றவர்களை நியமித்தார். ஆனால் முன்னூற்று அறுபது ஆண்டுகள் கழித்து, நிசாயாவில் ரோமாபுரி அதை ஒரு ஸ்தாபனமாக்கியது. அப்பொழுது அது செத்துவிட்டது. அந்த ஸ்தாபனத்தின் கோட்பாடுகளை ஏற்க மறுத்தவர் அனைவரும் கொல்லப்பட்டனர். அந்த கோதுமை மணி நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலத்தில் புதைந்திருந்தது. சில காலம் கழித்து, அதாவது மார்டின் லூதர் காலத்தில் புதைக்கப்பட்ட கோதுமை மணியிலிருந்து சிறு தளிர்கள் தோன்றின. மேலும் சில தளிர்கள் உலரிச் சுவங்லி (Ulrich Zwingli) காலத்தில் தோன்றின. சிறிது பின்னர் ஆங்கலின்கள் தோன்றினர். அதன் பின்பு பட்டுக்குஞ்சமாகிய (tassel) ஜான் வெஸ்லி தோன்றி ஒரு புது எழுப்புதலைத் தொடங்கினார். முன்பிருந்தவர்-களின் காலத்தைக் காட்டிலும் வெஸ்லியின் காலத்தில் அது கோதுமை மணி போன்று காணப்பட்டது. ஆனால் அதுவும் ஸ்தாபனமாக மாறி, உலர்ந்து போனது. அதனுள் இருந்த சத்து (ஜீவன்) பதருக்குள் சென்றது. பதர் தோன்றின போது, அது அசல் கோதுமை மணி போலவே காணப்பட்டது. ஆனால் அதன் மதிகேடு கடந்த எட்டு, பத்து ஆண்டுகளாக - முக்கியமாக கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிப்பட்டு வருகின்றது. பதர் என்ன செய்யும்? அது கோதுமை மணியிலிருந்து பிரிந்து, அகன்று செல்லவேண்டும். 165. இப்பொழுது நீங்கள் காணும் இந்த மகத்தான எழுப்புதல் தொடங்கி 20-ஆண்டுகளாகியும், ஏன் இதனின்று ஒரு ஸ்தாபனம் தோன்றவில்லை? இதில் அபிஷேகம் பெற்ற தீர்க்கதரிசிகளும், போதகர்களும் உள்ளனர். அப்படி இருந்தும், ஏன் ஒரு ஸ்தாபனம் அதினின்று உண்டாகவில்லை? ஏனெனில் கோதுமை மணி தோன்றிய பின்பு அதிலிருந்து வேறொன்றும் தோன்ற வழியில்லை. நிலத்தினடியில் புதைந்த மூல கோதுமை மணி மறுபடியும் உற்பத்தியாகிவிட்டது. ஆகவே, அது ஒரு ஸ்தாபனமாக மாறாமல் இருக்கின்றது. ஓ! ஒரு குருடனும் கூட இதை அறிந்து கொள்ள முடியும். அது ஸ்தாபனமாக ஆகவே முடியாது. ஸ்தாபனம் தோன்றுவதற்கு அது விரோதமாயிருக்கும். கோதுமை மணி மறுபடியும் தன்னை உற்பத்தி செய்து கொள்ளும் - கடைசி காலத்தில் மனுஷகுமாரன் வெளிப்படுவார். கோதுமை மணி தன்னில் தானே திரும்பவும் தோன்றும். கடைசி நாட்களில் அவரைப் போல் பாவனை செய்பவர்கள் தோன்றி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள். ஸ்தாபனமாகிய பதர்கள் அகன்று சென்று, பின்வாங்குவதைப் பாருங்கள். தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு கோதுமை மணி நன்றாகக் காணப்பட வேண்டுமென்று இவ்விதம் நடக்கின்றது. 166. இது எவ்வளவு அழகாக எபேசியர்-1:5ல் உரைக்கப்பட்டிருப்பதைப் பாருங்கள். உண்மையாகத் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும், முன் குறிக்கப்பட்டவர்களும் மாத்திரமே வஞ்சிக்கப்பட மாட்டார்கள். அபிஷேகம் பெற்றவர்களில் கள்ளத் தீர்க்கதரிசிகளும் இருப்பார்கள். அவர்களிடையே உண்மையான தீர்க்கதரிசிகளும் இருப்பார்கள். அப்படி ஆனால் அவர்களை எப்படி வித்தியாசம் கண்டு பிடிப்பீர்கள்? வார்த்தையின் மூலம் மட்டுமே. 167. அவர்கள் செய்யும் அற்புதங்களின் மூலமல்ல. அவர்களிருவரும் அற்புதங்களின் மூலமல்ல. அவர்களிருவரும் அற்புதங்களைச் செய்வார்கள். ஆனால் தேவனுடைய வார்த்தையின் மூலம் அவர்களை வேறு பிரிக்கலாம். 168. கடைசி நாட்களில் கள்ள 'இயேசுக்கள்' எழும்புவார்கள் என்று இயேசு மத்தேயு-24:24ல் கூறவில்லை என்பதைக் கவனித்தீர்களா? பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தைச் சேர்ந்த மிகுந்த உத்தமமானவனும்கூட தன்னை இயேசு என்று அழைத்துக் கொள்ள மாட்டான். அவ்வாறே மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட் போன்ற ஸ்தாபனங்களைச் சேர்ந்த யாவரும் தங்களை இயேசு என்று அழைத்துக் கொள்ள மாட்டார்கள். கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்புவார்கள் என்று மாத்திரமே வேதம் உரைக்கின்றது. கள்ள 'இயேசுக்கள் அல்ல, கள்ள 'கிறிஸ்துக்கள்'. அவர்கள் கள்ளக்கிறிஸ்துக்களாயிருந்தும், அதை அறியாமலிருக்கின்றனர். 169. அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு முரண்பட்டவர்களாயிருக்கின்றனர். எனினும், தேவன் அவர்கள் மூலம் அற்புதங்களை நடப்பிக்கிறார். நான் இதை சரியாக காட்சிக்கு கொண்டு வருகிறேன். ஏனெனில் உண்மையானவர்கள் செய்யும் காரியங்களையே இவர்களும் செய்கின்றனர். இயேசுவே அவ்விதம் கூறினார். 170. நான் உங்களைக் குற்றப்படுத்துவதாக எண்ண வேண்டாம். இது என் சபை. இந்தக் குழுவின் மேல் பரிசுத்த ஆவியானவர் என்னைக் கண்காணியாய் வைத்திருக்கிறார். அவர்களுக்கு நான் சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டும். ஏனெனில் காலதாமதமாகி விட்டது. 171. ஸ்தாபனத்தைச் சார்ந்தவர்கள் கள்ள 'இயேசுக்கள்' என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்; ஆனால் கள்ளக் கிறிஸ்துக்களை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை முற்றிலும் நம்புகிறவர்கள். அந்நிய பாஷையிலும் அவர்களுக்கு நம்பிக்கை உண்டு. நான் மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகளைக் குறிப்பிடவில்லை. நான் பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தவரைப் பற்றி தான் கூறுகிறேன். இது கடைசி காலம். நாம் இப்பொழுது குறிப்பிடும் வஞ்சனையை முதலாம் சபையின் காலத்தில் இருந்தவர் அறிந்து கொள்ளவில்லை. அவ்வாறே மெதோடிஸ்டு சபையின் காலத்திலும், பாப்டிஸ்ட் சபையின் காலத்திலும், பெந்தெகொஸ்தே சபையின் காலத்திலும், அக்காலங்களில் இருந்தவர் அதை அறிந்து கொள்ள இயலவில்லை. பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தினர் உண்மையான சபையைப் போல் காணப்படுகின்றனர். ஏனெனில் பதர் காண்பதற்கு கோதுமை மணியைப் போன்றே இருக்கும். 172. தொடக்கத்தில் எவ்வாறு இருந்ததோ, அவ்வாறே முடிவிலும் இருக்கும். ஆதி காலத்தில் சாத்தான் ஏவாளிடம் ஒரே ஒரு வார்த்தைக்குத் தவறான அர்த்தம் கூறினான். அவளும் அதை விசுவாசித்தாள். ஏவாள் தான் வஞ்சிக்கப் பட்டாள், ஆதாமல்ல. அவ்வாறே சபை தான் வஞ்சிக்கப்படும். தவறான வார்த்தையை சபை தான் பெற்றுள்ளது. கிறிஸ்துவல்ல. தவறான அபிஷேகம் பெற்று, மணவாட்டியென்று தன்னை அழைத்துக் கொள்பவள் தான் பொய்யான வார்த்தையை ஏற்றுக் கொண்டாள். இதை நீங்கள் அறிந்து கொள்ள முடியவில்லையா? எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது பாருங்கள். வேதத்திலுள்ள அத்தனையுமே பிழையின்றிப் பொருந்துகிறது. ஏவாள் தான் பொய்யான வார்த்தையை விசுவாசித்தாள், ஆதாமல்ல, அது போன்று, இக்காலத்தில் தன்னை மணவாட்டி என்று அழைத்துக் கொள்பவள் மாத்திரமே பொய்யான வார்த்தையில் விசுவாசம் கொள்ளுகின்றாளே அல்லாமல் கிறிஸ்துவின் மணவாட்டியல்ல. மணவாட்டி என்று தன்னை அழைத்துக் கொள்பவளிடம் எல்லாவித அடையாளங்களும் அற்புதங்களும் காணப்படுகின்றன. கூடுமானால் அவை தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும். 173. "கள்ள இயேசுக்கள்” என்ற காரியத்திற்கு அவர்கள் இணங்க மாட்டார்கள். நிச்சயமாக. அது மிகவும் தெளிவாயிருக்கின்றது. அவர்கள் 'இயேசுக்கள்'' அல்ல என்று யாரும் ஒப்புக் கொள்ளக் கூடும். அவர்களின் பின்னால் எண்ணெயும், கைகளிலும், கண்களிலும் இரத்தமும் இருப்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. சுயாதீன புத்தியுள்ளவர் யாரும், ''இது 'இயேசு' இல்லை என்பதை அறிவர். ஆனால் அவர்கள் தங்களை ''அபிஷேகம் பெற்றவர்கள்” என்று அழைத்துக் கொள்ளுகிறார்கள். ''கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்யும் கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்புவார்கள். 174. இப்பொழுது கவனியுங்கள். இந்த அறிக்கையை இழந்துவிட வேண்டாம். ஏனெனில் இது கேட்பதற்கு தகுதி வாய்ந்தது. 175. வேதாகமம் அவ்விதம் இருக்குமென்று கூறுகின்றது பாருங்கள். 176. 'கள்ள இயேசுக்கள்'' என்றல்ல. மாறாக "கள்ள கிறிஸ்துக்கள்” தாங்கள் அபிஷேகிக்கப்பட்டவர்கள் என விசுவாசிக்கின்றார்கள். ஆனால் தாங்கள் "இயேசுக்களல்ல'' என்பதை அறிந்திருக்கிறார்கள். ஒரு மனிதன், "என் கைகளில் உள்ள வடுக்களைப் பாருங்கள், என் புருவத்தைப் பாருங்கள், நான் தான் இயேசு'' என்று கூறினால், அது தவறு என்று நாம் அறிவோம். அவ்விதமாக மனுஷர் எழும்புவர் என இயேசு ஒரு போதும் கூறவில்லை. மாறாக, "கள்ளக்கிறிஸ்துக்கள்'' என்று பன்மையில் கூறினார். ஸ்தாபனங் களின் ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டிருப்பவர், வார்த்தையினால் அல்ல, உங்களால் கவனிக்க முடிகின்றதா? இதை நீங்கள் இழந்துவிட முடியாது. 177. மூன்று வகை மக்கள் உள்ளனர் என்று நான் ஏற்கனவே உங்களிடம் கூறியிருக்கிறேன். விசுவாசிகள், விசுவாசிகளைப் போல் பாவனை செய்பவர், அவிசுவாசிகள் ஜனங்களில் மூன்று இனத்தவர் உண்டு. சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வழி வந்தவர்கள். இவை யாவும் எப்பொழுதும் மும்மூன்று வகைகளாக இருக்கும். மோசே விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கின்றான்; யந்நேயும் யம்பிரேயும் அவிசுவாசிகளுக்கு அடையாளமாயுள்ளனர். விசுவாசிகளைப் போல் பாவனை செய்பவர்க்கு பிலேயாம் அடையாளமாயிருக்கிறான். இவர்கள் தாம் அந்த மூவகைப்பட்டவர். 178. அவிசுவாசிகள் (அதாவது ஸ்தாபனங்கள்) எந்த விதமான அடையாளம் அற்புதங்களில் விசுவாசம் கொள்வதில்லை. அவர்கள் மிகவும் குளிரடைந்த சம்பிரதாய முறைகளைக் கைக்கொள்ளும் சபையினர். விசுவாசிகளைப் போல் பாவனை செய்பவர்களே பதர். இவர்கள் தவிர உண்மையான விசுவாசிகளும் இருக்கின்றனர். 179. அவிசுவாசிகளுக்கு, விசுவாசிகளைப்போல் பாவனை செய்பவர்க்குமுள்ள துணிச்சலை பாருங்கள். சாத்தான், உண்மையான வார்த்தையாகிய இயேசுவின் முன்னிலையில், ('வேதத்தில்) எழுதியிருக்கிறதே' என்று துணிச்சலாகக் கூறினான். இவ்விதம் அவன் செய்யக் காரணம் என்ன? அக்காலத்துக்குரிய வார்த்தை யாரென்பதை சாத்தான் அறிந்திருந்தான் என்றாலும், அந்த எளிய, சிறிய மனிதன் வார்த்தையாக இருக்கக் கூடுமா என்னும் சந்தேகம் அவனில் எழுந்தது. ஆகவே தான் அவன், ''நீர் தேவனுடைய குமாரனேயானால்...'' என்று மறுபடியும் மறுபடியும் கூறினான். 'தேவனுடைய குமாரன் வரப் போகிறார் என்று எனக்குத் தெரியும். ஏனெனில், அவர் வரப் போவதாகத் தேவன் வாக்களித்துள்ளார். அவருடைய தூதர்களுக்கு அவர் கட்டளையிடுவார் என்று எழுதப்பட்டுள்ளது. நீர் தான் அவரனால், எனக்கு அதை நிரூபித்துக் காண்பியும். ஓர் அற்புதம் செய்யும், அதை நான் காணட்டும்'' என்றான் அவன். உண்மையான வார்த்தையாகிய இயேசுவுடன்கூட, விசுவாசியைப் போல் பாவனை செய்யும் யூதாஸ் இருந்தான். 180. இத்தகையோருக்குள்ள தைரியத்தைப் பாருங்கள், "அந்த அர்த்தமற்ற காரியத்தில் கவனம் செலுத்தாதீர். அதில் ஒன்றுமில்லை. அந்த கூட்டங்களுக்குச் செல்ல வேண்டாம். அதெல்லாம் கட்டுக்கதை” என்று விசுவாசிகளைப் போல் பாவனை செய்கிறவர்கள் உண்மையான வார்த்தையின் முன்னிலையில் தைரியமாகக் கூறுகின்றனர். 181. உண்மையான வார்த்தை எங்கிருந்தாரோ, அந்த இடத்திற்கே சாத்தான் வந்தான். யூதா நிருபத்தின் 9-ம் வசனத்தில் பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயின் சரீரத்தைக் குறித்துத் தர்க்கிக்கும் போது, ''கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக” என்று சாத்தானிடம் கூறினதாக நாம் காண்கிறோம். சாத்தான் வார்த்தைக்கு விரோதமானவன். அபிஷேகம் பெற்ற அந்திக் கிறிஸ்து, அந்தக் காலத்தில் உண்மையான வார்த்தையாக விளங்கிய இயேசு கிறிஸ்துவின் முன்னால் நின்று, 'எழுதியிருக்கிறதே' என்றான். 182. கடைசி நாட்களை கவனியுங்கள். கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களும் வஞ்சிக்கப்படத்தக்கதாக அது அவ்வளவு உண்மையாகத் தென்படும். ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வார்த்தையாகவே இருப்பதால் அவர்கள் வஞ்சிக்கப்பட முடியாது, வேரில் தங்கியிருக்கும் ஜீவனைப் போன்று அது தன்னை மறுதலிக்க முடியாது. இது காலத்தின் வார்த்தையாயிருக்கின்றது. 183. எரேமியாவைப் போன்று அனனியா என்னக் கூறினாலும், எரேமியா தான் எங்கு நிற்கிறான் என்பதை அறிந்திருந்தான். மோசேயும் மற்றவர்களும் அதையே தான் சரியாக செய்தனர். கள்ள தீர்க்கதரிசி என்னதான் கூறினாலும் தேவ வார்த்தை அங்கு இருந்தது. அது எழுதப்பட்டு இருந்தது. ஆகவே தான், மிகாயா, ''நல்லது, நீர் பொறுத்திருந்து பாரும்” என்று கூறினான். ஆகாப், "என் தீர்க்கதரிசிகளை நாம் நம்புகிறேன். என் ஸ்தாபனம் சரியானது. நான் சமாதானத்தோடு திரும்பி வருவேன். இவனை சிறையில் தள்ளி இடுக்கத்தின் அப்பத்தை கொடுங்கள். நான் திரும்பி வந்த பின்பு இவனை பார்த்துக் கொள்ளுகிறேன். அவனுடன் எந்த ஐக்கியமும் நமக்கு வேண்டாம்” என்றான். 184. அதற்கு மிகாயா, ''நீ திரும்பி வருவது உண்மையானால், கர்த்தர் என்னுடன் பேசியிருக்கவில்லை'' என்றான். கர்த்தர் சொல்லுகிறதாவது என்பது தன்னிடம் உள்ளது என்பதை அவன் அறிந்திருந்தான். அவனுடைய தரிசனம் கர்த்தர் சொல்லுகிறதாவது என்பதற்கு சரியாக பொருந்தி வேறு ஒரு காலத்திற்கு என்று அல்ல மாறாக அந்த காலத்திற்கு சரியாகப் பொருந்திற்று. ஆமென். அல்லேலூயா! 185. விசுவாசிகளைப் போல் பாவனை செய்பவர்கள் மிகவும் தைரியசாலிகள். ஏன், அவர்கள் பிரதான தூதன் முன்னால் நின்று கொண்டு அவனுடன் தர்க்கம் செய்தவர்கள். 'தேவ தூதர்கள் நடக்கக் கூட பயப்படும் ஸ்தலத்தில் மதியீனர் ஆணிகள் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பாதரட்சைகளை அணிந்து தைரியமாக நடப்பார்கள் என்னும் ஒரு பழமொழி உண்டு. 186. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்படுவதில்லை. ஏனெனில் அவர்களே அந்த வார்த்தை. தேவனுடைய வார்த்தை கூறியிருப்பதைத் தவிர வேறொன்றையும் செய்யவோ, கேட்கவோ அவர்களால் இயலாது; அவர்களுக்கு அதைத் தவிர வேறொன்றும் தெரியாது. போலியாட்களைக் கண்டு மோசே கலங்கவில்லை. அவன் பார்வோனிடம், 'பார்வோனே, சற்று பொறும். நான் என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் என்னிடம் கூறியிருப்பதை நீ அறிவாய். ஆனால் உன் ஆட்களும் நான் செய்யும் அற்புதங்களையே செய்கின்றனர். ஆகவே நான் உன் பக்கம் சேர்ந்து கொள்கிறேன்'' என்று சொன்னான் என்று நினைக்கின்றீர்களா? அவன் அப்படி சொல்லியிருந்தால், அவன் தேவனுடைய தீர்க்கதரிசி என்று எனக்குத் தோன்றவில்லை. இல்லை, அவன் மிகவும் உறுதியாய் நின்றான். கர்த்தர் வாக்களித்துள்ளதால் அவர் எப்படியும் பார்த்துக் கொள்வார் என்பது அவனுக்குத் தெரியும்'' நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை ' ' (உபா.3:16; எபி.13:15) என்று அவர் வாக்களித்துள்ளாரே! 187. மோசேக்கு அவர்களுடைய ஸ்தாபனங்கள் எதுவும் தேவைப்படவில்லை. அவன் கர்த்தருடைய பட்சத்தில் உறுதியாய் நின்றான். அவன் செய்த அற்புதங்களை அவர்களும் செய்தார்கள் என்ற போதிலும் அவன் நிலைத் தவறவில்லை. அவன் அமைதியாக இருந்தான். ஏனெனில் கர்த்தர் அவருடைய கிரியை நடப்பிப்பதில் ஈடுபட்டுள்ளார் என்பதை அவன் நன்கு அறிந்திருந்தான். நான் கூறுவது உங்களுக்குப் புரிகின்றதா? - நான் கடினமாகத் தாக்க விரும்பவில்லை. இந்த பாவனைகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்பதையே உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். 188. இந்த என் பிரசங்கம் உண்மையான விசுவாசிகளுக்கு மாத்திரமேயாகும். ஏனெனில் அவர்கள் 'அந்நாளில் நிலைநிற்கும்படி தெரிந்து கொள்ளப்-பட்டவர்கள். இரண்டையும், இரண்டையும் கொண்டு நாலாக்க உங்களுக்கு கடினமாயிருக்காது அல்லவா? ஆகவே நீங்கள் அதை புரிந்து கொள்கிறீர்கள். 189. 'அந்நாளில் அநேகர் என்னை நோக்கி; கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தி னாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்” (மத். 7:2) என்று இயேசு கூறினார். காலம் முடிவடைந்து, அந்த மகத்தான உயிர்த்தெழுதல் நிகழ்ந்த பின்பு, அநேகர் தேவனுடைய ராஜ்யத்தில் வீற்றிருப்பார்கள் என்று இயேசு உரைத்தார். தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது என்பது நினைவு இருக்கட்டும். களைகள் கோதுமை மணிகளுடன் வீற்றிருந்து, 'சற்று பொறும் ஆண்டவரே! நாங்கள் என்ன அந்நிய பாஷை பேசவில்லையா? நாங்கள் கூச்சலிட்டு ஆவியில் நடன மாடவில்லையா? நாங்கள் பிசாசுகளைத் துரத்தவில்லையா? இவை அனைத்தையும் நாங்களும் செய்தோமே!'' என்பார்கள். ஆனால் அவர் கூறும் பதில் என்ன? "அக்கிரமச் செய்கைக் காரரே, என்னை விட்டு அகன்று போங்கள்; நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை.'' 190. அக்கிரமச் செய்கை என்பது என்ன? ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் அறிந்திருந்தும், அதைச் செய்யாமல் இருத்தலே அக்கிரமச் செய்கையாகும். அப்படிப்பட்டவர்கள் தேவனுடைய வார்த்தையை அறிந்து இருக்கின்றனர். அவர்கள் அதைக் கேட்டும் இருக்கின்றனர். இந்தப் பிரசங்க ஒலி நாடாக்களை நீங்கள் கேட்கின்றீர்கள், அது உண்மையென அவர் நிரூபிப்பதையும் நீங்கள் காண்கின்றீர்கள். சூரியன் உஷ்ணத்தை அளிப்பது போல், இது அவ்வளவு வெட்ட வெளிச்சமாய் இருக்கின்றது. ஆயினும், ஸ்தாபனங்களைச் சேர்ந்து கொண்டு, தவறான காரியங்களில் நிலை கொண்டிருப்பவர்களே! நீங்கள் தான் அக்கிரமச் செய்கைக்காரர். ''நான் ஒரு பெரிய கூட்டம் நடத்தினேன். நான் இதை செய்தேன், அதை செய்தேன்'' என்று நீங்கள் கூறலாம். ஆனால் இயேசுவோ, "அக்கிரமச் செய்கைக்காரரே, என்னை விட்டு அகன்று போங்கள். நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை'' என்கிறார். 191. 'பரிசுத்த ஆவி என்மேல் விழுந்ததே! நான் அந்நிய பாஷை பேசினேனே! நான் ஆவியில் பாடினேனே!... அதை நான் சிறிதேனும் சந்தேகிக்கவில்லை. ஆனால் சகோதரனே, சகோதரியே, இது நடுக்கமுறும் காலமாயுள்ளது. நாம் இப்பொழுது எந்த காலத்தில் இருக்கிறோம்? இந்தக் காலத்தில் தேவனுடைய வார்த்தை உயிர் பெறுகின்றது. 192. இங்கு ஒரு வசனத்தை எழுதி வைத்துள்ளேன். ''பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிற வனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பது இல்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? (தீர்க்கதரிசிகள் அபிஷேகம் பெற்றவர்கள். சரியா?) உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்''. மத்தேயு 7:21-22 இவைகளையெல்லாம் செய்து விட்டு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞான ஸ்நானம் பெற்றுக்கொள்ள மறுக்கலாமா? அது எவ்வளவு வஞ்சனையுள்ளது என்பதைப்பாருங்கள். அவர்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் வரை வந்து விட்டு, அதை ஏற்றுக் கொள்ளாமல் பின்வாங்கிப் போகின்றனர். தேவனுடைய வார்த்தை உங்கள் கண்களுக்கு முன்னால் உறுதிப்படுவதைக் காண்கிறீர்கள். எனினும், உங்கள் ஸ்தாபனங்களின் பேரிலுள்ள பற்றுதல் காரணமாக, தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக ஸ்தாபனங்களின் கோட்பாடுகளைப் பற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் எவ்வளவாக பிசாசுகளைத் துரத்தினாலும் எதை எதையோ செய்தாலும், இயேசு உங்களைப் பார்த்து, "நான் உங்களை ஒருக்காலும் அறியேன்” என்கிறார். பிலேயாம், ''நான் உம் நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்து அது அப்படியே நிறைவேறவில்லையா?'' என்பான். 193. அது சரி தான். ஆனால் தேவனுடைய வார்த்தையே ஏற்றுக் கொள்ள நீ மறுத்து விட்டாயே! ஓ சகோதரனே! எது உங்களை வஞ்சிக்கிறது என்பதை உங்களால் காண முடிகின்றதா? அடையாளங்களால் உறுதிப்படுத்தப்பட்டு வெளிப்படும் உண்மையான வார்த்தையை நீங்கள் நிராகரிப்பதால். 194. ஒவ்வொரு காலத்திலும் சாத்தான் உண்மையான வார்த்தைக்கு எதிராய் பாவனைகளைக் கொண்டு வந்தான். 195. காலங்கள் தோறும் அநேகர் எல்லை வரை வந்து, திரும்பிப் போய் விடுவதை அவன் அறிவான். எபிரெயர் 6-ம் அதிகாரத்தை சற்று பார்ப்போம். ''முள் செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாத்தாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக் கப்படுவதே அதின் முடிவு''. எபிரெயர் 6:8 எல்லை - பரம் ஈவை ருசி பார்த்தவர்களே! நீங்கள் அதை ருசி பார்த்து இருக்கின்றீர்கள். அதாவது, நீங்கள் அதைக் கண்டிருக்கின்றீர்கள். அதை வாயினால் ருசி பார்க்க முடியாது. நீங்கள் அதை கண்டிருக்கின்றீர்கள். அது சத்தியம் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் பரம் ஈவை ருசிபார்த்து, பரிசுத்தாவியைப் பெற்றும் இருக்கின்றீர்கள். தேவனுடைய நல்வார்த்தையை நீங்கள் ருசித்ததுண்டு. அது சரியென்று உங்களுக்குத் தெரியும்... பரிசுத்த ஆவி உங்கள் மேல் விழுந்தது. ஆனாலும் வயலிலுள்ள களைகளைப் போல் நீங்கள் பின்வாங்கிப் போய், உங்களை அழைத்து, பரிசுத்தப்படுத்தி, பரிசுத்த ஆவியை உங்களுக்கு அளித்த அதே கிறிஸ்துவை மறுதலிக்கின்றீர்கள். அந்த பாவத்தை நிவர்த்தி செய்ய பலி எதுவுமே இல்லை. அது மன்னிக்க முடியாத குற்றம். அவர்கள் மறுபடியும் சத்தியத்தின் அறிவை அடைவது மிகவும் கூடாத காரியம் (எபி.6:4-6). மழை களைகளின் மேலும் விழுந்தது. அவர்கள், ''இயேசுவே, நாங்கள் உம்மைப் பின் செல்வோம்'' என்று தொடக்கத்தில் கூறினர். ஆனால் தேவனுடைய வார்த்தைக்கு அவர்கள் வரும் போது, அவர்கள் பின் வாங்கிப் போகின்றனர். தேவனுடைய வார்த்தை தன்னை வெளிப்படுத்துவதை நீ கண்டு ருசித்த பின்பு, அதினின்று பின் வாங்கிப் போனால், அதை நீ மறுபடியும் காண்பது, அல்லது அது மறுபடியும் உன்னிடம் வருவது, கூடாத காரியம் என்று வேதவாக்கியங்கள் உரைக்கின்றன. வானமும் பூமியும் ஒழிந்துபோம். ஆனால் தேவனுடைய வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. அவர்களைப் புதுப்பிப்பது கூடாத காரியம் என்று வேதம் உரைக்கின்றது. ஆவியானவரும் அது சரியென்று சாட்சி பகருகின்றார். 196. ஒரு சிறு உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். மோசேயின் தீர்க்க தரிசனத்தின் கீழ் எகிப்தின் ஸ்தாபனத்தினின்று வெளி வந்த ஜனங்கள் மகத்தான அற்புதங்களையும் அடையாளங்களையும் கண்டனர். வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தின் எல்லை வரை அவர்கள் வந்தனர். 'ஏழு சபை காலம்' என்னும் புஸ்தகத்தை டாக்டர் லீவேயில் (Dr. Lee Vayle) இலக்கண ரீதியில் திருத்தி அமைத்துள்ளார். அவ்வமயம் ‘ஒருவர் பெயரை ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடுதல்' என்பதைக் குறித்த பிரச்சினை எழுந்தது. இது அநேக போதகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்புஸ்தகத்தைப் படிக்கும் வரை பொறுத்து இருங்கள். உங்களுக்குள் வெளிச்சம் இருக்குமானால், அது என்னவென்பதை அப்பொழுது கற்றுக்கொள்வீர்கள். 197. அதைக் குறித்து அதில் எழுதப்பட்டது சரியல்லவென்று நீங்கள் கூறி விட்டு, உங்கள் கண்களை மூடிக் கொள்ளலாம். அப்படியானால், சத்தியத்தை அறிந்து கொள்ள விரும்பவில்லை என்று அர்த்தமாகின்றது. அதை அறிய வேண்டுமானால், வெளிச்சம் வரவேண்டும். 198. இருளிலிருந்து வெளிச்சம் வருவதில்லை; ஆனால் இருள் உள்ள ஸ்தலத்திற்கு வெளிச்சம் வரும். ஆனால் இருளோ அதை அறிந்து கொள்வதில்லை. டர்னிப் (Turnip) என்னும் காய்கறியிலிருந்து இரத்தம் வர முடியாது. ஏனெனில் அதில் இரத்தம் இல்லை என்று என் தாயார் அடிக்கடி சொல்வார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்தவர்களல்ல. அவர்களுக்கு என்று நிலமோ, வீடோ, தேசமோ இருக்கவில்லை. ஆனால் அவர்களோ ஒரு பிரத்தியேக தேசத்தை அடைய வேண்டுமெனும் நோக்கத்துடன் பிரயாணம் செய்து கொண்டிருந்ததனர். அவர்கள் நம்மைப் போன்றவர்கள், நமக்கென்று ஒரு சபை கிடையாது; ஆனால் முதற்பேறான-வருடைய சபையை அடைய நாம் சென்று கொண்டிருக்கின்றோம். இச்சபை மகிமையில் இருக்கின்றதேயன்றி, அது மனிதனால் இவ்வுலகில் நிறுவப்பட்ட தல்ல. நித்திய ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்டு, ஸ்தாபனங்களின்று வெளி வரும்படி அழைக்கப்பட்டவர்கள், அந்த வீட்டை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர். இஸ்ரவேல் ஜனங்கள், அவர்கள் அடையவேண்டிய தேசத்தின் எல்லைக்கு வந்தபோது, தேவனுடைய வார்த்தையைச் சந்தேகிக்க முற்பட்டனர். யோசுவா, காலேப் முதலானோர் எல்லையைக் கடந்து சென்று, அங்கு ஒரு தேசம் இருக்கின்றது என்பதை நிரூபிக்க ஒரு திராட்சை குலையைக் கொண்டு வந்த போதிலும், அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். ''அது பாலும் தேனும் ஓடுகிற தேசம்'' என்று தேவனுடைய வார்த்தை உரைத்திருந்தது. இரண்டு ஒற்றர்கள் வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருந்த தேசத்திலிருந்து ஒரு திராட்சை குலையைச் சுமந்து வந்து, எல்லைக்கு இப்புறம் கொணர்ந்து, அங்கு ஒரு தேசம் உண்டு என்பதை நிரூபித்தனர். இஸ்ரவேலர் அதை ருசி பார்த்து விட்டு, அதன் பின்பு ''உங்களால் முடியாது” என்றனர். அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் வனாந்தரத்திலே அழிந்து போயினர். அவர்கள் அங்கேயே ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு மரித்துப் போயினர். எல்லைக்கு அப்புறம் சென்று அங்கு ஒரு தேசம் உண்டு என நிரூபித்துக் காண்பித்த யோசுவா, காலேப், இவர்களைத் தவிர மற்றவர் எல்லோரும் மாண்டு போயினர். 199. கர்த்தர் அவர்கள் பாவங்களை மன்னிக்கவேயில்லை. அவர்களிடம் மறுபடியும் அவர் எப்படி வருவார்? அவர்கள் தொடக்கத்தில் முட்களாய் இருந்தனர்; முடிவு வரை அவர்கள் முட்களாகவே இருப்பார்கள். முன் குறிக்கப்பட்டவர்கள் மாத்திரமே சத்தியத்தை அறிந்து கொள்ளமுடியும். 200. இருள் காலங்களுக்கு முன்பு வாழ்ந்த பரி.மார்டினின் நாட்களில் இருந்தது போல் அது இருக்கும். பரி.மார்டின் தெய்வ பக்தி கொண்ட ஓர் எளிமையான மனிதன். அவர் எழுதி வைத்துள்ளதை உங்களில் அநேகர் படித்திருப்பீர்கள். அது வைக்கப்பட்டுள்ள நூலகத்திற்கு நாங்கள் சென்ற போது, அங்கிருந்த கத்தோலிக்க குருவானவர் ஒருவர் எங்களிடம், ''அவர் கத்தோலிக்க சபையால் பரிசுத்தமானவர் என்று தீர்மானிக்கப்படவில்லை” என்றார். அவர்கள் அவரைப் பரிசுத்தவானாகக் கருதாவிட்டாலும், கர்த்தர் அவரைப் பரிசுத்தவானாகக் கருதுகின்றார். அவரே மூன்றாம் சபையின் தூதன் என்று எழுதும்படி பரிசுத்த ஆவியானவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். 201. அவர் எவ்வளவு தெய்வீகமுள்ளவர் என்பதைப் பாருங்கள். அவர் பெற்றோர் அஞ்ஞானிகளாக இருந்த போதிலும், அவர் அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்டார். அவர் தகப்பனார் ஒரு இராணுவ வீரர். எனவே அவரும் அதைப் பின்பற்றி இராணுவ வீரரானார். தேவன் ஒருவர் எங்கேயோ இருக்கிறார் என்று அவர் உறுதியாய் விசுவாசித்தார். ஆதலால் அங்கே அந்த சிருஷ்டிப்பில் அவரால் தேவனைக் காணமுடிந்தது. ஒரு நாள் ஒரு பட்டணத்தின் வழியாக அவர் சென்று கொண்டிருந்தபோது, மிகவும் குளிரான அந்த இரவில் ஒரு வயோதிபர் நிர்வாணமாய் படுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த வயோதிபர் வழிப்போக்கர்களிடம், போர்த்துக் கொள்ள ஏதாவது கொடுக்க வேண்டுமென்றும், இல்லையேல் அவர் மரித்துப் போக நேரிடுமென்று கெஞ்சினார். 202. ஆனால் அவருக்கு உதவி செய்ய யாருமே முன் வரவில்லை. வழி ஓரத்தில் நின்று கொண்டிருந்த மார்டின் அவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார். மார்டினிடம் ஒரு மேலங்கி (Coat) மாத்திரமே இருந்தது. அதை அந்த வயோதிபருக்கு அவர் கொடுத்துவிட்டால், அவர் குளிரில் உறைந்து போய் விடுவார். அச்சமயம் அவர் தன் உத்தியோக ஈடுபாட்டில் இருந்தார். அவர் தனக்குள், ''நாங்கள் இருவரும் சாகாமல் பிழைக்க ஒரே ஒரு வழியுண்டு. என் மேலங்கியை இரண்டு துண்டுகளாக வெட்டுவேன்'' என்று சொல்லிக் கொண்டு, அதை இரண்டாக வெட்டி, ஒரு பாதியினால் தம்மை போர்த்துக் கொண்டார். அரை மேலங்கியுடன் அவரைக் கண்ட வழிபோக்கர் அனைவரும் “கேலிக்குரிய சிப்பாயைப் பாருங்கள், அரை பகுதி துணியினால், தன்னை மூடி இருக்கிறானே” என்று அவரைப் பரிகாசம் செய்தனர். 203. அடுத்த நாள் அவர் ஓய்வு பெறும் நாளாயிருந்தது. அவர் காலையில் படுக்கையை விட்டு எழுந்தபோது, வயோதிபரை அவர் போர்த்திய அந்த அரை மேலங்கியைப் போர்த்தியவராய், இயேசு கிறிஸ்து அவர் அறையில் வந்து நின்றார். ''இச்சிறியரில் நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை நீங்கள் எனக்கே செய்தீர்கள்” என்னும் வசனத்தின் அர்த்தத்தை அவர் உடனே அறிந்து கொண்டார். அவர் காலத்தில் இருந்த ஸ்தாபனம் அவரைப் பரிகசித்து உதறித் தள்ளிற்று. ஆனால் அவரோ உண்மையான தேவனுடைய தீர்க்கதரிசி. அவர் கூறின யாவும் நிறைவேறின. அக்காலத்தில் அநேகர் அவரைத் தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொண்டனர். 204. நான் இப்பொழுது உங்களிடம் எடுத்துக் கூறமுற்படுவது பிசாசு எத்தகைய வஞ்சகமுள்ளவன் என்பதாகும். ஒரு நாள் மார்டின் தம் அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு மகத்தான தூதன் பொற்பாதரட்சை அணிந்து, கிரீடம் சூடி, பொற்சரிகை தைக்கப்பட்ட அங்கி ஒன்றை உடுத்தினவனாய் அவர் முன் நின்றான். அவன் மார்டினைப் பார்த்து, ''மார்டின் என்னைத் தெரிகிறதா? நான் தான் உன் இரட்சகர், உன் மீட்பர், உன்னை இரட்சித்தவர் நானே. என்னைப் பணிந்து கொள்'' என்றான். ஆனால் அந்த தீர்க்கதரிசி அதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது என்று அறிந்து கொண்டு, வேத வசனங்களை நினைவிற்குக் கொண்டு வந்தவராய், அவனையே உற்று நோக்கினார். 205. மறுபடியும் தூதன், "மார்டினே, என்னைப் பணிந்து கொள்'' என்று கூறிய மாத்திரத்தில், மார்டின், 'அப்பாலே போ சாத்தானே, உன் தலையில் இப்பொழுது கிரீடம் காணப்படுகின்றது. ஆனால் காலத்தின் முடிவில் பரிசுத்தவான்கள் அவருக்குக் கிரீடம் சூட்டுவார்கள் என்றல்லவா எழுதியிருக்கிறது” என்று பதிலுரைத்தார். அது பெந்தெகொஸ்தே கண்ணியைப் போன்றதல்லவா? சகோதரனே, தேவன் உடைய வசனத்தின்பால் எப்பொழுதும் கவனமாயிருப்பது நன்மைப் பயக்கும். 206. ஒரு மடத்தில் அநேக துறவிகள் (monks) வாழ்ந்து வந்தனர். அவர்கள் இடையே ஒரு துறவி இருந்தார். அவருக்கு விரைவில் கோபம் வந்துவிடும். கவனியுங்கள், இந்நாட்களுக்கு இது ஒரு நல்ல உவமையாக அமையும். மற்றவர் எல்லாரிலும் அவர் மிகவும் உயர்ந்தவர், மேலானவர் என்றெல்லாம் அவர் கற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் மிகவும் கர்வம் படைத்தவர். ஒரு நாள் அவர், "கர்த்தர் என்னைத் தீர்க்கதரிசியாகத் தெரிந்து கொண்டு இருக்கிறார்” என்று அங்குள்ள துறவிகளிடம் கூறினார். ஏற்கனவே பரி. மார்டின் அத்தேசத்தின் தீர்க்கதரிசியாகப் பிறந்திருந்தார். 207. 25-வயதுள்ள இத்துறவியோ, “கர்த்தர் என்னைத் தீர்க்கதரிசியாகத் தெரிந்து கொண்டுள்ளார் என்பதை நான் உங்களுக்கு நிரூபிக்கப் போகின்றேன். இன்றிரவு கர்த்தர் என்னை மெல்லிய வெண் வஸ்திரத்தால் உடுத்துவிப்பார். நான் உங்கள் மத்தியில் வீற்றிருப்பேன். நீங்கள் என்னிடம் வந்து கட்டளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். 208. அதை இந்நாளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.''.... நான் ஸ்தாபனத்தின் தலைவனாக இருப்பேன். உங்கள் எல்லோரையும் நான் பராமரிப்பேன்''. அன்றிரவு அந்தக் கட்டிடத்தில் பிரகாசமான வெளிச்சம் தோன்றியது. பரி.மார்டின் இதை எழுதி வைத்துள்ளார். நீங்களே அதைப் படித்துப் பார்க்கலாம். இது உண்மையாக சம்பவித்த வரலாறு. அங்கு பிரகாசமான வெளிச்சம் தோன்றியது. இந்த வாலிபத் துறவி மற்ற துறவிகள் மத்தியில் வெண்வஸ்திரம் தரித்தவராய் வந்து நின்றார். அவர் துறவிகளிடம் வெண் வஸ்திரத்தைக் காண்பித்தவாறு, "நான் கூறினது உண்மையல்லவா என்று பாருங்கள்” என்றார். ஆனால் அது தேவனுடைய வார்த்தைக்கு முரண்பட்டதாக அமைந்திருந்தது. 209. அந்த மடத்திலிருந்த கல்லூரியின் தலைவரை அவர்கள் அழைத்து வந்தனர். அவர் ஆலோசனை செய்து கொண்டே இங்கும் அங்கும் நடந்தார். பின்பு அவர், "மகனே, இது சரியென்று எனக்குத் தோன்றவில்லை, அது இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதம் என்பது உண்மையே. ஆனால் அது வார்த்தையுடன் சரிவர பொருந்தவில்லை. நம்மிடையே அபிஷேகம் பெற்ற மார்டின் என்னும் பெயர் கொண்ட தீர்க்கதரிசி ஒருவர் இருக்கிறார். அவரிடம் செல்வோம் வாருங்கள்” என்றார். அதுவே தற்கால பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தவராயிருந்தால், "ஆஹா! அது மகா அற்புதம்'' என்று ஆர்ப்பரித்து இருப்பார்கள். அந்த வாலிபத் துறவியோ, “இல்லை! இல்லை! மார்டினுக்கும் இதற்கும் எவ்வித தொடர்புமில்லை'' என்று கூறி வர மறுத்தார். 210. கல்லூரித் தலைவரோ, 'நீங்கள் அங்கு போகத்தான் வேண்டும்'' என்று கூறி அவர் கையைப் பிடித்து இழுத்து வந்து மார்டினின் முன் நிறுத்தினார். உடனே அவர் மேலிருந்த அந்த வெண்வஸ்திரம் மறைந்து விட்டது. 211. ஆகவே, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்கும். "என் ஆடுகள் என் வசனத்தை அறிந்து கொள்ளும்'' என்று இயேசு கூறியுள்ளார். ''அப்படியல்ல; என் ஆடுகள் என் சத்தத்துக்குச் செவி கொடுக்கும்'' என்று தானே அவர் கூறினார்” என்று நீங்கள் கூறலாம். அவருடைய சத்தம் தான் அவருடைய வார்த்தை. "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” (மத்.4:4). பாருங்கள், முன்குறிக்கப் பட்டவர்கள் இதை அறிந்து கொள்வார்கள். ஒரு அன்னியனின் வார்த்தைக்கோ அல்லது சத்தத்துக்கோ அவர்கள் செவி கொடுக்க மாட்டார்கள். அந்த துறவிகளும் அன்னியனின் சத்தத்தைப் பின்பற்றவில்லை. மார்டின் அங்குள்ளார் என்பதையும், அவர் அக்காலத்துக்கென தேவனால் தீர்க்க தரிசியாக நியமிக்கப்பட்டு, அவருடைய வார்த்தையினால் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறார் என்பதையும் அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். எனவே தான், அந்த வாலிபத் துறவி அவர் முன் நிற்க மறுத்தார். 212. "பிணம் (அதாவது அந்தந்த காலத்துக்குரிய தேவனுடைய வார்த்தை ) எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும்” (மத்.24:28) என்று இயேசு கூறினார். பிணம் என்பது மன்னா அல்லது தேவனுடைய வார்த்தையைக் குறிக்கின்றது. அங்கே கழுகுகள் கூடும். 213. நான் துரிதமாக முடிக்கவேண்டும். கடிகாரத்தைப் பார்த்த போது, அதில் பன்னிரண்டு மணி அடித்து எட்டு நிமிடங்கள் ஆகி விட்டன. நான் துரிதமாக முடிக்க முயல்கிறேன். தொலைபேசியின் மூலம் செய்தியைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களை இவ்வளவு நேரமாக தாமதிக்கச் செய்ததால் வருந்துகிறேன். ஆனால் இதற்கென்று நீங்கள் செலவு செய்யும் பணம் வீணல்ல. பணம் ஒழிந்துபோம், ஆனால் இது ஒருக்காலும் ஒழியாது. ஏனெனில் இது தேவனுடைய வார்த்தையாகும். 214. பிணம் எங்கேயோ - அதாவது நாறிப்போகாத புதிய மாமிசம் எங்கேயோ (காலத்துக்குரிய தேவனுடைய வார்த்தை) அங்கே கழுகுகள் கூடும். அது அழுகி நாற்றமெடுத்த பிறகு, பருந்துகள் சூழ்ந்து கொண்டு அந்த நாறிப்போன மாமிசத்தை உண்ணும். நான் கூறுவது உங்களுக்கு அர்த்தமாகின்றதா? நாற்றமெடுத்த பிறகு கழுகுகள் அதன் அருகே வருவது கிடையாது. ''பிணம் எங்கேயோ - அதாவது மன்னா எங்கே விழுகின்றதோ'' என்று இயேசு கூறினார். அந்த காலத்துக்குரிய மன்னா விழுந்தவுடன், கழுகுகள் அங்கு கூடுகின்றன. மன்னா அழுகி நாற்றமெடுத்து புழுத்துப்போன பின்பு, பருந்துகள் அங்கு வந்து அடையும். அழுகின நாற்றம் தான் பருந்துகளைக் கவர்ந்து கொள்ளும். 215. எனவே தான், இயேசு மத்தேயு 23:36, ''எருசலேமே எருசலேமே... கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்” என்றார். ('நான்' என்று அவர் கூறுவதைக் கவனிக்கவும். அவர் யார்?) "... உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே!'' யார் அங்ஙனம் செய்தது? எருசலேமிலிருந்த அந்த மகத்தான சபை. 216. நாம் பூமியில் காணப்படும் எருசலேமைச் சார்ந்தவர்கள் அல்ல, பரம எருசலேமைச் சார்ந்தவர்கள். முன் குறிக்கப்பட்டவர்களுக்கு அங்கிருந்து தான் தேவனுடைய வார்த்தை புறப்பட்டு வருகின்றது. அழிந்து போகும் பழைய எருசலேமை அல்ல. என்றென்றும் அழியாத புதிய எருசலேமை நாம் சார்ந்தவர்கள் - மனிதனால் கட்டப்பட்ட பழைய எருசலேம் அல்ல, தேவனால் கட்டப்பட்ட புதிய எருசலேம். அங்கு இருந்த வார்த்தை தான் இப்பொழுது நமக்கு வெளிப்படுகின்றது. "என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப் போகிறேன்'' (யோவான் 14:2). சிருஷ்டி கர்த்தர் பொன் தளம் போட்ட வீதிகள் உள்ள ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுகிறார். அதுவே என்றென்றும் அழியாத எருசலேமாகும். 217. "எருசலேமே, எருசலேமே... நான் எத்தனை தரமோ...'' மூன்றாவது ஆள் அல்ல, அல்லது வேறொவர் அல்ல, நானே. 'கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழ் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக, நான் எத்தனை தரமோ உங்களைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று; ஆனால் இப்பொழுது உங்கள் நேரம் வந்துவிட்டது' பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும். பிணம் அழுகி நாற்றமெடுத்த பிறகு, பருந்துகள் அங்கு வந்து கூடும். 218. மோசே ஒரு கழுகு. நோவா மீதி வைத்துப் போனதை அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுக்கவில்லை. அவன் தேவனிடத்திலிருந்து புதிதாக வார்த்தையைப் பெற்றான். தேவனாகிய கர்த்தர் என்னை வனாந்தரத்தில் சந்தித்து, அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்தி, உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வரும்படி என்னை அனுப்பினார்'' என்று அவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறினான். அதன் பின்பு, போலியாட்கள் தோன்றினர். ஆனால் மோசேயிடமோ அக்காலத்துக்குரிய தேவனுடைய வார்த்தை இருந்தது. ஏனெனில் கர்த்தர் ஆபிரகாமிடம், “உன் சந்ததியார் அன்னிய தேசத்தில் நானூறு வருஷம் சஞ்சரிப்பார்கள். ஆனால் நான் அவர்களைச் சந்தித்து, பலத்த கரத்தினால் அவர்களை வெளியே கொண்டு வருவேன்'' என்று வாக்களித்திருந்தார். (ஆதி.15:13-14). 219. மோசே, "தேவனாகிய கர்த்தர் என்னுடன் பேசி, நான் செய்ய வேண்டியதை எனக்குக் காண்பிப்பார். நான் செய்ய வேண்டியது என்ன என்பதை அவர் ஏற்கனவே எனக்குத் தெரியப்படுத்தி இருக்கிறார். நான் அதை உங்களுக்கு அறிவிப்பேன். இருக்கிறேன் என்பவர் என்னை அனுப்பினார்” என்றான். 'இருந்தேன்' அல்லது 'இருப்பேன்' என்பவர் அல்ல, 'இருக்கிறேன்' என்பவர்- நிகழ் காலம், இப்பொழுதுள்ள வார்த்தை. 'இருக்கிறேன்' என்பவர் வார்த்தை. 'ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. "இருக்கிறேன் தேவன். இது உண்மையென நிரூபிக்க என்னை அவருடைய தீர்க்கதரிசியாக அனுப்பினார். நான் இங்கு வந்து இவைகளைச் செய்ய வேண்டுமென்று கட்டளையிட்டார்'' 220. மோசே அவன் அடையாளத்தை பார்வோனின் முன்னிலையில் செய்து காண்பித்த போது, பார்வோன், ''இம்மாதிரி அடையாளங்களைச் செய்து காண்பிக்க எங்கள் குழுவிலும் அநேகர் இருக்கின்றனர்” என்றான் - பாவனை செய்பவர். இதுவே கடைசி நாட்களில் மறுபடியும் சம்பவிக்கும் என்று இயேசு கூறியுள்ளார். பாவனை செய்பவர் கடைசி நாட்களில் தோன்றி, ''எங்களாலும் இவைகளைச் செய்ய முடியும்'' என்று கூறுவார்கள். ஆனால் யார் முதன் முதலாக வந்தது என்றும், யார் தேவனுடைய வார்த்தையில் நிலை நின்றது என்பதையும் கவனிக்கவேண்டும். 221. நோவாவின் காலத்துக்குரியதை மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்கு அளிக்கவில்லை. மோசே அவர்களிடம், 'ஒரு பேழையை உண்டாக்குங்கள்'' அது தான் தேவனுடைய வார்த்தை. ஏனெனில் ஒரு காலத்தில் நோவா ஒரு பேழையை உண்டாக்கினான்'' என்று கூறவில்லை. இல்லை, பருந்துகள் மாத்திரமே அதை தின்று கொண்டிருக்கும். 222. ஆனால் மோசேயோ, அவன் நாட்களுக்குரிய முன் குறிக்கப்பட்ட தேவன் உடைய வார்த்தையை நேரடியாக தேவனிடமிருந்தே பெற்றுக்கொண்டான். மோசே மீதி வைத்துப் போனதை இயேசு ஜனங்களுக்கு அளிக்கவில்லை. மோசே, அவன் காலத்துக்குத் தேவையான வார்த்தையைப் பெற்றுக் கொண்டான். ஏனெனில் அவன் ஒரு தீர்க்கதரிசி. ஆனால் தேவனே இயேசுவாகத் தோன்றினார். மோசே மீதி வைத்துப் போனதை இயேசு ஜனங்களுக்குப் பரிமாறவில்லை. ஆனால் அக்காலத்திலிருந்த ஸ்தாபன பருந்துகள் பெருந்திண்டிக்காரர் போல் மோசே மீதி வைத்துப் போனதை விழுங்கினார்கள். 223. "எங்களுக்கு மோசே இருக்கிறான், நீ அவசியமில்லை'' என்றார்கள். இயேசு அவர்களிடம், ''நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விவாசிப்பீர்கள்; அவன் என்னை குறித்து எழுதியிருக்கிறானே” என்றார். (யோவான்-5:46). அவர் என்ன அர்த்தத்தில் கூறினாரென்றால், பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும். புதிதாகக் கொல்லப்பட்ட பிணமாகிய தேவனுடைய வார்த்தை, தேவனுடைய வார்த்தை வளர்க்கப்பட்டு, கொழுக்க வைக்கப்பட்டு, கொல்லப்பட்டு, அவருடைய பிள்ளைகளுக்கு புதிதாக அளிக்கப்படுகின்றது. ஆனால் அதே சமயத்தில் நூற்றாண்டுகளாக அழுகிப் போன மாமிசமும் அங்குள்ளது. இப்பொழுதும் அதே சூழ்நிலையில் தான் உள்ளது. மார்டின் லூதர் 'மனந்திரும்புதல்' என்னும் செய்தியைக் கொண்டிருந்தார். ஓ! லூதர் பருந்துக் கூட்டமே! அவ்வாறே பாப்டிஸ்டுகளுக்கும் அவர்கள் காலங்களில் ஒரு செய்தி அளிக்கப்பட்டது. ஓ! பாப்டிஸ்ட் பருந்துக் கூட்டமே! பெந்தெகொஸ்தே-யினருக்கும் ஒரு செய்தி அளிக்கப்பட்டது. ஓ! பெந்தெகொஸ்தே பருந்துக் கூட்டமே! ஆனால் பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும். 224. லூதரின் காலத்திலிருந்த ஒரு தூதனுக்கு கத்தோலிக்க அழுகின மாமிசத்தைப் புசிக்கக் கொடுக்கக்கூடாது. இல்லை ஐயா, அவனுக்குப் புதிய மாமிசம் கொடுக்கப்பட வேண்டும். அது அன்று வாழ்ந்த சபை காலத்துக்கு உரியதாகும். அவ்வாறே வெஸ்லியின் காலத்திலிருந்த ஒரு மெதோ டிஸ்ட்டுக்கு லூதரின் செய்தி கொடுக்கப்பட முடியாது. அவனுக்கு அந்த நாறிப்போன மாமிசம் தேவையில்லை. அது அழுகிப் போனது. ஏனெனில் ஜீவன் அதை விட்டு விலகி வேறொன்றுக்குள் சென்று விட்டது. அதாவது கோதுமை தண்டில் இருந்து சத்து (ஜீவன்) வேறொன்றுக்குள் பிரவேசிப்பது போன்றதாகும் இது. அவ்வாறே இயேசுகிறிஸ்துவின் மணவாட்டிக்கும் பெந்தெகொஸ்தரின் செய்தி அளிக்கப்பட முடியவே முடியாது. புழு புழுத்த ஸ்தாபனத்தின் செய்தியையா அவர்களுக்கு அளிப்பது? இல்லவே இல்லை. அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தம் என்னவெனில். "இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிற தற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்'' மல்கியா 4:5 225. இயேசு இவ்வுலகில் தோன்றின போது திரளான பருந்துக் கூட்டங்களைக் கண்டார். "எங்களுக்கு மோசேயும் நியாயப் பிரமாணமும் உண்டு'' என்று அவர்கள் சொன்னார்கள். மோசேயின் காலத்தில் அது கொல்லப்பட்டு, அவன் காலத்தில் வாழ்ந்தோர்க்கு ஆகாரமாக அளிக்கப்பட்டது. அது அவன் காலத்துக் உரியதாகும். அதை கொன்று அவர்களுக்கு ஆகாரமாக அளித்த மோசே, ''உன் தேவனாகிய கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவிலே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவி கொடுப்பீர்-களாக” (உபா.18:15) என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். 226. இயேசுவைக் குறித்து பழைய ஏற்பாட்டில் காணப்படும் ஏறக்குறைய 600-தீர்க்கதரிசனங்கள், அவர் இவ்வுலகில் தோன்றிய போது நிறைவேறின. மேலும் அநேக தீர்க்கதரிசனங்கள் அவருடைய வாழ்க்கையின் இறுதி 7-8 மணி நேரங்களில் நிறைவேறின. அந்தத் தீர்க்கதரிசிகள் உரைத்த எல்லா தீர்க்கதரிசனங்களுமே பிழையின்றி நிறைவேறின. 227. இன்னும் ஒரு ஆண்டு காலத்திற்குள் ஒரு காரியம் நிறைவேறும் என்று இன்றைக்கு நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது நிறைவேற இருபது சதவிகிதம் வாய்ப்பு உண்டு. ஒரு குறிப்பிட்ட நாளில் அது சம்பவிக்கும் என்று நான் திட்டவட்டமாக முன்னறிவித்தால், அது அந்த நாளில் நிறைவேறும் என்பதற்கு அதைக் காட்டிலும் சொற்ப வாய்ப்பே உண்டாகும். அதனுடன்கூட, அது எந்த இடத்தில் சம்பவிக்குமென்றும், அது யாருக்கு சம்பவிக்கும் என்றெல்லாம் நான் விளக்கமாகத் தீர்க்கதரிசனம் உரைத்தால், அது நிறைவேறும் என்பதற்கு அதனைக் காட்டிலும் இன்னும் சொற்ப வாய்ப்பு தான் உண்டாகும். ஆனால் மேசியாவைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் பிழையின்றி அவ்வாறே நிறைவேறினது. அவர் தேவாலயத்தில் வேதாகமத்திலிருந்து ஒரு வசனத்தைப் படித்த போது, அதில் ஒரு பாகத்தை மாத்திரமே படித்து விட்டு நிறுத்திக் கொண்டார். ''கர்த்தருடைய ஆவியானவர் என் மேல் இருக்கிறார்; தரித்திரருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அனுப்பினார்.'' (லூக்கா 4:19, ஏசாயா 6:2), அது வரையில் தான் அவர் முதலாம் வருகையின் மூலம் நிறைவேறினது. அதன் மற்றொரு பாகம் அவர் 2-ம் வருகையின் போது நிறைவேறும். ஆமென்! வானமும் பூமியும் ஒழிந்துபோம், அவர் வார்த்தையோ ஒழிந்து போவதில்லை. அவர் தான் அந்நேரத்தின் வார்த்தையாயிருந்து அவர்களை போஷிக்கிறவராய் இருந்தார். 228. இஸ்ரவேல் ஜனங்களைப் போஷிக்கும் வார்த்தையாக மோசே அவன் காலத்தில் இருந்தான். அவன் அவர்களுக்குச் சத்தியத்தை எடுத்துரைத்தான். கழுகுகள் ஆகாரம் உண்டு வீடு திரும்பும் போது, சிறிது ஆகாரத்தை மிச்சம் வைத்து விட்டு செல்லும். அவர்களோ மீதியாயுள்ள அந்த ஆகாரத்தை வைத்துக் கொண்டு பருந்துகளுக்கென்று ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்வார்கள். ஆனால் கழுகுகளோ; தேவனுடைய வார்த்தையிலிருந்து ஏதாவதொன்றைப் புதிதாகப் பெற்றுக் கொள்ளக் காத்திருக்கும். அவர்கள், "அவை சம்பவிக்கும் என்று வேதம் உரைக்கின்றது. நேற்றைய தினம் கலைமான் (Caribou) கிடைத்தது. நாளை எங்களுக்கு ஆடு கிடைக்கும். கலைமானின் மாமிசம் நாற்ற மெடுத்துவிட்டது. இன்றைக்கு எங்களுக்கு ஆட்டு இறைச்சி கிடைக்கும்” என்பார்கள் - தூதரின் அப்பம். ஜனங்கள் ஒரு காலத்தில் மன்னாவைப் புசித்தார்கள். அதை அடுத்த நாள் வைத்தால் கெட்டுப் போகும். அந்த உதாரணங்கள் எவ்வளவு அழகாய் பொருந்துகின்றது அல்லவா? 229. இயேசுவின் காலத்திலிருந்த பருந்துகளும் பிசாசுகளைத் துரத்தின - நாறிப் போன மாமிசம் புசித்த அபிஷேகம் பெற்றவர்கள் இயேசுவின் காலத்தில் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். பிரதான ஆசாரியனான காய்பா தீர்க்கதரிசனம் உரைத்தான். அவன் அந்த வருடத்தில் பிரதான ஆசாரியனாய் இருந்தபடியால் தீர்க்கதரிசனம் உரைத்தான் என்று வேதம் கூறுகின்றது. அவன் அழுகிப் போனதைத் தின்னும் தோட்டி, ஒரு முள், களை. கோதுமை மணிகளின் மத்தியில் அவன் வீற்றிருந்தான். உண்மையான பரிசுத்தாவி அவன் மேல் தங்கி இருந்தததால், அவன் போதனை செய்து, தீர்க்கதரிசனம் உரைத்து, வரப் போகும் காரியங்களை முன்னறிவித்தான். ஆயினும் அக்காலத்தில் வெளிப் பட்ட தேவனுடைய வார்த்தையை அவன் மறுதலித்து, அவரைச் சிலுவையில் அறைந்தான். ஓ, சகோதரனே, உங்களுக்குச் சத்தியத்தை உணர்த்த இன்னும் எவ்வளவு நேரம் நான் இவைகளைக் கூற வேண்டும்-? ஏறத்தாழ 10 பக்கங்கள் கொண்ட வேத வாக்கியங்களை நான் நிரூபிப்பதற்கென்று வைத்திருக்கிறேன். எத்தனை வேத வாக்கியங்களை நான் எடுத்துரைக்க வேண்டும்-? ''அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப் பண்ணி...'' அதே காரியம். 230. அவர்கள் பிசாசுகளைத் துரத்தினர் என்பதற்குச் சான்றாக இயேசு இதை கூறினார். ''நான் பெயல்செபூலினாலே பிசாசுகளை துரத்தினால் உங்கள் பிள்ளைகள் அவைகளை யாரால் துரத்துகிறார்கள்.'' ''நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிற படியால் தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே.'' லூக்கா 11:19,20 மேலும் அவர், "நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகி-றேன்; உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்?'' என்று கேட்டார். அவர்கள் பிசாசுகளைத் துரத்தினார்கள், தீர்க்கதரிசனம் உரைத்தார்கள் என்றாலும், இயேசு தான் அக்காலத்திற்கென அளிக்கப்பட்ட வார்த்தை என்பதை அவர்களால் கண்டு கொள்ள முடியவில்லை. ஏன்? ஏனெனில் அவர்களுடன் அவர் தொடர்பு கொள்ளவில்லை. இப்பொழுது மறுபடியும் மத்தேயு 24:24ஐப் படியுங்கள். “கள்ளக் கிறிஸ்துக்களும் கள்ள தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர் களையும் வஞ்சிப்பார்கள்...'' 231. அவர் தேவனுடைய வார்த்தையினால் பிசாசுகளைத் துரத்தினால் (ஏனெனில் அவரே தேவனுடைய வார்த்தை), உங்கள் ஸ்தாபனத்தின் பிள்ளைகள் அவைகளை யாரால் துரத்துகிறார்கள்? தேவன் மாத்திரமே பிசாசுகளைத் துரத்த முடியும் என்பதை நாமறிவோம். ஏனெனில் ஒருவனை வீட்டை விட்டுத் துரத்த வேண்டுமென்றால், அவனைக் காட்டிலும் பலவான் ஒருவன் அவசியம். கடைசி நாட்களில் அந்திக்கிறிஸ்து எழும்பி, அற்புதங்களையும் அடையாளங்-களையும் செய்து, உலகத் தோற்ற முதல் ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியில் வாழும் அனைவரையும் (கிறிஸ்தவர்கள் உட்பட) வஞ்சிப்பான் என்று வெளி.13:8 உரைக்கிறது. இது மத்தேயு.24:24ன் பதிலாயிருக்கின்றது. ஆரஞ்சு மரத்தின் வேரிலுள்ள ஜீவன் (சத்து) மேல் நோக்கிச் சென்று, ஒட்டுப் போடப்பட்டுள்ள கிளைகள் அனைத்திலும் பாய்ந்து, அதனோடு நின்று விடாமல் ஸ்தாபனங்களின் ஒட்டுகளையும் கடந்து மேல் நோக்கிச் சென்று மரத்தின் மேல் பாகத்தில் தன் சொந்த ஆரஞ்சு பழங்களைக் கொடுக்கின்றது. 232. தாவீது தேவனுடைய ஊழியத்தைச் செய்யவேண்டுமென்று மிகவும் உத்தம மனப்பான்மையோடு இருந்தான். ஆனால் அதற்கென்று அவன் நியமிக்கப்படவில்லை. இந்த அபிஷேகம் பெற்றவர்கள் தேவனுடைய உபதேசங்களுக்கு (வெளிப்பட்ட வார்த்தைக்கு) பதிலாக மனிதருடைய கற்பனைகளைப் போதிக்கின்றனர் என்று இயேசு கூறினார். கிறிஸ்து முன் காலத்தில் வாழ்ந்தார் என்று வரலாறு கூறுகின்றது என்று அவர்கள் பிரசங்கிக்கின்றனர். ஆனால் அவர் இருக்கிறேன்' என்பவர். அவ்வாறே வேதம் நமக்குப் போதிக்கின்றது. அவர் 'இருந்தவர் அல்லது 'இருக்கப் போகிறவர்' என்று அல்ல, இப்பொழுது, 'இருக்கிறவர்' எல்லா காலங்களிலும் ஜீவிக்கும் வார்த்தையே அவர். தொடக்கத்தில் அவர் கோதுமை தண்டில் இருந்தார்; பின்னர் பட்டுக் குஞ்சத்தை அடைந்தார். அதன் பின்பு அவர் பதரில் இருந்தார். ஆனால் இப்பொழுதோ அவர் கோதுமை மணியில் இருக்கின்றார். நீங்கள் திரும்பவும் பின்நோக்கிச் சென்று வாழ போகின்றீர்களா? 233. பதரை விட்டு ஜீவன் (சத்து) புறப்பட்டு அது உலர்ந்து விட்ட பிறகு, மறுபடியும் ஜீவன் அதற்குள் செல்லும் என்று நினைக்கின்றீர்களா-? ஒரு போதும் இல்லை. ஒரு தரம் பிரகாசிக்கப்பட்டும், வார்த்தையுடன் நகர்ந்து செல்லாதவர்களைப் புதுப்பிக்கிறது கூடாத காரியம் (எபி.6:4). அவர்கள் ஆவிக்குரிய பிரகாரம் மரித்து விட்டனர். அவர்கள் புறம்பாக்கப்படும் முட் புதராயிருக்கின்றனர். சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு. நான் கூறுவது உண்மை. 234. அவர்கள் சரித்திரப் பிரகாரமான ஒரு தேவனைக் குறித்துப் போதித்து, இறந்த காலத்தில் வாழ்ந்து, ''வெஸ்லி இன்ன இன்ன விதமாகக் கூறினார்'' என்கின்றனரேயன்றி, இக்காலத்துக்கென்று அளிக்கப்பட்டுள்ள மன்னாவாகிய வாக்குத்தத்தம் செய்யப்பட்ட வார்த்தையை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அவர்கள் லூதரன், பாப்டிஸ்ட், பெந்தெகொஸ்தே போன்ற திராட்ச ரசங்களைப் புதிய துருத்திகளில் வார்த்து வைக்க முயல்கின்றனர். ஆனால் தற்காலத்தில் அளிக்கப்பட்டுள்ள புதிய திராட்ச ரசத்தை அவர்கள் ஸ்தாபனம் என்னும் துருத்திகளில் வார்க்கும் போது, அவர்களின் மதிகேடு வெளிப்படுகின்றது. அவர்கள் அவ்விதம் செய்ய இயலாது. ஏனெனில் அது வெடித்துவிடும். 235. சகோதரனே, தேவனுடைய வார்த்தையை தேவனுடைய வார்த்தையாலே நான் பரிபூரணமாக காண்கிறேன். மேதகு அவர்களே, நாம் அதை கொண்டு இருக்க முடியாது. அத்தகையக் காரியங்களை நாம் வைத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் அது வெடித்து விடும். அது போன்று, புதிய துணிகளை பழைய ஆடையில் இணைப்பதில்லை. ஏனெனில் ஏற்கெனவே கிழிந்து போயிருக்கும் பாகம் இன்னும் மோசமாகி விடும். புதிய திராட்சரசங்களைப் பழைய துருத்திகளில் ஊற்றி வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் துருத்திகள் கிழிந்து போகுமென்று இயேசு கூறியிருக்கிறார். ஏனெனில் புதிய திராட்சரசத்தில் ஜீவன் உள்ளது. 236. துரிதமாக இப்பொழுது ஓர் காரியத்தை பார்ப்போம். வெளி.16:13-14. இதை குறித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயமாக இதை பிடித்துக் கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். கவனியுங்கள். இது 6-வது கலசத்திற்கும், 7-வது கலசத்திற்கும் இடையில் தொனிக்கின்றது. 237. சில நிமிடங்கள் என்னுடன் பொறுமையாயிருப்பீர்களென்றால்'' நாம் முடித்து விடலாம். 238. வெளி.16:13-14ல், ஆறாம் ஏழாம் கலசங்களின் இடையில், தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள், யாரோ ஒருவர் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்வதாக எழுதப்பட்டுள்ளது. அதை கவனித்தீர்களா-? அதற்கு நீங்கள் ஆயத்தமாய் இருக்கின்றீர்களா? அது தான் ஆவிகளின் திரித்துவம். 239. ஸ்தாபனத்தைச் சேர்ந்த என் சகோதரனே, எழுந்து போய் விடவேண்டாம். அமர்ந்திருந்து கேளுங்கள். நீங்கள் தேவனால் பிறந்தவர்களாயிருந்தால், நான் கூறுவதற்குச் செவி கொடுப்பீர்கள். 240. தவளைகளின் திரித்துவம் - தவளை எப்பொழுதும் பின்னால் பார்க்கும். அது மிருகமாயிருக்கின்றது. அது செல்லவிருக்கும் இடத்தைப் பார்க்காமல் ஏற்கனவே சென்ற இடத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும். திரித்துவம் எங்கே ஆரம்பமானது? கவனியுங்கள், மூன்று தனிப்பட்ட அசுத்த ஆவிகள் - உங்களுக்குப் புரிகின்றதா? 241. திரித்துவம் என்னும் கொள்கை பிறந்த நிசாயா ஆலோசனை சங்கத்தை அவை நோக்குகின்றன. திரித்துவம் என்பது வேதத்தில் கிடையாது. பழைய திரித்துவத்திலிருந்து திரித்துவத் தவளைகள் புறப்பட்டு சென்று புதிய திரித்துவத்தை தோன்றச் செய்கின்றன. அவைகளின் தாயார் திரித்துவமாகும். வலுசர்ப்பம், மிருகம், கள்ளத்தீர்க்கதரிசி. இத்தவளைகள் எப்பொழுது புறப்பட்டு வந்தன? அவை முன்பே இருந்தன. ஆனால் ஆறாம், ஏழாம் கலசங்களின் இடையில் முத்திரைகளின் இரகசியம் வெளிப்பட்டவுடன், இந்தத் தவளைகளும் வெளிப்படுகின்றன. ஏழாம் தூதனின் செய்தியின் நாட்களில் தேவ இரகசியம் வெளிப்படும். சத்தியத்துக்கு விரோதமான திரித்துவப் போதனை, தவறான ஞானஸ்நானம் போன்றவை. சத்தியத்தை அறிந்து கொள்ள தேவன் உதவி செய்வாராக. எவரோ ஒருவர் பிதற்றிக் கொண்டு இருக்கிறார் என்று எண்ண வேண்டாம். 242. நான் பிதற்றுவதாகக் கூறுவதை ஆவியானவர் ஆமோதிக்க வில்லை என்பதை உணருகிறேன். ஏனெனில் நான் இங்ஙனம் கூறுவது என்னைக் குறித்தல்ல. இங்கு பிரசன்னமாயிருக்கும் கர்த்தருடைய தூதனையே. 243. திரித்துவத்தைக் கவனியுங்கள்:(1). வலுசர்ப்பம். இது யாரைக் குறிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அது தான் ரோமாபுரி. ஸ்திரீ பிள்ளை பெற்றவுடன், அவள் பிள்ளையைப் பட்சித்துப்போட அவளுக்கு முன்பாக நின்ற வலுசர்ப்பம்(வெளி.12:4). (2). மிருகம். வேதத்தில் 'மிருகம்' என்னும் சொல் எதைக் குறிக்கின்றது? ஒரு வல்லமையை (அதிகாரத்தை). (3). கள்ளத் தீர்க்கதரிசி. கள்ளத் தீர்க்கதரிசி என்பவன் கள்ள அபிஷேகம் பெற்றவன். 244. இக்கள்ளத் தீர்க்கதரிசி (ஒருமை) எங்கே தொடங்கினான்? போப் முதன் முறையாக நியமிக்கப்பட்ட முதற்கு அது தொடங்கினது. அதிலிருந்து வேசிகளின் தாயும் வேசியும் தோன்றினர். 'திரித்துவம் என்னும் தவறான போதகம் அப்பொழுதே எழும்பினது. ஆனால் சபையின் ஆரம்ப காலங்களில் அதன் உண்மை வெளிப்படாது. ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டு, அதன் இரகசியம் வெளிப்பட்ட பின்னர், தவளைகளுக்கு ஒப்பான இம் மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டு வந்து தங்களை வெளிப்படுத்துகின்றன. சத்தியத்துக்கு விரோதமான திரித்துவப் போதகம். அது எங்கேயிருந்து வந்தது என்றும் அது மறுபடியும் எங்கே போகின்ற-தென்றும் நீங்கள் அறிந்து கொண்டீர்கள் அல்லவா? அது மறுபடியும் உலக சபை ஆலோசனை சங்கத்திற்கு (Ecumenical Council) செல்கின்றது. அதை சேர்ந்தவர் அனைவரும் ஒரே விதமான ஆவியைப் பெற்ற சகோதரர் அல்லவா? அது அற்புதங்களைச் செய்த போதிலும் வஞ்சிக்கிற ஆவியாய் இருக்கிறது. உலகெங்கும் சென்று, அற்புதங்களைச் செய்து, இக்கடைசி காலத்தில் ஜனங்களை ஏமாற்றும் பிசாசுகள் இவைகளே. தேவனுடைய சமூகத்துக்கு முன்னால் நின்று, தீர்க்கதரிசிகளின் வாயில் பொய்யின் ஆவியாய் நுழைந்து, ஆகாபை யுத்தத்திற்கு அனுப்பி அவனை நிர்மூலமாக்க உத்தரவு கேட்ட அந்த ஆவியைக் குறித்து வேதம் என்ன கூறுகின்றது? 245. கர்த்தர் அந்த ஆவியிடம், 'போ, நீ நிச்சயம் வெற்றி பெறுவாய். அவர்கள் பொய்யை நம்பச் செய்வாய். அவர்கள் தொடக்கத்திலிருந்தே வார்த்தையில் நிலை நிற்கவில்லை. அவர்கள் வார்த்தையைக் கற்றுக் கொள்ளவும் விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் சதாகாலமும் முட்களாகவே இருக்கின்றனர்'' என்றார். 246. இந்த தவளைகளும் பின் நோக்கியவாறே, ''நிசாயாவில் என்ன உரைக்கப்பட்டது தெரியுமா?'' என்கின்றன. அவர்கள் நிசாயாவில் என்ன தீர்மானித்தாலும் கவலையில்லை. தேவனுடைய சிங்காசனத்திலிருந்து கூறப்படுவதை மாத்திரமே நான் உங்களுக்கு எடுத்துரைக்கின்றேன். 247. நன்றாய் கவனியுங்கள். ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டு இரகசியம் வெளிப்பட்டவுடன் இது நிகழ்கின்றது. திரித்துவம் என்பது என்ன? வேதத்தில் திரித்துவத்தைக் குறித்து எங்கே கூறப்பட்டுள்ளது? எங்ஙனம் மூன்று தெய்வங்கள் இருக்க முடியும்? அவ்வாறு மூன்று தெய்வங்களை நாம் வழிப்பட்டால், நாம் அஞ்ஞானிகளாகத்தான் இருப்போம், ''நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்'' (யோவான் 10:30) என்று இயேசு கூறியிருக் கின்றாரே! அப்படியானால் அவர்கள் எப்படி வெவ்வேறு ஆட்களாக இருக்க முடியும்? ''நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள்” (யோவான் 8:24). அவிசுவாசம் தான் பாவம். உங்கள் அவிசுவாசத்திலே நீங்கள் சாவீர்கள் ''நான் யாரென்று நீங்கள் நினைக்கின்றீர்களா? நான் எங்கிருந்து வந்தேன் என்று எண்ணுகிறீர்களா? நான் எங்கிருந்து வந்தேன் என்று எண்ணுகிறீர்களா? அல்லது அவரது நாமம் என்னவென்று உங்களால் சொல்ல முடியுமா? நானே சாரோனின் ரோஜா, பிரகாசமுள்ள காலை விடிவெள்ளி'' அவர் யாரென்று உங்களால் சொல்ல முடியுமா? 'ஜூவாலித்து எரிகிற முட்செடியில் மோசேயுடன் பேசினவர் நானே. நான் ஆபிரகாமின் தேவன், பிரகாசமுள்ள காலை விடிவெள்ளி. நான் அல்பாவும், ஓமேகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். சிருஷ்டி கர்த்தர் நானே. என் நாமம் 'இயேசு'' அதுவே சரி. 248. அது திரித்துவம் அல்ல. இல்லை ஐயா! அது திரித்துவம் ஒரு கள்ளப் போதகம். சபை காலங்களின் போதும் ஸ்தாபனங்களின் போதும் மறைபொருளாயிருந்த இரகசியங்களை ஏழு முத்திரைகளின் திறக்கப்படுதல் நமக்கு வெளியரங்கம் ஆக்கின்றது. வெளிப்படுத்தல் 17-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள மகாவேசி யாரென்பதை அது நமக்கு விளக்கினது. அவளே வேசிகளுக்குத் தாய் என்பதையும் நாம் அறிந்து கொண்டோம். 249. "அவர்களை பருந்துகள்'' என்று அழைக்கின்றீரா சகோ. பிரன்ஹாமே! ஆம் அது உண்மை . பருந்து பறப்பதற்கென்று அபிஷேகிக்கப்பட்ட ஒரு பறவை என்பதை ஞாபகம் கொள்ளவும். இந்த இரு ஆவிகளும் ஒன்றைப் போல் காணப்படுவதால், கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் அது வஞ்சிக்கும். பருந்து, கழுகைப் போன்ற தேக அமைப்பைப் பெற்றுள்ளது. அது கழுகைப் போல் பறக்கக்கூடும். பறப்பதற்கென்றே அது நியமிக்கப்பட்டுள்ளது. போதனை செய்வதற்கும், தீர்க்க தரிசனம் உரைப்பதற்கும் அது அபிஷேகம் பெற்றுள்ளது. அது பார்வைக்கு கழுகைப் போல இருந்தாலும், கழுகு பறக்கும் உயரத்திற்கு அதனால் பறக்க முடியாது. அது அவ்விதம் பறக்க முயன்றால், அதன் மதிகேடு வெளிப்படும். அது, 'வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன். அவருடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்'' என்று கூறி தன் விசுவாசத்தை அறிக்கை இடும். அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர் என்பது உண்மையே. ஆனால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் (எபி.13:8) என்பதை விசுவாசிக்கின்றனரா? 250. கழுகு விசேஷமான உடலமைப்பு கொண்ட ஓர் பறவை. அது போன்ற வேறொரு பறவையை நாம் உலகில் காண்பது அரிது. ஒரு பருந்து கழுகைப் போல் உயர பறக்க விரும்பினால், அது நொறுங்கிவிடும், அப்படி செய்ய பருந்து நினைத்தால், அதன் மதிகேடு வெளிப்படும். ஏனெனில் அதன் உடலமைப்பு அதிக உயரம் பறப்பதற்கென உண்டாக்கப்படவில்லை. அதற்கென்று அது நியமிக்கப்படவில்லை, முன்குறிக்கப்படவில்லை. அது கழுகாகப் பிறக்கவில்லை. எனவே அதிக உயரம் பறந்தால் அது தூள்தூளாக நொறுங்கி விடும்; அதன் சிறகுகள் செட்டைகளிலிருந்து பிரிந்து செல்ல நேரிடும். அதன் விளைவாக அது கீழே விழுந்து நொறுங்கி விடும். 251. பருந்துக்கு கழுகைப் போன்ற பார்வையும் கிடையாது. உயரத்திலிருந்து பார்க்க முடியவில்லையென்றால், உயர பறப்பதனால் என்ன பயன்? கழுகைப் போல் அது உயர பறக்க எத்தனித்தால், அதன் பார்வை மங்கிப் போய், அது சென்று கொண்டிருக்கும் திசையை அறியாமல் போய்விடும். அது ஒருக்கால் கூச்சலிடலாம். ஆனால் தேவனுடைய வார்த்தையை அதற்குப் போதித்தால், அதன் மதிகேடு வெளிப்படும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கும் ஞானஸ்நானத்தைக் குறித்தோ, அல்லது இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று அதனிடம் கூறினால் அது ஏற்றுக் கொள்ளாது. அதன் சிறகுகள் விழத் தொடங்கி விடும். நீங்கள் மேலும் கீழுமாக குதிக்கலாம், தீர்க்கதரிசனம் உரைக்கலாம், பிசாசுகளைத் துரத்தலாம், அந்நிய பாஷை பேசலாம், தரையில் இங்கும் அங்குமாக ஓடலாம். ஆனால் கழுகு செய்வதை நீங்கள் செய்ய நினைத்தால், உங்கள் மதிகேடு வெளிப்படும். எனினும், பருந்து பறப்பதற்கென்றே அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது - நியமிக்கப்பட்டுள்ளது. அதனால் பறக்க முடியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை மாத்திரமே. அது அழுகிப் போன மாமிசத்தைத் தின்னும்; சிங்காசனத்திலிருந்து வரும் புதிய மாமிசத்தை அதனால் தின்ன முடியாது. அது குருடாயிருப்பதால், சத்தியம் என்ன என்பதை அதனால் அறிந்து கொள்ள முடிய வில்லை. அதே மழை பொழிந்து, அதே கோதுமை மணியாக்க முயற்சித்தாலும், அது ஆரம்பித்தினின்று கோதுமை மணியல்ல, அது வெடித்துவிடும், "ஓ, மேதகு ஜோன்ஸ் கூறினார்,'' என்று கூறும். சரி, நீ விரும்பினால் அவ்விதமே தொடர்ந்து செல். 252. கவனியுங்கள், அது அதற்கென்று பிறக்கவோ, கட்டப்படவோ அல்லது முன்குறிக்கவோ படாத ஒரு வகை பறவையாயிருக்கின்றது. அது ஒரு வேளை ஆரஞ்சு மரத்தில் வாழும் எலுமிச்சையாயிருக்கலாம். ஆக அது வேரில் இருந்து வரவில்லை. மாறாக அதனுடன் ஏதோ ஒன்று சேர்க்கப் பட்டதாயிருக்கின்றது. தங்கள் ஸ்தாபனங்களின் உயரத்திற்குச் சென்று நிரூபிக்கப்பட்ட தேவ வார்த்தையை பார்க்கக் கூடாமல் இருந்து அவ்விதம் உயர பறக்க முயற்சிக்கும் போது அவர்களுடைய மதிகேடு விளங்கும். அவர்கள், ''தலையைச் சுற்றி ஒளிவட்டம் (halo) காணப்பட்ட தாமே! அதெல்லாம் பொய்” என்கின்றனர். அவ்வாறு கூறுவதால், அவர்கள் யாரென்பதை பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றனர். 253. தூரப் பார்வைக்கென அவர்களின் உடலமைப்பு உண்டாக்கப்படவில்லை. ஸ்தாபனம் என்னும் கண்ணாடிகள் அனுமதிக்கும் தூரம் வரைக்குமே அவர்களால் பார்க்க முடியும். அதற்கு மேல் அவர்களால் காண முடியாது. அவர்கள் வெளவால்களைப் போல் குருடாயிருக்கின்றனர். அப்போது அவர்கள் மதிகேடு வெளியாகின்றது. ஆனால் அந்த உயரத்தில் தான் கழுகுகள் அமர்ந்து தங்கள் ஆகாரத்தைப் புசிக்கின்றன. ஆம் ஐயா, அங்குதான் தெரிந்து கொள்ளப்பட்ட உண்மையான கழுகுகள் அது என்னவென்பதைக் காணமுடிகின்றது. தேவனுடைய வார்த்தையை ஒருவன் ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவன் ஸ்தாபனங்களைச் சேர்ந்த பருந்து என்பது ருசுவாகின்றது. 254. பருந்து ஏன் உயரப் பறக்கமுடியவில்லை-? ஏனெனில் அது அழுகிப் போன ஸ்தாபன மாமிசத்தை உண்பதால், அந்த ஆகாரம் அதன் உடலை ஆவிக்கு உரியதாய் மாற்றமுடியாது; ஆவிக்குரிய பலத்தை அது அளிக்கமுடியாது. அதாவது, அது ஸ்தாபனங்களில் காணப்படும் வேறுபாடுகளைக் கடந்து அப்பால் செல்ல முடியாது. அது அழுகிப்போன பண்டங்களைத் தின்பதால் அதன் உடலமைப்பும் அதற்கேற்றவாறு அமைந்துள்ளது. கழுகுகள் புசிக்கும் புதிய மாமிசம் காணப்படும் உயரத்திற்கு அது பறக்க முடியாது. 255. மத்தேயு.24:24-ஐ இது நிறைவேறுகிறதாயிருக்கிறது. அது பறந்து குதித்து தன் சிறகுகளை அடித்தாலும் அதினால் அதிக உயரம் செல்ல இயலவில்லை. மன்னாவைப் பெற்றுக்கொள்ளும் அளவிற்கு உயர அதினால் சென்றடைய முடியவில்லை. தரையில் உள்ள பழைய மன்னாவை அதினால் உண்ண முடியும். அந்த ஆகாரம், ஒரு வாரமோ, ஒரு மாதமோ, அல்லது 40 வருடங்களோ பழையதாகி அழுகிப் போன ஆகாரமாயிருக்கும். அதை அது உண்டு கூச்சலிட்டு குதித்து, ஆடி பறந்து வேறொரு கழுகைப் போன்று தன்னை காண்பிக்க முடியும். ஏனெனில் மற்றொன்றைப் போன்று அதுவும் அபிஷேகிக்கப்பட்டுள்ளது. பருந்து கழுகைப்போன்று ஒரு வகை தான் என்று நாம் அறிவோம். ஆனால் அதனால் உண்மையான கழுகை தொடர்ந்து செல்ல முடியாது. ஏனெனில் அதன் சரீரம் அதற்காக உண்டாக்கப்பட்டதல்ல. அதின் ஆகாரத்தின் தன்மை வேறு விதமாக உள்ளது. அதன் ஆகாரம் புதிதான மாமிசமாயிராமல், புதிதான மன்னாவாயிராமல், "லூத்தர் கூறினார், வெஸ்லி கூறினார் அல்லது மேதகு இன்னார் இன்னார் கூறினார்” என்ற விதமாயுள்ளது. இயேசு இந்த மணி நேரத்தைக் குறித்து என்ன கூறினார் என்பதில் அவர்கள் சார்ந்ததில்லை. 256. நீங்கள் மத்தேயு-24:24ஐ 2-தீமோத்தேயு-3:8 உடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றேன். கடைசி நாட்களில் கள்ளக் கிறிஸ்துக்கள் கள்ளத் தீர்க்கதரிசிகள் எழும்பி, உண்மையான தீர்க்கதரிசி செய்து வரும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அவர்களும் செய்து, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிப்பார்கள் என்று இயேசு கூறினார். 257. இயேசுவுக்குப் பிறகு தோன்றின பவுல் அப்போஸ்தலனும், கடைசி நாட்களில் தெய்வ பக்தியுள்ளவர் போல் காணப்படும் மனிதர்கள் தோன்றி, தெய்வ பக்தியின் வேஷத்தைத் தரித்தவர்களாய், இச்சைகளால் இழுப்புண்ட பெண் பிள்ளைகளின் வீட்டில் நுழைந்து அவர்களை வசப்படுத்திக் கொள்வார்கள் என்று கூறினான். ''பெண் பிள்ளைகளை நீங்கள் ஏன் கடிந்து கொள்ளவேண்டும்?'' என்று அவர்கள் கேட்கின்றனர். அவர்களால் சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ''யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல் இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் துர்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாச விஷயத்தில் பரீட்சைக்கு நில்லாத-வர்கள்.'' ஒரே ஒரு விசுவாசம் தான் உண்டு (the faith), ஏதோ ஒரு விசுவாசம் (a faith) அல்ல. 'ஒரே கர்த்தர், ஒரே விசுவாசம், ஒரே ஞானஸ்நானம்'' (எபே.4:5). ஒரே தேவனில் நீங்கள் விசுவாசியாமற் போனால், ஒரே விசுவாசத்தை நீங்கள் பெற்றிருக்க முடியாது. இரண்டு ஞானஸ்நானம் இருக்கமுடியாது. ஒரே ஒரு ஞானஸ்நானம் மாத்திரமே உண்டு. அது தான் இயேகிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானம். 258. கவனியுங்கள். நீங்கள் வீடுகளுக்குச் சென்ற பின்பு இவைகளை மத்தேயு 24:24 உடன் பவுல் கூறின 2-தீமோ-3:8ஐ ஒப்பிட்டுப் பாருங்கள். 259. லூக்கா.17:30ஐயும் மல்கியா.4:5ஐயும் ஒப்பிட்டுப் பாருங்கள். யந்நேயும், யம்பிரேயும், அந்த காலத்திற்கென்று அபிஷேகம் பெற்று வார்த்தையாய் விளங்கின மோசேக்கு எதிர்த்து நின்றது போல், இவர்களும் (பன்மை -இவர் (ஒருமை) அல்ல - சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள். 260. மனுஷகுமாரன் வெளிப்படும் அதே நாளில் (வெளி.10:1-7) ஏழாம் தூதனின் செய்தி முத்திரைகளைத் திறக்கும். ஏழாம் தூதன் மனுஷகுமாரனல்ல. ஆனால் அந்த தூதன் மனுஷகுமாரனை வெளிப்படுத்துகின்றார். இவ்விருவரும் யாரென்று இப்பொழுது புரிகின்றதா? அது தான் இது வரை உங்களுக்குப் புரிந்து கொள்ள முடியாத கடினமாக செயலாய் இருந்து வருகின்றது. ஏழாம் தூதன் மனுஷகுமாரன் அல்ல; ஆனால் அவர் மக்களுக்கு மனுஷகுமாரன் யாரென்பதை வெளிப்படுத்துகின்றார். ஏனெனில் ஜீவன் பதரை விட்டு சென்று விட்டது. அது கோதுமை மணிக்குள் பிரவேசித்து விட்டது. அதை ஸ்தாபனமாகச் செய்யமுடியாது. அந்த நாளில் அபிஷேகம் பெற்ற யந்நேயும் யம்பிரேயும் (விசுவாசிகளைப் போல் பாவனை செய்பவர்கள், அவிசுவாசிகள், ஸ்தாபனங்கள், பெந்தெ-கொஸ்தே ஸ்தாபனம்) உண்மையான கோதுமை மணிக்கு விரோதமாய் நிற்பார்கள். அவர்களை விட்டு விடுங்கள். அவர்களுடைய மதிகேடு வெளியாகும். இப்பொழுது உங்களுக்குப் புரிகின்றதா? 261. ஏழாம் தூதன் ஏழாம் சபையாகிய லவோதிக்கேயா சபையின் காலத்தில் முழக்கமிடும் போது... (சபை ஸ்தாபனமாக மாறி, பெந்தெகொஸ்தரும் ஒரு ஸ்தாபனமாக ஆன போது, தூதனின் சத்தம் முழங்கினது). ஏழாம் தூதனின் முழக்கம் அந்தக் காலத்துக்குக் கண்டனமாக அமைந்திருக்கும். அவ்வாறே மார்டின் லூதரின் முழக்கம், அவர் காலத்திலிருந்த கத்தோலிக்கர்க்கும், வெஸ்லியின் முழக்கம், அந்த காலத்திலிருந்த லூத்தரன்களுக்கும் கண்டன-மாக அமைந்திருந்தன. பெந்தெகொஸ்தேயினரும், அவர்கள் காலத்திலிருந்த விசுவாசியாதவர்களுக்குக் கண்டனமாக அமைந்திருந்தனர். இப்பொழுது ஜீவன் எங்கு சென்றுள்ளது? அது ஸ்தாபனங்களை விட்டு புறம்பே சென்று விட்டது. அது இப்பொழுது பதரினுள் இல்லை. அது கோதுமை மணிக்குள் இருக்கின்றது. இந்த கோதுமை மணி பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்திற்குக் கண்டன மாக அமைந்துள்ளது. 262. இந்த ஏழாம் தூதன் அவனுடைய செய்தியைப் பிரசங்கிக்கும் போது... பாருங்கள், முதலாம் இழுப்பு- தெய்வீக சுகம் அளித்தல். இரண்டாம் இழுப்பு -தீர்க்கதரிசனம் உரைத்தல், மூன்றாம் இழுப்பு வேதத்திலுள்ள இரகசியங்-களை வெளிப்படுத்துதல். வார்த்தையின் இரகசியங்களை வெளிப்படுத்த தீர்க்கதரிசிகளைக் காட்டிலும் மேலானவர் யாருமில்லை. தீர்க்கதரிசியும், தேவனுடைய வார்த்தையின் மூலமாகவே நிரூபிக்கப்படுவான். மூன்றாம் இழுப்பு என்பது, வேதத்தில் முத்திரை செய்யப்பட்டு, ஏழு முத்திரைகளின் கீழ் இதுகாறும் மறைக்கப்பட்டிருந்த இரகசியங்களை வெளிப்படுத்தலாகும். இது நிறைவேறும் அந்நாளில், மோசேயின் காலத்தில் நிகழ்ந்தது போல், பாவனை செய்பவர்களாகிய யந்நேயும் யம்பிரேயும் மறுபடியும் தோன்றுவார்கள். 263. நான் முடிக்கும் முன்பு, மூன்று காரியங்களைக் கூற விரும்புகிறேன். மூன்று காரியங்கள் ஏற்கனவே நிகழ்ந்து விட்டன. வேறு மூன்று காரியங்கள் இப்பொழுது உங்கள் முன்னால் கிடத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. 264. முதலாவதாக: உலகம் இப்பொழுது சோதோமின் நிலையில் உள்ளது. அது அந்நிலைக்கு வரும் என்று இயேசு கூறி உள்ளார். உலகத்திலுள்ள மாறுபாடுகளைப் பாருங்கள். பெண்கள் ஆண்களைப் போன்றும், ஆண்கள் பெண்களைப் போன்றும் தோற்றமளிக்க விரும்புகின்றனர். ஆண்கள் பெண்ணின் தன்மையைப் பெற்று பிசாசு பிடித்தவர்களாய் மோசமான நிலையை அடைந்து உள்ளனர். ஆனாலும் அவர்கள் அதை அறியாமல் இருக்கின்றனர். 265. இரண்டாவதாக: தேவனுடைய வார்த்தை உரைத்துள்ளபடி, யந்நேயும் யம்பிரேயும் தோன்றுவார்கள். 266. மூன்றாவதாக: இந்த சமயத்தில் தான் மனுஷகுமாரன் வெளிப்படுவார். 267. விசுவாசிகள், விசுவாசிகளைப்போல் பாவனை செய்பவர்கள், அவிசுவாசிகள் இம்மூன்று தரத்தாரும் நம்மிடையே காணப்படுகின்றனர். தேவனுடைய உண்மையான வார்த்தை இப்பொழுது உறுதிப்பட்டு வருகின்றது. விசுவாசிகளைப்போல் பாவனை செய்கிறவர்களோ இச்செயல்களைப்பாவனை செய்து வருகின்றனர். அவிசுவாசிகள் இதை முற்றிலும் நிராகரிக்கின்றனர். ''ஆனால் சாயந்திர நேரத்தில் வெளிச்சம் உண்டாகும் மகிமையின் வழியை நீ நிச்சயம் கண்டுகொள்வாய்'' இராஜ்ஜியங்கள் உடைகின்றன இஸ்ரவேல் உயிர் பெற்றெழுகின்றது இது வேதம் கூறின அடையாளம் புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டு விட்டது (சோதோம்) அம்புகள் தொடுக்கப்பட்டாயிற்று சிதறி போனவளே உன் சுதந்திர வீதத்திற்குத் திரும்பு மீட்பின் நாள் சமீபமாயிற்று பயம் மனிதனின் இருதயத்தை சோரப் பண்ணுகிறது தேவ ஆவியினால் நிரப்பப்பட்டு, உன் விளக்கை ஆயத்தம் செய் அப்பொழுது தான் மணி நேரத்தின் வார்த்தையை உன்னால் பார்க்க முடியும்.) மேல் நோக்கிப் பார், உன் மீட்பு சமீபமாயிற்று! கள்ளத் தீர்க்கதரிசிகள் பொய்களை பேசுகின்றனர் (அபிஷேகம் பெற்றவர் இங்கிருப்பார்கள் எனக்கூறப்பட்டுள்ளது) தேவ சத்திய-மான இயேசுவே, கிறிஸ்துவும் நமது தேவனுமாயிருக்கிறார் என்பதை மறுதலிக்கின்றார்கள். அதை அவர்கள் விசுவாசிக்கவில்லை. அவ்விதமாக இருக்கும் என வேதம் கூறுகின்றது. ஆனால் நாமோ, அப்போஸ்தலர் பாதையில் நடப்போம் (அதே வெளிச்சம்! பிள்ளைகளின் இருதயத்தை அவர்கள் பிதாக்களுக்கு திருப்புதல்) மீட்பின் நாள் சமீபமாயிற்று பயம் மனிதனின் இருதயத்தை சோர செய்கின்றது (பூமியானது சிதைந்துக் கொண்டிருக்கின்றது) ஓ! தேவ ஆவியினால் நிரப்பப்பட்டு உன் விளக்கை ஆயத்தம் செய் மேல் நோக்கிப் பார், உன் மீட்பு சமீபமாயிற்று! அதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? இப்பொழுது நாம் தலை வணங்குவோம். 268. செய்தியானது கிழக்குக் கரையிலிருந்து மேற்கில் உள்ள நாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது. நம்மால் இயன்றதை நாம் செய்து வருகிறோம். "பிதாவானவர் எனக்குத் தந்த யாவும் என்னிடத்தில் வரும்.'' 269. என்னைக் குறித்து நான் பேசிக் கொண்டேன் என்று நீங்கள் ஒருக்கால் நினைக்கலாம். நான் ஒரு சத்தமாக இருக்க விரும்புகிறனேயன்றி, அதற்கும் எனக்கும் வேறெந்த தொடர்புமில்லை. நான் மிருகங்கள் பிடிப்பவனாக (trapper) ஆகவே விரும்பினேன். ஆனால் நான் இவ்விதம் இருக்க வேண்டுமென்று பிதாவானவர் சித்தம் கொண்டார். எனவே நான் இதைத் தெரிவிக்கிறேன். இதை நான் அறிவிக்கத் தீர்மானித்து விட்டேன். அந்த நதியினிடத்தில் பிரத்தியட்சமானவர் நானல்ல. அவர் பிரத்தியட்சமாகும் போது நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். இந்த அற்புதங்களையெல்லாம் செய்பவன் நானல்ல. வரப்போகும் காரியங்களைப் பிழையின்றி அறிவிப்பவன் நானல்ல. அவர் இத்தகைய செயல்களைப் புரியும்போது, நான் அவரருகில் இருக்கிறேன். அவர் என்னைத் தம்-சத்தமாக உபயோகித்து வருகிறார். என் மூலம் அவர் பேசுவதற்கென என்னை நான் அவருக்கு முற்றிலுமாக அர்ப்பணித்து விட்டேன். அது ஏழாம் தூதனல்ல! அது மனுஷகுமாரன் வெளிப்படுதலாகும். அது தூதனல்ல, மறைபொருளாயிருந்த தேவனுடைய இரகசியம் வெளிப்படுதல் ஆகும். அது மனிதனல்ல, அது தேவன். தூதன் மனுஷகுமாரனல்ல, ஆனால் அவரால் அனுப்பப்பட்ட தூதன். மனுஷகுமாரன் என்னப்படுவது கிறிஸ்து. அவரைத் தான் நீங்கள் புசித்து வருகின்றீர்கள். நீங்கள் மனிதனின் வார்த்தையைப் புசிக்கவில்லை. மனிதனின் வார்த்தைகள் தவறுதலாகிப் போக ஏதுவுண்டு. ஆனால் நீங்களோ என்றென்றும் தவறாத மனுஷ குமாரனின் சரீரமாகிய வார்த்தையைப் புசித்து வருகின்றீர்கள். 270. இதுவரை நீங்கள் அவருடைய வார்த்தையை முற்றிலும் புசியாமல் இருந்து, உலகத்தின் காரியங்களையும் ஸ்தாபனங்களையும் விட உயரப் பறக்காமலிருந்தால், இப்பொழுதே நாம் ஜெபிக்கையில், அதை செய்யப் போகிறேன். நாம் ஜெபிப்போம். 271. அன்புள்ள பிதாவே, இது மிகவும் கடினமானக் காரியம். ஒரு மானிடன் செய்யக் கூடிய சுலபமான காரியமல்ல இது. நீர் எல்லாவற்றையும் அறிந்து இருக்கிறீர். இது தவறாக புரிந்து கொள்ளப்படக் கூடாது என்று நான் ஜெபிக்கிறேன். அன்பின் பிதாவே, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் ஜனங்கள் நடக்கட்டும். 272. பிதாவாகிய தேவனே, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் யாரென்பது எனக்கு தெரியாது. ஆனால் நீர் அதை அறிவீர். உம் வருகை எப்பொழுது என்பதை நானறியேன். ஆனால் இந்த தவறான அபிஷேகம் பெற்றவர் வர ஆரம்பிக்கும் போது என்று நீர் கூறினீர். மோசே அவர்களை தனியே விட்டுவிட்டான். நீர் என்ன கூறினீரோ அதிலே மட்டும் நிலைத்திருந்தான். வண்டுகளை அழைக்கக்கடவாய் என்று நீர் அவனிடம் கூறினீர்; அவர்களும் அதை செய்தார்கள்; தண்ணீரை இரத்தமாக்கக்கடவாய் என்று நீர் அவனிடம் கூறினீர்; அதையும் அவர்கள் செய்தனர். வார்த்தையின் பின் வார்த்தையாக மோசே நீர் சொன்னபடி செய்தான். ஆனால் அவர்களுடைய மதிகேட்டை விளங்கச் செய்தவர் நீர் ஒருவர் தான். 273. பிதாவே, இன்றும் நீரே தேவனாயிருக்கின்றீர். உம்முடைய இதே வார்த்தை கடைசி நாட்களில் இவ்விதமாக நடக்கும் என்று கூறுகின்றது. அநேக நல்ல மனிதர்கள், லேவியர்களின் தோள்கள் மேல் சுமக்கப்படாமல், புது வண்டியில் வைக்கப்பட்ட உடன்படிக்கை பெட்டியின் மேல் தங்கள் கரங்களை வைத்து தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக நடந்து, பாவத்தில் மரித்துக் கிடக்கின்றனர். 274. அநேக ஊழியக்காரர் இதை ஆராய்ந்து வார்த்தையை படித்து ஜனங்களின் முன்னாலும், சபை ஸ்தாபனங்களின் முன்னாலும், தங்களின் சமுதாய புகழ்ச்சியை இழந்து விடுவார்களோ என்று அறிந்து இதை தள்ளி விடுகின்றார்கள். அவ்விதமாக செய்யாமலிருக்க தேவனே உதவி செய்யும். 275. உலகத்தின் அசுத்தங்களை எங்கள் இருதயங்களினின்று கழுவி விடும். நான் அவ்விதமாக கழுவப்படுவதற்கு ஆயத்தமாயுள்ளேன். இந்த ஒலி நாடாக்களை கேட்டவர்களோடும், இதை யார் யார் கேட்கின்றார்களோ அவர்களோடும் இந்த சபையோடும் நான் ஆயத்தமாய் நிற்கிறேன். நீர் விரும்புகிறபடி நான் இருக்க என்னை குயவனின் களத்திற்கு கொண்டு சென்று வனையும். கர்த்தராகிய இயேசுவே, அசுத்த உதடுகளுள்ள மனிதன் நான், அசுத்தமான ஜனங்களின் மத்தியில் வாசம் செய்கிறேன். தேவனுடைய வெளிப்பாட்டை நான் கண்டேனே, எனக்கு ஐயோ என்று ஏசாயா தேவ தூதர்களை ஆலயத்தில் கண்ட போது கதறினான். ஓ, நித்திய பிதாவே, எங்கள் மேல் கிருபையாயிரும். நான் முடிவின் காலத்தை பார்க்கிறேன். எனக்கும் என் குடும்பத்துக்கும் ஐயோ, எனக்கும் என் ஜனங்களுக்கும் ஐயோ, எனக்காகவும், என் ஜனங்களுக்காகவும் நான் மன்றாடுகிறேன். விசுவாசிப்பவர் களோடு நாங்கள் வாழச் செய்யும். 276. ஸ்தாபனங்களை ஆசீர்வதிக்க நான் உம்மை கேட்கவில்லை. ஏனெனில் நீர் அதற்கு விரோதமாயுள்ளீர். ஆனால் கர்த்தாவே, உம்முடைய ஆடுகள் அவர்கள் மத்தியில் இருப்பார்களாயின் அவர்கள் இந்த ஒலிநாடாவை கேட்டு புரிந்து கொண்டு வெளி வந்து உம்மை பெற்றுக் கொள்ளட்டும். இந்த நாளின் பாரம்பரியத்தினால் அவர்கள் குருட்டாட்டத்தினால் வஞ்சிக்கப்படாமலிருக்கச் செய்யும். வேறொரு நாளின் பிணத்தை அவர்கள் புசிக்க முயற்சி செய்யாமல் இருக்கட்டும். பரிசேயர் அந்த விதமாகத்தான் உம்மை சிலுவையில் அறைந்தார்கள். வனாந்திரத்தில் ஒவ்வொரு இரவும் புதிய மன்னா என்ற உதாரணத்தை நீர் கொடுத்திருந்தும், அவர்கள் மோசேயின் நாளின் பிணத்தைத் தின்ன முயற்சித்தார்கள். ஒவ்வொரு இரவும் என்பது ஒவ்வொரு தலை முறையும் என்ற உதாரணத்தை நீர் கொடுத்திருந்தும் அவர்கள் மோசேயின் நாளின் பிணத்தைத் தின்ன முயற்சித்தார்கள். ஒவ்வொரு இரவும் என்பது ஒவ்வொரு தலைமுறையும் என்ற உதாரணத்தை நீர் காட்டியிருந்தீர். ஆவிக்குரிய பிரகாரமாக இன்றும் அவ்விதமாகவே உள்ளது. அது ஸ்தாபனம் என்றக் காரியத்தின் மூலம் ஆவிக்குரியப் பிரகாரமாக கொல்கின்றது. உதவி செய்யும் பிரியமான தேவனே எல்லாம் உம் கரத்தில் இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். 277. நம் தலைகள் வணங்கியிருக்கும் நிலையில் நீங்கள் தீர்மானம் எடுக்கத்-தக்கதாக இருக்கும் வேளையில் நாம் இப்பொழுது பாடப் போகிறோம். என் மீட்பர் என்னை அழைப்பதை கேட்க முடிகிறது (அவரே வார்த்தை) "ஓ, நான் அதிக நாட்கள் அலைந்து திரிந்து விட்டேன் முடிவாக, அவர் என்னை அழைப்பதை கேட்க முடிகிறது கதறுபவர்களே, கேட்டு உங்கள் சிலுவையை எடுத்து பின்பற்றுங்கள் என்னை தினமும் நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் நான் தீங்கிற்கு அஞ்சேன். புல்லுள்ள இடங்களில் அவர் என்னை மேய்த்து அமர்ந்த தண்ணீர்களண்டையில் நடத்துகிறார். அவர் என்னை நடத்தும் பாதை நான் செல்வேன் ''கர்த்தாவே, திரித்துவக்காரரின் மதிகேடை நான் காண்கிறேன். உலகமெங்கும் அது விதைக்கப்பட்டுள்ளது. களைகள் எங்கும் உள்ளன. நீர் என்னை எங்கு நடத்துகிறீரோ அங்கு வருவேன். கர்த்தாவே, அப்போஸ்தலர், 19ல் அவர்கள் அதைக் கேட்டபோது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றனர். அவர்களை போல நான் இருக்க விரும்புகிறேன். இப்பொழுது நான் அவர் வழி செல்வேன். 278. பிரியமான தேவனே, அது என் இருதயத்தினின்று வருகிறது என்பதை நம்புகிறேன். இங்கு இருப்பவர்கள் அல்லது இல்லாதவர் அல்லது இப்பொழுது கேட்காதவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் இந்த ஒலிநாடாவை கேட்கும் போது அவர்கள் ஒவ்வொருவர் இருதயத்தினின்றும் இது வரவும், கீதமாக இசையப்படவும் செய்யும். கர்த்தாவே, ஒரு மனிதன் இன்னொரு ராஜாவை சந்திக்க செல்லும் முன்பு, அதன் தார்பரியத்தை உணர்ந்து கணக்கு பார்த்து தன்னிலுள்ள உலகத்தையெல்லாம் துறந்து அவனிடம் சமாதானம் அடைவது போன்று நாங்களும் விலை எவ்வளவானாலும் எல்லாவற்றையும் விட்டு எழுதப்பட்ட வார்த்தை என்னும் தேவ சேனையுடன் சேர்ந்து உம்முடைய கழுகுளோடு பறந்து செல்ல வாஞ்சையுள்ளவர்களாக்கும். அருளிச் செய்யும் கர்த்தாவே, இயேசுவின் நாமத்தில். 279. நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? அவரை ஏற்றுக் கொள்கிறீர்களா? சரி. கர்த்தருக்குச் சித்தமானால் இன்று இரவு மீண்டும் நாம் சந்திப்போம். இது சத்தியம் என்று விசுவாசிக்கிறீர்களா? (சபையார் - ஆமென் என்று கூறுகின்றனர்) அது மிகவும் தெளிவாயுள்ளதா? (ஆமென்) அழுகையும் துக்கமுமான பிள்ளையே இயேசுவின் நாமத்தை உன்னோடு எடுத்துச் செல் அது உனக்கு இன்பத்தையும், இளைப்பாறுதலையும் தரும் இப்பொழுது ஒருவரையொருவர் வாழ்த்துங்கள். விலையேறப் பெற்ற நாமம் அதின் நாதம் இனிமை! பூமியின் நம்பிக்கையே, பரலோக இன்பமே விலையேறப் பெற்ற நாமம், அதின் நாதம் இனிமை! எங்கள் யாத்திரை முடிந்த பின் ராஜாதி ராஜா என்று அவரை முடிசூட்டுவோம் விலையேறப் பெற்ற நாமம், அதின் நாதம் இனிமை! பூமியின் நம்பிக்கையே, பரலோக இன்பமே, 280, இங்குள்ள எல்லா ஊழியக்காரரும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர் என நான் நினைக்கின்றேன். “சுவிசேஷத்தை பிரசங்கியாதிருந்தால் எனக்கு ஐயோ'' என்று பவுல் கூறினார். ஊழியத்தின் முடிவில்; "தேவனுடைய முழு ஆலோசனைகளையும் நான் உங்களுக்கு கொடுத்தேன்” என்று பவுல் கூறினார். நானும் அவ்விதமே வாரமெல்லாம் ஜெபித்து, இது என்னவென்று ஆச்சரியத்துடன் இந்த வசனங்களைப் பார்த்து உங்கள் முன்னால் நிற்கின்றேன். 281. குழந்தைகளை பிரதிஷ்டை செய்தல் போன்ற காரியங்களை அநேக சமயங்களில் நான் மறந்து விடுகிறேன். ஒரு மனிதன் என் மகன் பில்லியினிடம் வந்து, "என்னுடைய குழந்தையை பிரதிஷ்டைச் செய்ய இரண்டு வருடங்களாக வந்து கொண்டிருக்கிறேன்'' என்று கூறினார். அதற்கு பில்லி, 'அதைக் குறித்து தவறாக நினைக்க வேண்டாம். ஒரு வயதான குழந்தை என்னிடம் உண்டு, நானும் கூட இன்னுமாக அதை பிரதிஷ்டை செய்ய முடியவில்லை. ஒரு வேளை அக்குழந்தை தானாகவே நடந்து இங்கு வரும் வரை நான் அதற்காக காத்திருக்கப் போகிறேனோ'' என்று நினைக்கிறேன் என்றான். 282. ஆகவே, சகோதர சகோதரிகளே, நாம் நிச்சயமாக நம் பிள்ளைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும். இங்கு தண்ணீர் தொட்டி இருக்கின்றது. நாங்கள் ஒவ்வொருவரையும் ஞான ஸ்நானம் செய்வோம். எது உங்களை தடை செய்கின்றது. இன்று இரவு வரை தள்ளிப் போட வேண்டாம். இப்பொழுதே வாருங்கள். தங்கள் பாவங்களை அறிக்கைச் செய்து மனந்திரும்பினவர்களை ஞானஸ்நானம் செய்ய ஒருவர் இங்கிருக்கின்றார். உங்கள் பாவ மன்னிப்பிற்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்கள் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்கள். 283. செய்தியானது என் இருதயத்தில் மேல் உள்ளது? அதை நான் வெளிக் கொண்டு வரத்தான் வேண்டும். மனைவியோ, பிள்ளைகளோ, மேய்ப்பனோ அல்லது யார் என்னக் கூறினாலும் அதை கூறுவது தான் என் நோக்கமாய் உள்ளது. ஏனெனில் அவர் என் கர்த்தராயிருக்கின்றார். 284. அநேக நேரங்களில் நான் ஊழியக்காரரை மறந்து போகிறேன். நமது சகோதரன் நெவில் ஒரு விலையேறப் பெற்ற நபர். அந்த அநேக சகோதரர்களும் நம் மத்தியிலிருப்பதற்காக நான் மகிழ்ச்சியுறுகிறேன். 285. இங்குள்ள அநேகர் திரித்துவ பிரசங்கிகளாக இருக்கக் கூடும். நாங்கள் உங்களோடு ஒவ்வாமல் இருக்க நினைப்பதில்லை. நாங்கள் உங்களிடம் கோபமாயும் இல்லை, மாறாக உங்களை நேசிக்கிறோம். அவ்விதம் நான் இல்லை என்றால் என் முழங்காலை நான் முடக்கி, “தேவனே, என்னை சரி செய்யும்” என்று கதறுவேன். முரட்டுத்தனமாக சுயநல ஆவி என்னுடன் கலந்திருக்க நான் விரும்பவில்லை. மாறாக பரிசுத்த ஆவியுடன் சகோதர பரிசுத்த அன்புடன் என் ஆவி இருக்க விரும்புகிறேன். எனக்கு விரோதமாக யாராகிலும் ஏதேனும் செய்தால் அதைக் குறித்து பரவாயில்லை. நான் அன்பாக இருக்க விரும்புகிறேன். அன்பிலே திருத்தப்பட ஆயத்தமாயுள்ளேன். ஏனெனில் அன்பு தான் மறு கரையில் எல்லாவற்றிற்கும் பதிலாயிருக்கப் போகின்றது. 286. மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்ட், கத்தோலிக்கம், பிரஸ்பிடேரியன் யாராய் இருந்தாலும் உங்களோடு வித்தியாசமாக நான் இருக்க நோக்கம் கொள்ள-வில்லை. உங்களோடு முரட்டுத்தனமாக இருப்பதற்கு நான் இதைக் கூறவில்லை. அவ்விதமாக நான் செய்வேனாகில் நான் ஒரு மாய்மாலக்-காரனாயிருந்து பீடத்தண்டை ஜெபத்திற்காக வரவேண்டியவனாய் இருப்பேன். நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை என்னால் காண முடிகின்றபடியினால், அன்பின் காரணமாகவே நான் அதை கூறுகின்றேன். நானாக இதை யூகித்தும் சொல்கிறதில்லை. ''கர்த்தர் சொல்லுகிறதாவது' என்பதை நான் கூறுகிறேன். அது தான் உண்மை. அக்காரியங்களுக்காக உங்களை நேசிக்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 287. நாம் போகும் முன்பு இந்த பாடலின் அடுத்த கவியை பாடுவோம். உங்களால் முடிந்தால் இன்றிரவு நாம் சந்திப்போம். முடியவில்லையென்றால், நாம் மீண்டும் சந்திக்கும் வரை கர்த்தர் உங்களோடு இருப்பாராக. கர்த்தர் தேசத்தின் நலனை உங்களுக்குக் கொடுக்க நாங்கள் ஜெபிக்கிறோம். 'இயேசுவின் நாமத்தை எடுத்துச் செல்லுங்கள்...''